lingam saivasiddhantam natarajar science siva

சாத்திர நூல் 2 p - சிவஞான சித்தியார் (பரபக்கம்)

go to -> சுபக்கம்

அருள் நந்தி சிவாச்சாரியார்
விரும்பிய பதிகத்திற்கு செல்ல
பாடல் .

Go to Meikanda Saathiram
| 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 |
| 8 | 9 | 10 | 11 | 12 | 13 | 14 |

உண்மை விளக்கம் நூலை இங்கே சொடுக்கி பதவிறக்கம் செய்யவும்.


<< முந்தயப் பதிகம் | முகப்பு | அடுத்தப் பதிகம் >>

              எண்: 17    6. நிகண்டவாதி மதம்
பண் :

திருச்சிற்றம்பலம்

1. வாச மாமலர் அசோகு பேணிமறை நீதி யோடுமலை யுந்தவத்(து),
ஆசை யாலுடை அகன்று மாசினை அடைந்தில் வாழ்தரும் அறத்தினில்,
பாச மானது தவிர்ந்து பண்டிபட வுண்டு பாயினொடு பீலிமேல்,
நேச மாயவை தரித்துளோர் களின் நிகண்ட வாதியை நிகழ்த்துவாம். 143

2. ஈறி லாதன அநந்த ஞானமுதல் எண்கு ணங்களெனும் ஒண்குணம்,
மாறி லாதமதி மேவு சீதமென மன்னி வானவர் வணங்கவே,
வேறு லாவுகுண ஞான ஆவரணி யாதி எட்டினையும் விட்டசீர்,
ஏறு பான்மையுடை நீடு வாழ்அருகன் எங்க ளுக்கிறைவன் என்றனன். 144

3. கருவி கண்படு தொடக்கொ ழிந்துவரு கால மூன்றின் நிகழ் காரியம்,
பெருக நின்றொரு கணத்தி லேஉணர் பெருந்த வக்கடவுள் பீடினால்,
மருவி நின்றுவழி பட்ட வர்க்கும்மலை வுற்ற வர்க்கும்மனம் ஒத்திடும்,
குரிசி லெங்களிறை யென்று பின்னும்நிகழ் குற்ற மின்மையது கூறுவான். 145

4. பசித்தல் தாகபய செற்ற மோடுவகை மோக சிந்தனை பழித்தனோய்,
நசித்தல் வேர்வினொடு கேத மோடுமதம் வேண்ட லீண்டதி சயித்தலும்,
புசிப்பு வந்திடு பிறப்பு றக்க மிவை விட்டொ ரண்ணகுண பூதனாய்,
வசித்த வன்னுலகின் மேலி ருந்தொருசொல் இகல னுக்கருளும் என்றனன். 146

5. அந்த வாய்மொழியி னால்அவன்சரண மாதி யோகமுதலானநூல்,
இந்த மாநிலம் மயங்கி டாதவகை இங்கி யம்பினன் இதப்பொருள்,
வந்த காலமுயிர் தம் தன்மிஅறம் மற்றும் விண்மருவு புற்கலம்,
பந்தம் வீட்டினொ டநாதியா யிவை படைப்ப தின்றியுள பத்துமே. 147

6. நிற்ற லோடுதலை போதல் அன்மையை நிகழ்த்து நீடுவேதி ரேகமும்,
உற்ற தாம்இவை கணத்தி லேமருவி உள்ள வாபுரியு மாறுதான்,
கற்ற காலமள வெய்தி வாழுமுயிர் காய மேவிநிறை வானதே,
பெற்று வேறுவரு தன்மை நேரறிவு பெற்ற தாகியுள பேசிலே. 148

7. பரந்து மீதுதரு மாத்தி காயம்அழி வித்(து) அநித்தமது பண்ணிடும்,
நிரந்து கீழதரு மாத்தி காயமது நித்த மாய்மிக நிறுத்திடும்,
புரந்த புண்ணிய மிதற்கு நன்மைபுகல் பாவ மானவது தீமையே,
தரும்பொ ருட்கிடம தாகும் வானமிகு புற்க லன்களவை சாற்றுவாம். 149

8. ஏணும் ஒன்றுடைய வாகி எங்கும்அணு வாய்இரும்புகல் மரங்களும்,
பூணும் அங்குருவெ லாமு மாகுமிவை புற்க லப்பொருள்கள் என்னலாம்,
காணும் அங்கறு வகைத்தொ ழில்களவை கட்டு விட்டநெறி கன்மமேல்,
மாண நின்றுவரு மாறி மாறிமுன் வகைந்த துண்டுவிட மாட்சியே. 150


---திருச்சிற்றம்பலம்---

 

bot About Us | Policy | Contact Us | ©2018 Saiva Siddhanta
Back to Top