lingam saivasiddhantam natarajar science siva

நன்கொடை - கோயில் தீபம்

For Donation

Bank Details:
Name:

Mangayarkkarasiyar Arutpani Arakkattalai
Bank & Branch:
State Bank of India, Coimbatore Main Branch.
A/c No: 33072818428
RTGS: SBIN0000827

 

நமசிவாய வாஅழ்க
“விளக்கிட்டார் பேறு சொல்லின் மெய்நெறி ஞானமாகும்.”

திருவுடையீர், 

   விளக்கு என்றால் இருளை நீக்கி பொருளை காட்டுவது என்று பொருள். உலகத்தில் உள்ள புற இருளை நீக்குவது சூரியன் என்கிற விளக்கு. இல்லத்தில்  உள்ள இருளை நீக்குவது திருவிளக்கு  நம்முடைய அறிவில் கலந்துள்ள அறியாமை ஆகிய அக இருளை நீக்கி மெய்ப்பொருளை காட்டுவது நமசிவாய என்னும் ஐந்து எழுத்து ஆகிய விளக்கு  என்பதை  “இல்லக விளக்கது இருள் கெடுப்பது….. நல்லக விளக்கது  நமசிவாயவே” என்று திருநாவுக்கரசர் அருளியுள்ளார். 
      நாயன்மார்கள் அறுபத்து மூவரில் திருவிளக்கு ஏற்றி சிவபெருமான் திருவருள் பெற்றவர் பலர். திருமறைக்காடு (வேதாரண்யம்) எனும் திருத்தலத்தில் எரிகின்ற திருவிளக்கின் திரியை ஒரு எலி அறியாமல் தூண்டிட அதை அடுத்த பிறப்பில் மாபலி சக்ரவர்த்தியாக பிறக்கச் செய்தார்.

“நிறை மறைக்காடு தன்னில் நீண்டு ஏறி தீபம் தன்னைக் 
கறை நிறத்து எலி தன் மூக்குச் சுட்டிடக் கனன்று தூண்ட 
நிறைகடல் மண்ணும் விண்ணும் நீண்டவான் உலகம் எல்லாம் 
குறைவறக்  கொடுப்பார்போலும் குறுக்கை வீரட்டனாரே.” 

- திருநாவுக்கரசர்

      ஏறத்தாழ 1200 ஆண்டுகளுக்கு முன் திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர் ஆகிய   மூவரால் பாடல் பெற்ற திருத்தலங்கள் 276. இவற்றில் 190 திருத்தலங்கள்  சோழநாட்டில் உள்ளது. இவற்றில் திருவிளக்கு ஏற்றுவதற்கு கூட வாய்ப்பு இல்லாத திருத்தலங்களில் திருவிளக்கு ஏற்ற திருவருள் இதன் மூலம் கூட்டியுள்ளது. 
      ஒரு திருத்தலத்திற்கு ஒரு வருடத்திற்கு விளக்கு ஏற்ற மாதம் ரூபாய் 2000/- வீதம் வருடத்திற்கு ரூபாய் 24000/- ஆகிறது.
      தங்களின் பிறந்தநாள்/திருமண நாள் அன்று தங்களின் விருப்பத்திற்கு இணங்க வருடம் ஒரு கோவிலுக்கு நிதி அளிக்க விரும்புபவர்கள்  ரூபாய் 24000/- அல்லது மாதம் ரூபாய் 2000/- அல்லது குறைந்த பட்ச தொகையாக ரூபாய் 1000/- நிதி வழங்கி உலகத்து உயிர்கள் எல்லாம் இன்பம் பெருக பாடல் பெற்ற திருத்தலங்களில் திருவிளக்கு ஏற்றும் தெய்வத் திருப்பணியில் இணைந்து பணி செய்திட அன்புடன் அழைக்கிறோம். 
      உம் அன்பினோடு எம் அன்பு கொண்டு தீபம் ஏற்றுவோம், தீமையை நீக்குவோம், திருவருள்பெறுவோம்.தாங்களும் தங்கள் குடும்பமும் மண்ணில் நல்ல வண்ணம் வாழ எல்லாம் வல்ல எம்பெருமான் ஈசன் திருவடியை சிந்திக்கிறோம் .

தங்களுடைய நிதியை கீழ் கண்ட வங்கி கணக்கில் செலுத்தலாம்

Bank Details:
Name                : Mangayarkkarasiyar Arutpani Arakkattalai
Bank & Branch : State Bank of India, Coimbatore Main Branch
A/c No              : 33072818428
RTGS               : SBIN0000827

என் கடன் பணி செய்து கிடப்பதே

               இறை பணியில் - அரன் பணி அறக்கட்டளை, கை பேசி: 98424 22222






bot About Us | Policy | Contact Us | ©2017 Saiva Siddhanta
Back to Top