lingam saivasiddhantam natarajar science siva

Nayanmars including Thogai Adiyars

<< Back to Image Gallery

தனி அடியார்கள் (63)

வ.எண் படம் 1 படம் 2 குறிப்பு விரிவாக
1


அதிபத்தர்

நாள் தோறும் தம் வலையில் அகப்படும் முதல் மீனை இறைவனுக்குப்படைத்த மீனவர்.

மேலும் படிக்க

2


அப்பூதியடிகள்

திருநாவுக்கரசரின் திருப்பெயரை ஓதிச் சிவப்பேறு பெற்ற அந்தணர்.

மேலும் படிக்க

3


அமர்நீதி நாயனார்

அடியார் கொடுத்த கோவணம் மறைந்ததற்கு ஈடு செய்ய தம் மனைவி,மக்கள்,சொத்துக்களுடன் தன்னையும் சிவனடியார்க்கு அர்ப்பணம் செய்த வணிகர்.

மேலும் படிக்க

4


அரிவாட்டாய நாயனார்

பூசைப் பொருட்கள் தவறித் தரையில் உள்ள நில வெடிப்பில் சிந்தியமையால் தம் ஊட்டியைத் தாமே அறுக்க முனைந்த வேளாளர்.

மேலும் படிக்க

5


ஆனாய நாயனார்

பஞ்சாட்சரத்தை வேய்ங்குழலால் இசைத்து முக்தி பெற்ற யாதவர்.

மேலும் படிக்க

6


இசைஞானியார்

சுந்தரரின் அன்னையார்.

மேலும் படிக்க

7


இடங்கழி நாயனார்

தம் செல்வத்தையும்,அம்பாரத்தையு ம் சிவனடியார்கள் கொள்ளை கொள்ள விட்டுவிட்ட ஒரு குறுநில மன்னர்.

மேலும் படிக்க

8


இயற்பகை நாயனார்

இல்லையென்னாது எதையும் அளித்தவர்.தம் மனைவியையே சிவனடியார்க்கு மனமுவந்து அளித்த வணிகர்.

மேலும் படிக்க

9


இளையான்குடிமாறார்

வறுமையிலும்,நள்ளிரவி லும் அடியார்க்கு அமுது அளித்த வேளாளர்

மேலும் படிக்க

10


உருத்திரபசுபதி நாயனார்

நாள் தோறும் திருவுருத்திர மந்திரங்களை ஓதி முத்தியடைந்த மறையவர்.

மேலும் படிக்க

11


எறிபத்த நாயனார்

கையிலிருந்த மழுவாயுதத்தால் சிவனடியார்களின் பகைவரைக்(பட்டத்து யானையை) கொன்று சைவத்தை வளர்த்தவர்.

மேலும் படிக்க

12


ஏயர்கோன் கலிகாமர்

சுந்தரர் சிவபெருமானைத் தூது அனுப்பியதால் அவரைப்பகைத்து,பின்னர் சூலை நோய் அடைந்து சுந்தரரின் தொடர்பைப்பெற்ற வேளாளர்.

மேலும் படிக்க

13


ஏனாதி நாதர்

திருநீற்றின் பொலிவைக் கண்டு அதிசூரனைக் கொல்லாமல் தாமே இறந்தவர்.

மேலும் படிக்க

14


ஐயடிகள் காடவர்கோன்

ஆட்சியைத் துறந்து சிவத்தலங்களை வழிபட்டு “சேத்திரத் திருவெண்பா” என்னும் நூலை இயற்றியவர்.

மேலும் படிக்க

15


கணநாதர்

திருஞான சம்பந்தரை வழிபட்டுத் திருக்கையிலையை அடைந்த மறையவர்.

மேலும் படிக்க

16


கணம்புல்லர்

கணம்புல்லை விற்று நெய் வாங்கி தீபத் திருப்பணிபுரிந்தவர்.நெய் இல்லாததால் தலைமயிரையே எரித்தவர்.

மேலும் படிக்க

17


கண்ணப்பர்

சிவபெருமானுக்குத் தம் கண்களையும் கொடுத்த வேடுவர்.

மேலும் படிக்க

18


கலிய நாயனார்

எண்ணெய்யும் விறகும் இல்லாத போது தமது ரத்தத்தால் விளக்கு எரித்து ஓளி உண்டாக்கிய வாணியர்.

மேலும் படிக்க

19


கழறிற்றறிவார்

உவர்மண் பூசிய சலவைத் தொழிலாளனைச் சிவவேடத்தை நினைவூட்டியதாக வணங்கியவர்.

மேலும் படிக்க

20


கழற்சிங்கர்

பூமண்டலத்தின் கீழே இருந்த மலரை முகர்ந்து பார்த்த தம் மனைவியாரின் கையை வெட்டிய பல்லவ மன்னர்.

மேலும் படிக்க

21


காரி நாயனார்

“காரிக் கோவை” என்னும் நூலை இயற்றி அதன் ஊதியத்தைக் கொண்டு தமிழ்ப் பணி புரிந்தவர்.

மேலும் படிக்க

22


காரைக்கால் அம்மையார்

இறைவன ருளால் இருமுறை மாயமாங்கனி பெற்றவர்.

மேலும் படிக்க

23


குங்கிலியகலையனார்

நாள் தோறும் சிவபெருமானுக்குக் குங்கிலியத் தூபமிட்ட மறையவர்.1

மேலும் படிக்க

24


குலச்சிறையார்

பாண்டிய மன்னனின் முதல் அமைச்சராக இருந்து சைவ நெறியைக் காத்தவர்.

மேலும் படிக்க

25


கூற்றுவர் ( சேரமான் பெருமான் )

நடராசப் பெருமானின் திருவடியே தம் மணி முடியாக வழிபட்டவர்.

மேலும் படிக்க

26


கலிக்கம்ப நாயனார்

சிவ வேடங்கொண்ட பணியாளனையும் வழிபட்டவர்.மறுத்த மனைவி கையை வெட்டிய வணிகர்.

மேலும் படிக்க

27


கோச்செங்கட் சோழன்

திருவானைக்கா திருமதில் பணிகளைச் செய்தவர்.எழுபது சிவாலயங்களைக் கட்டியவர்.

மேலும் படிக்க

28


கோட்புலி நாயனார்

சிவபெருமானுக்குப்ப டைப்பதற்காக தாம் சேமித்து வைத்த நெல்லை உண்ட சுற்றத்தாரைக் கொன்று நேர்மையை நிலைநாட்டிய வேளாளர்.

மேலும் படிக்க

29


சடைய நாயனார்

சுந்தரரின் தந்தையார்.

மேலும் படிக்க

30


சண்டேசுவர நாயனார்

சிவபூசைக்கு பாற்குடங்களை உதைத்த தமது தந்தையின் காலை வெட்டிய மறையவர்.

மேலும் படிக்க

31


சத்தி நாயனார்

சிவனடியார்களை இகழ்ந்தவர் நாவைத் தண்டாயம் என்னும் குறடுபோலும் கருவியால் இழுத்துக் கத்தியால் அரிந்த வேளாளர்.

மேலும் படிக்க

32


சாக்கியர்

நாள் தோறும் கற்களையே மலராகச் சிவலிங்கத்தின் மீது எறிந்து தமது சிவ பக்தியை வெளிப்படுத்திய வேளாளர்.

மேலும் படிக்க

33


சிறப்புலி நாயனார்

திருவைந்தெழுத்தை ஓதித் தாம் புரிந்த வேள்வியைச் சிவபெருமானுக்கே தத்தம் செய்த மறையவர்.

மேலும் படிக்க

34


சிறுதொண்டர்

இல்லை என்று கூறாமல் பிள்ளைக்கறி சமைத்து சிவனடியாரை வழிபட்டவர்.

மேலும் படிக்க

35


சுந்தரமூர்த்தி நாயனார்

சடையனார்.இசை ஞானியார் ஆகியோரின் மைந்தர்.சிவபெருமானின் தோழர்.தேவாரம் பாடிச் செந்தமிழ் வளர்த்த ஆதி சைவர்.

மேலும் படிக்க

36


செருத்துணை நாயனார்

கழற்சிங்கரின் மனைவி பூமண்டலத்திலிருந்த மலரை முகர்ந்து பார்த்ததால் அவ்வம்மையாரின் மூக்கையறுத்த வேளாளர்.

மேலும் படிக்க

37


சோமசிமாறர்

சிவ வேள்விகள் புரிந்து சுந்தரரை வழிபட்டுச் சிவபதம் அடைந்த மறையவர்.

மேலும் படிக்க

38


தண்டியடிகள்

திருவாரூர்க் கமலாலயக் குளத்தை பிறவிக்குருடராக இருந்தும் திருத்தும் பணியில் ஈடுபட்டவர்.

மேலும் படிக்க

39


திருக்குறிப்புத் தொண்டர்

சிவனடியார்களின் ஆடைகளின் அழுக்கு நீக்கி உதவியவர்.

மேலும் படிக்க

40


திருஞானசம்பந்தமூர்த்தி

ஞானப்பால் உண்டவர்;தேவாரம்பாடிச் சைவமும் தமிழும் தழைக்கச் செய்த மறையவர்.

மேலும் படிக்க

41


திருநாவுக்கரசர்

சைவமும் தமிழும் தழைக்கத் தேவாரம் பாடியவர்.புறச் சமய(சமணம்,பவுத்தம்) இருளை நீக்கிய வேளாளர்

மேலும் படிக்க

42


திருநாளை போவார்

பறையர் குலத்தில் தோன்றிய நாயன்மார் இவர்.தில்லை சிதம்பரத்தில் தீக்குள் புகுந்து வேதியராகி முக்தியடைந்தவர்.

மேலும் படிக்க

43


திருநீலகண்டர்

சிவனடியார் களுக்குத் திருவோடு கொடுத்து அறம் புரிந்த குயவர்

மேலும் படிக்க

44


திருநீலகண்ட யாழ்ப்பாணர்

திருஞானசம்பந்த ரின் பாடல்களை யாழில் அமைத்துப்பாடியவர்.

மேலும் படிக்க

45


திருநீலநக்க நாயனார்

திருஞான சம்பந்தரின் திருமணத்தை தரிசித்து சிவப்பேற்றை அடைந்த மறையவர்.

மேலும் படிக்க

46


திருமூலர்

திருமந்திரம் தந்தவர்.

மேலும் படிக்க

47


நமிநந்தியடிகள்

சமணர்கள் எண்ணெய் தர மறுத்தமையால் குளத்து நீரைக்கொண்டே விளக்கு எரித்த மறையவர்.

மேலும் படிக்க

48


நரசிங்க முனையர்

போலிச் சிவனடியாரிடமும் அன்பு காட்டிய பெருந்தகையார்.

மேலும் படிக்க

49


நின்றசீர் நெடுமாறன்

சமண சமயத்தவராக இருந்து திருஞான சம்பந்தரால் சைவ சமயத்துக்கு மாறியவர்.

மேலும் படிக்க

50


நேச நாயனார்

சிவனடியார்களுக்கு உடை,கோவணம்,கீள் முதலியன கொடுத்துக் காத்த சாலியர்.

மேலும் படிக்க

51


புகழ்ச் சோழ நாயனார்

தாம் வெட்டிய பகையரசர்களின் தலை ஒன்று சடைமுடி தரித்திருப்பதை அறிந்து மனம் நொந்து தீப்புகுந்தவர்.

மேலும் படிக்க

52


புகழ்த்துணை நாயனார்

பஞ்ச காலத்தில்,சிவபெருமானின் திருவருள் கிடைத்து அதனால் நாள் தோறும் ஒவ்வொரு பொற்காசு பெற்றவர்.

மேலும் படிக்க

53


பூசலார்

மனக்கோவில் கட்டி சிவபெருமானை பிரதிட்டை செய்த மறையவர்.

மேலும் படிக்க

54


பெருமிழலைக் குறும்பர்

சுந்தரமூர்த்தி நாயனாரையே தொழுது அவரோடு சிவப்பேறு பெற்றவர்.

மேலும் படிக்க

55


மங்கையர்க்கரசியார்

நின் ற சீர் நெடுமாறனின் மனைவியாவார்.திருஞானசம்பந்த ரை மதுரைக்கு வரவேற்றுத் தம் கணவரை சைவராக்கினார்.

மேலும் படிக்க

56


மானக்கஞ்சாற நாயனார்

தம்மகளின் நீண்டகூந்தலைச் சிவனடியாரின் பஞ்சவடிக்காக அளித்த வேளாளர்.

மேலும் படிக்க

57


முருக நாயனார்

மலர் மாலைகள் தொடுத்து இறைவனை வழிபடும் திருப்பணியில் ஈடுபட்ட மறையவர்.

மேலும் படிக்க

58


முனையடுவார் நாயனார்

கூலிக்கு போர் செய்து திரட்டிய பொருளை அடியார்களுக்கு வழங்கிய வேளாளர்.

மேலும் படிக்க

59


மூர்க்க நாயனார்

சூதாடி வென்ற பொருளால் சிவனடியார்களுக்கு அன்னதானம் செய்த வேளாளர்.

மேலும் படிக்க

60


மூர்த்தி நாயனார்

சந்தனக் கட்டை கிடைக்காதபோது தம் முழங்கையைத் தேய்த்து இறைவனுக்கு காப்பிட முனைந்த வணிகர்.

மேலும் படிக்க

61


மெய்ப்பொருள் நாயனார்

அடியார்கள் திருவேடத்தையே மெய்ப்பொருளாகக் கொண்டவர்.

மேலும் படிக்க

62


வாயிலார் நாயனார்

சிவபெருமானுக்கு மனத்தினாலேயே திருக்கோவில் அமைத்து திருமஞ்சனம் தூபதீபம் செய்து வந்த வேளாளர்.

மேலும் படிக்க

63


விறன்மிண்ட நாயனார்

தேவாசிரிய மண்டபத்தில் வீற்றிருந்த சிவனடியார்களை வணங்காமையால் சுந்தரரையும் பகைத்த வேளாளர்.

மேலும் படிக்க

தொகை அடியார்கள் (9)

வ.எண் படம் 1 குறிப்பு விரிவாக
64

தில்லை வாழ் அந்தணர்

மேலும் படிக்க

65

பொய்யடிமையில்லாத புலவர்

மேலும் படிக்க

66

பத்தராய்ப் பணிவார்கள்

மேலும் படிக்க

67

பரமனையே பாடுவார்

மேலும் படிக்க

68

சித்தத்தை சிவன்பாலே வைத்தார்

மேலும் படிக்க

69

திருவாரூர்ப் பிறந்தார்

மேலும் படிக்க

70

முப்போதும் திருமேனி தீண்டுவார்

மேலும் படிக்க

71

முழுநீறு பூசிய முனிவர்

மேலும் படிக்க

72

அப்பாலும் அடிசார்ந்தார்

மேலும் படிக்க

bot About Us | Policy | Contact Us | ©2019 Saiva Siddhanta
Back to Top