lingam saivasiddhantam natarajar science siva

சாத்திர நூல் 2 p - சிவஞான சித்தியார் (பரபக்கம்)

go to -> சுபக்கம்

அருள் நந்தி சிவாச்சாரியார்
விரும்பிய பதிகத்திற்கு செல்ல
பாடல் .

Go to Meikanda Saathiram
| 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 |
| 8 | 9 | 10 | 11 | 12 | 13 | 14 |

உண்மை விளக்கம் நூலை இங்கே சொடுக்கி பதவிறக்கம் செய்யவும்.


<< முந்தயப் பதிகம் | முகப்பு | அடுத்தப் பதிகம் >>

              எண்: 18    6. நிகண்டவாதி மதம் - நிகண்டவாதி மத மறுதலை
பண் :

திருச்சிற்றம்பலம்

1. அருகனுக் கனந்த ஞான மாதி ஆதி யாகவே
பெருக நிற்றல் சீதம்மா மதிக்க டைந்த பெற்றியேல்
ஒருவும் இட்ட ஒப்பவன் னுயிர்த்தி றத்தி னுள்ளபின்
மருவு மிக்க குற்றம்மேல் அறத்தின் மன்னி னானெனில். 151

2. அறத்தின் மன்னு வித்தவன் ஒருத்த னாய்அவன் அறத்
திறத்தி னிற்றல் மற்றொருத்த னால்வி ளைந்த செய்தியாம்
மறத்தின் அற்ற வர்க்கெலாம் வணக்கம் உன்இறைக்குமேற்
பிறக்குமிங் கவத்தை கொண்ட தாரை யின்று பேசிடே. 152

3. கருவிதன் தொடக்கொ ழிந்து கண்டு வாழு மென்றியேல்
உருவு கொண்டு நின்ற தென்னில் உண்டுதான் மநாதிகள்
ஒருவி நின்ற தென்னில் அத்த மொன்றையும் உணர்ந்திடான்
பொருள்தெ ரிந்து போகை கால மொன்றிலே புணர்ந்திடான். 153

4. ஆர்வ கோப மானவை அடைந்தொ றுப்ப வர்க்கெலாம்
சேர்வ தின்மை செப்பில்இன்று சீவன் மேவு காயமால்
ஒரு மன்னர் போலவே உயிர்க்க ளித்த லென்றியேல்
ஏர்கொள் பொன்எ யிலிடத் திருத்தல் பெற்ற தென்கொலோ. 154

5. சொல்ல தொன்று கொண்டிகலின் ஆத்தன் நாடவேசொலின்
இல்லை யாம் மநாதிதான் இயம்பு மாற தெங்ஙனே
நல்ல வாம் மநாதிதான் அவர்க்கு நாட வேயிலை
ஒல்லை ஊமர் ஊமருக் குரைத்த வாற தொக்குமே. 155

6. இன்ப பூமி சேரிகலில் நாதன் இவ்வி ருநிலத்
துன்பம்அங் குணர்ந்தி டாமை இங்கு வந்த சொல்லிடான்
இன்ப பூமி யில்இருந் திருந்தி யாவும் எய்திடில்
துன்ப பூமி யாமுணர்ந்து சொல்ல வல்ல தில்லையே. 156

7. நிறைந்து காய மோடு சீவன் நின்ற தாகில் இவ்வுடல்
குறைந்த போது தானும் இத்தொ டொக்கவே குறைந்திடும்
இறந்து போகும் இக்கடம் இறந்த போது நீர்குடத்(து)
உறைந்து டைந்தி டக்குடம் உலர்ந்த வாற தொக்குமே. 157

8. கண்டநூல் தருந்தன் மாத்தி காய மோட தன்மமும்
உண்டு மீது கீழ்உலாவி உற்று நின்றி டப்பொருள்
கொண்ட தென்னில் அத்தமிவ் விரண்டு தன்மை கூடிடா
வண்டு புட்கள் போலெனின் வழங்கி டாக ணத்திலே. 158

9. நீடு பாவ புண்ணி யங்க ளால்நிரய வானகம்
கூடு வேர்கள் இன்று நின்று கூட்டு வோர்கள் இன்மையின்
ஓடு மாக ணைத்தி றத்தின் உற்றவா றுரைத்தியேல்
வீடு மாக ணைக்கு நாடும் வில்லி போல வேண்டுமே. 159

10. ஏண தொன்று புற்கலத்தின் எய்து மென்னின் நாசமே
காண லாகும் அக்கடம் கழிந்த தன்மை இல்லவை
பூண வேண்டும் மேலுறும் பொருத்த மின்மை யொன்றினின்
மாணவே அணுப்பொருள் நிகண்ட வாதி வைத்ததே. 160

11. ஆறு காரி யங்கள்மாற வேத வங்க ளாமெனின்
மாறி வாணி கஞ்செயா திருக்க வந்தி டாதனம்
ஈறி லாத வூழதென்னின் எங்கு முள்ள தூழதே
பேறு காரி யம்விடப் பிறப்ப தில்லை பேசிலே. 161

12. உடல்வ ருந்தல் மாதவஙகள் உறுதி யென்று ரைத்திடில்
படவ ருந்து நோயினோர்கள் படர்வர் பொன்னெ யில்எனாய்
திடவே ருந்த இன்பம்இச்சை செய்தல் செய்தியேல்
கெடஅரிந்தி டாய்உன் நாசி கேடில் இன்பம் உன்னியே. 162

13. பூர்வ கன்மம் அற்றிடப் புசித்த பின்பு பொன்னெயில்
நேர்வ தென்னின் அக்கன் மத்து நிச்சய மிலாமையில்
தீர்வ தின்மை தீரியின்வாயில் சேர்வ தின்மை தெண்கடல்
நீர்வ றந்த பின்புபூஞை மீன ருந்த நின்றதே. 163

14. கூறு கூவல் மன்னும்அக் குடம் குறித்து நீள்கரை
ஏற லுற்ற தன்மை நீ ஒருத்த ரின்றி ஏறுதல்
வேறொ ருத்தன் அக்குடத்தை மீது நின்றெ டுக்கவே
ஏற லுற்ற தன்மையில் சிவன்தி றத்து நின்றிடே. 164


---திருச்சிற்றம்பலம்---

 

bot About Us | Policy | Contact Us | ©2018 Saiva Siddhanta
Back to Top