lingam saivasiddhantam natarajar science siva

Daily Reading / Prayers

தினம் ஒரு திருக்குறள்

பால்: பொருட்பால், இயல்: அரணியல், அதிகாரம்: 74. நாடு

குறள்: 732

பெரும்பொருளால் பெட்டக்க தாகி அருங்கேட்டால்
ஆற்ற விளைவது நாடு.

Couplet: 732

File Not Found

!

File not found (404 error)

If you think what you're looking for should be here, please contact the site owner.

பரிமேழலகர் உரை:

பெரும்பொருளால் பெட்டக்கது ஆகி - அளவிறந்த பொருளுடைமையால் பிற தேய்த்தாரானும் விரும்பத் தக்கதாய்; அருங்கேட்டால் ஆற்ற விளைவது நாடு - கேடின் மையோடுகூடி மிகவிளைவதே நாடாவது. (அளவிறப்பு, பொருள்களது பன்மைமேலும் தனித்தனி அவற்றின் மிகுதி மேலும் நின்றது. கேடாவது, மிக்க பெயல், பெயலின்மை, எலி, விட்டில், கிளி, அரசண்மை என்றிவற்றான் வருவது. 'மிக்க பெயலோடு பெயலின்மை எலி விட்டில்கிளி அக்கண்அரசண்மையோடு ஆறு.' இவற்றை வடநூலார் 'ஈதிவாதைகள்' என்ப. இவற்றுள் முன்னையவற்றது இன்மை அரசன் அறத்தானும், பின்னையது இன்மை அவன் மறத்தானும் வரும். இவ்வின்மைகளான் மிக விளைவதாயிற்று.) ---

மு.வ உரை:

மிக்க பொருள்வளம் உடையதாய், எல்லாரும் விரும்பத்தக்கதாய், கேடு இல்லாததாய், மிகுதியாக விளைபொருள் தருவதே நாடாகும்.

G.U.Pope:

That is a 'land' which men desire for wealth's abundant share,
Yielding rich increase, where calamities are rare.

Explanation

A kingdom is that which is desire for its immense wealth, and which grows greatly in prosperity, being free from destructive causes.


bot About Us | Policy | Contact Us | ©2023 Saiva Siddhanta
Back to Top