lingam saivasiddhantam natarajar science siva

Image Naganathar 2014

<< Back to Image Gallery

கொங்குமலிகின்ற கொங்குவளநாட்டில் தேவாரப்பாடல் பெற்ற தலங்கள் ஏழாகும். அதில் வைப்புத்தலங்கள் பதினாங்காகும். பிற்காலச் சோழர்காலக்கோயில்கள்
பலவாகும். கொங்குநாட்டில் உட்பிரிவு நாடான ஒடுவங்க நாட்டுத் திருநாகேசுரக் கோயில் ஒன்று. பிற்காலச் சோழர் காலத்தில் அவர்களின் கிளையினர் கி.பி 1004 முதல் 1303 முடியக் கொங்கு நாட்டை ஆண்டனர். இவர்கள் கொங்குச் சோழர் என்று அழைக்கப் பெற்றனர். சோழ நாட்டில் உள்ள தலங்களைப் போல கொங்கு நாட்டிலும் தலங்கள் அமைத்தனர். சோழ நாட்டு திருநாகேசுவரம் போல கொங்கு
நாட்டில் முட்டத்து நாகேசுவரம், விசயமங்கலம் முதலியன அமைந்தன. புன்செய்புளியம்பட்டியிலிருந்து மாதம்பாளையம் வழியாக மேட்டுப்பாளையம் செல்லும் சாலையில் பெரியகுமாரபாளையம் பிரிவு உள்ளது. இங்குக் கொங்குச் சோழர் காலத்துச் சிவன் கோயில் ஒன்று இருந்தது. நாகநாதர் கோயில் என மக்களால் அழைக்கப் பெற்று வந்தது.

இக்கோயில் காலப்போக்கில் வழிபாடின்றிச் சீர்குன்றியது. நாடெங்கும் பல திருப்பணிகளைச் செய்துவரும் மணிவாசகர் அருட்பணி மன்றத்தின் வழிகாட்டுதலின்படி "நாகநாதர் அருட்பணி மன்றம்" உருவாக்கப்பெற்றது. புதிதாக
திருக்கோயில் அமைக்க முடிவு செய்யப் பெற்றது.  25-01-2002ல் திருப்பணி தொடங்கப்பெற்றது. 17-08-2003 ஆம் நாளன்று மணிவாசகர் அருட்பணி மன்ற அன்பர்களால் 5008 திருக்குடங்கள் வைக்கப் பெற்றுத் திருநெறிய வேள்வி
வழிபாடு செய்யப்பெற்றது. இளங்கோயிலில் இருந்த நாகநாதருக்கு பல்லாயிரத்துக்கு மேற்பட்ட மக்கள் தமது கைகளால் நீராட்டுச் செய்தனர்.

செல்வர் சிலர் தனித்தனி கோயில் திருப்பணிகளையும் அமுதுமண்டபம் நுழைவாயில் திருப்பணிகளையும் செய்துள்ளனர். பொது மக்கள் அடியார் பெருமக்களின் பொருளுதவியாலும், உடல் உழைப்பாலும் 12 ஆண்டுகள்
மேற்கொண்ட விடாமுயற்சியாலும் திருப்பணிகள் நிறைவெய்தியது, அனைத்தும் கற்கோயில்களாக அமைந்துள்ளன.கடந்த நலமிகு திருவள்ளுவராண்டு 2045 அப்பர் ஐயாற்றில் கயிலைக்காட்சி கண்டதும், ஆலால சுந்தரர் கயிலை சென்றதுமான அருள்நிறை ஆடித்திங்கள் 25ஆம் நாள் (10-08-2014) ஞாயிற்றுக்கிழமை காலை 8.00 மணி முதல் 9.00 மணிக்குள் அருள்தரும் நாவுக்கரசி உடனமர் அருள்தரும் நாகநாதருக்குத் திருநெறிய தீந்தமிழ்த் திருக்குட நன்னீராட்டுப் பெருவிழா பத்தராய் பணிபவர்கள், பரமனையே பாடுபவர்கள், சித்தத்தை சிவன்பாலே வைத்தவர்கள், ழுநீறு பூசிய முனிவர்கள், சமய, சந்தானக் குரவர் வழிநின்று சமயம் பேணும் சைவர்கள், திருநீறு உருத்திராக்கம் திருவைந்தெழுத்தைப் பேணும் பெருமையுடைய
சிவனடியார்கள், எழில் ஞானபூசைப் புண்ணியர்கள், மேன்மைகொள் சைவநீதி விளக்கம் பெற உதவும் சைவநெறிப் புரவலர்கள், சிவநெறிக் காவலர்கள், வளர்திருத்தொண்டாம் உழவாரப்பணி செய்து உயிர்க்குறுநோய் நீக்கும் உத்தமர்களாம் சித்தாந்தச் சைவச் செயல் வீரர்கள் மற்றும் இப்பகுதிவாழ் பெருமக்கள் சூழ சிறப்பாக நடைபெற்றது.
திருநெறிய தமிழ்முறை திருக்குட நீராட்டின் போது எடுக்கப்பட்ட சில

புகைப்படங்கள்.

 






































































































































































































































































































































































































































































































































































































































































































bot About Us | Policy | Contact Us | ©2017 Saiva Siddhanta
Back to Top