சைவ சித்தாந்தத்தை தொடக்கத்தில் இருந்து பயில விரும்பும் மாணவர்கள் சில சித்தாந்த சொற்களுக்கு பொருள் அறிவது சிறந்தது.
As a enthustatic beginer of saivasiddhanta philosophy its better to know some basic definitions of siddhanta terms
உயிர்கள் /Soul
அறியும் தன்மை உடையது உயிர். உயிர்கள் எண்ணிறந்தனவாய் உள்ளன. அவை ஒரு காலத்தில் தோன்றியன அல்ல; இறைவனால் படைக்கப்பட்டனவும் அல்ல; இறைவன் என்று உண்டோ அன்றே அவையும் உள்ளன. தோற்றம் இல்லையாதலால் அவற்றிற்கு அழிவும் இல்லை. எனவே உயிர்கள் என்றும் உள்ளவையாகும்.
ஆணவம்
அத்தகைய உயிர்களிடம் அவற்றை மறைத்து நிற்பதாகிய ஓர் அழுக்கு இயற்கையாகவே உள்ளது. அரிசியை உமி மூடி மறைத்திருப்பதை போன்றது இது. அரிசி உள்ள அன்றே உமியாகிய குற்றமும் அதனுடன் பொருந்தியிருப்பதைப் போல உயிர்கள் உள்ள அன்றே அவ்வழுக்கும் உடனாய் உள்ளது அதனை ஆணவ மலம் என்ற பெயரால் குறிப்பர். மலம்–அழுக்கு.
உயிர்கள் முதற்கண் ஆணவ மலத்தோடு கூடியே இருந்தன. அது கேவல நிலை எனப்படும். அந்நிலையில் உயிர்கள் அறிவும் செயலும் இன்றித் தாயின் கருப்பையில் கிடக்கும் அறிவற்ற கண்ணிலாக் குழவியைப் போல முழு அறியாமையில் மூழ்கிக் கிடந்தன.
மாயை:
இவ்வாறு ஆணவ மலத்தால் மறைப்புண்டு அதனால் அறியாமை எய்தித் துன்புறும் உயிர்களின் நிலை கண்டு இரங்கிய இறைவன் அம்மலத்தை நீக்குதற்குத் திருவுளம் கொள்கிறான். அதன் பொருட்டு அவ்வுயிர்களை உலக வாழ்விற் செலித்துகிறான்; அவை தங்குவதற்கு உடம்பையும், அறிவதற்கு ஐம்பொறி முதலிய கருவிகளையும், இயங்குவதற்கு உலகத்தயும், நுகர்வதற்கு உலகப் பொருள்களையும் படைத்துக் கொடுக்கிறான்.
குடமாகிய காரியத்தைக் குயவன் களிமண்ணிலிருந்து செய்வது போல உடம்பு முதலிய இக்காருயங்களை இறைவன் மாயை என்னும் மூலப்பொருளிலிருந்து உண்டாக்குகிறான். அம் மாயை என்னும் பொருளும் என்றும் உள்ளதேயாம்.
அணவ மலத்தோடு கூடியுடுந்த உயிர்கள் இப்போழுது மாயையோடும் கூடி நிற்கின்றன. இதுதான் பிறப்புநிலை, சகல நிலை என்று கூறப்படும்.
இந்நிலையில் உயிர்கள் உடம்பாலும், உடம்பில் அமைந்த கருவிகளாலும், வாழ்க்கைச் சூழலாலும் ஓரளவு அறியாமை நீங்கி அறிவு விளக்கம் பெற்று வருவதைக். எனவே இவ்வுலகம் என்பது அறிவை வளர்க்கும் பள்ளிக்கூடம் போல்வது எனலாம்.
கன்மம்:
அறிவும் செயலும் இன்றிக் கிடந்த கேவல நிலையினின்றும் இறையருளால் சகல நிலைக்கு வந்த உயிர்கள் சிற்றிவும் சிறு தொழிலும் உடையனவாய், தம் மனம் மொழி மெய்களினால் நல்லனவும் தீயனவும் ஆகிய செயல்களைச் செய்கின்றன.அவையே கன்மம் எனப் பெயர் பெருகின்றன.
இறைவன் அவ்வவ்வுயிர்கள் செய்த கன்மத்திற்கு ஏற்ப அவற்றிகுப் பிறப்புக்களையும் இன்ப துன்பங்களையும் அளிக்கின்றான்.
உயிர்க்ள் தாம் பெற்ற மாயையின் காரியமாகிய கருவிகளால் மாயையின் காரியங்களாகிய உலகபொருள்களை அறிந்தும் நுகர்ந்தும் அவற்றை மேலும் மேலும் பெற வேண்டும் என முயன்றும் வினைகளைச் செய்து உலக வாழ்வில் கட்டுண்டு நிற்கின்றன.
உயிர்களை உலகத்தோடு பிணித்து நிற்பவை மாயையும் கன்மமும், அவை வருவதற்கு மூலமாகிய ஆணவமும் ஆகும். அது பற்றியே அம்மூன்றும் கட்டு, தளை, பாசம் என்னும் சொற்களால் குறிக்கப்படுகின்றன. இச் சொற்கள் யாவும் ஒருபொருள் உடையன.
ஒரு கட்டினை நீக்க இரு கட்டுகளை இடுதல்:
முதற்கண் உயிர்கள் ஆணவம் என்னும் ஒரு கட்டுடன் இருந்தன.அக்கட்டினை நீக்குவதற்காக மாயை,கன்மம் என்னும் இரு கட்டுகளைச் சேர்க்கின்றான் இறைவன்.
அவிழ்த்தற்கு அரிய ஒரு கட்டினை அவிழ்ப்பதற்கு நடைமுறையில் நாம் கையாளும் வழி,அதனைக் காட்டிலும் இறுக்க்மாக மற்றொரு கட்டினைப் போடுவது தான்.அதனால் முதற்கட்டுத் தானே நெகிழ்ந்துவிடும் அல்லவா?அதுபோல இறைவன் ஆணவக் கட்டினை நெகிழ்விப்பதற்காகவே மாயை,கன்மங்களாகிய இரு கட்டுகளை இடுகின்றான் என அறியலாம்.
அழுக்கை அழுக்கால் நிக்குதல்:-
ஆணவம் அழுக்கு ஆதலின் அதனை நீக்குவதற்கு மாயை கன்மங்களாகிய இரண்டு அழுக்குகளைச் சேர்க்கின்றான் என்றும் கூறலாம். ஆடையிலுள்ள அழுக்கைப் போக்குவதற்கு சோப்புக்கட்டியை வைத்துத் தேய்க்கிறோம். அதுவும் அழுக்குத்தானே. அவ்வழுக்கு ஆடையிலுள்ள அழுக்கை நீக்க உதவுகிறது. அதுபோல,ஆணவமாகிய அழுக்கை நீக்குவதற்கு மாயை , கன்மங்களாகிய அழுக்குகள் உதவுகின்றன என அறியலாம். இவை முன்றும் அழுக்காதல் பற்றி மும்மலங்கள் என வழங்கப்படுகின்றன.
பாசம்,பசு,பதி:-
ஆணவம்,கன்மம்,மாயை என்ற மூன்றும் பாசம்[கட்டு]எனப் பார்த்தோம்.இப் பாசத்திற் கட்டுண்டு நிற்கும் உயிர்கள் பசுக்கள் எனப்படும்.’பசு’ என்ற சொல்லுக்குக் கட்டப்பட்டது என்பது பொருள்;இவ்வாறு கட்டுண்ட உயிர்களைக் காக்கும் தலைவன் ஆதலின் இறைவன் பதி எனப்படுவான்.பதி என்பதற்குக் காப்பவன் என்பது பொருள்.பதி,பசு,பாசம் என்னும் இவையே சைவ சித்தாந்தம் கூறும் முப்பொருள்களாகும்.அவை என்றும் உள்ளன என்பதனை,
- 'பதி பசு பாசம் எனப் பகர் மூன்றில்
- பதியினைப் போல் பசு பாசம் அனாதி'
- என வரும் திருமந்தரப் பகுதி உணர்த்தும்
ஞானசம்பந்தர்
'விளையாததொர் பரிசில்வரு பசு,பாசவேதனையொண்
டளையாயின தவிரவ்வருள் தலைவன்'
எனப் பசு, பாசம், தலைவன் பற்றி குறித்தருளினார்.
பாசம்- ஆணவம்;வேதனை- கன்மம்;ஓண்தளை- மாயை; மாயை விளக்கொளி போல நின்று ஆணவமல இருளைச் சிறிது நீக்கி உயிருக்கு விளக்கம் தருதலின் ‘ஓண்தளை’ என்றார்.ஓண்மை-ஓளியுடைமை. உயிர்கள் தோற்றுவிக்கப்படாமல் என்றும் நிலவு வறுதல் பற்றி ‘விளையாததொர் பரிசில் வரு பசு’ என அடைமொழி கொடுத்துக் கூறினார்.அனைத்துயிர்களும் பாசத்தைத் தவிரும்படியாக அருள்புரியும் சிவபெருமானே பதியயாகிய தலைவன் என உணர்த்தியருளினார்.
மேற்கூறியவற்றால் முப்பொருள்களின் இயல்பு ஓரளவு விளங்கும்.
அருவம் /Aruvam
உருவம் /Uruvam
அருவுருவம் /AruUruvam
பூசை /Poosai
பூவை வைத்து செய்வது (பூ+செய்) = பூசை / (Doing with Flowers)
குரு / Guru
குறவன் என்ற தமிழ் சொல்லிருந்து வந்தது( ஆசான்) /
Guru originated from a tamil word Kuravan (Teacher)
ஐந்தெழுத்து / The Holy Five Letters
நமசிவாய (ந - திரோதானம், ம - ஆனவ மலம், சி - சிவன், வா - திருவருள் சக்தி, ய - ஆன்மா) /
Na_Ma_Si_Vaa_Ya (Na - , Ma - , Si - God, Vaa - tiruvarul sakthi, Ya - soul)
மேலே உள்ள வார்த்தைகளுக்கு பொருள் தெரிந்தபின் "உண்மை விளக்கம்" எனும் சாத்திர நூலை பயிலவும்.
After learning Above Definitions you can start reading Philosophy book Named "Unmai Vilakkam".
-நன்றி; தட்டச்சு செய்து உதவியவர் மோகனா சந்திரசேகர்.