lingam saivasiddhantam natarajar science siva

சாத்திர நூல் 2 p - சிவஞான சித்தியார் (பரபக்கம்)

go to -> சுபக்கம்

அருள் நந்தி சிவாச்சாரியார்
விரும்பிய பதிகத்திற்கு செல்ல
பாடல் .

Go to Meikanda Saathiram
| 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 |
| 8 | 9 | 10 | 11 | 12 | 13 | 14 |

உண்மை விளக்கம் நூலை இங்கே சொடுக்கி பதவிறக்கம் செய்யவும்.


<< முந்தயப் பதிகம் | முகப்பு | அடுத்தப் பதிகம் >>

              எண்: 2    மங்கல வாழ்த்து
பண் :

திருச்சிற்றம்பலம்

1. சிவபெருமான்

ஆதிநடு அந்தமிலா அளவில் சோதி அருள்ஞான மூர்த்தியாய் அகிலம் ஈன்ற,
மாதினையும் ஒருபாகத் தடக்கி வானோர் மகுடசூ ளாமணியாய் வையம் போற்றப்,
பாதிமதி யணிபவளச் சடைகள் தாழப் படரொளிஅம் பலத்தாடும் பரனார் பாதத்,
தாதுமலி தாமரைகள் சிரத்தே வைத்துத் தளராத பேரன்பு வளரா நிற்பாம். 2

2. சத்தி

ஈசனருள் இச்சைஅறி வியற்றல் இன்பம். இலயமொடு போகமதி கார மாகித்,
தேசருவம் அருவுருவம் உருவ மாகித் தேவியுமாய்த் தேசமொடு செல்வ மாகிப்,
பேசரிய உயிரையெலாம் பெற்று நோக்கிப் பெரும்போகம் அவைய ளித்துப் பிறப்பினையும் ஒழித்திட்(டு),
ஆசகலும் அடிய ருளத் தப்பனுட னிருக்கும் அன்னையருட் பாதமலர் சென்னி வைப்பாம். 3

3. விநாயகக் கடவுள்

இயம்புநூல் இருந்தமிழின் செய்யு ளாற்றல் இடையூறு தீர்ந்தினிது முடிய வேண்டித்,
தயங்குபேர் ஔ¤யாகி எங்கு நின்ற தலைவனார் மலைமாது தன்னோ டாடிப்,
பயந்த ஐங் கரநாற்றோள் முக்கண்இரு பாதப் பரியதொரு நீள் கோட்டுப் பெரிய பண்டிக்,
கயந்தன்அடிக் கமலங்கள் நயந்து போற்றிக் கருத்திலுற விருத்திமிகக் காதல் செய்வாம். 4

4. சுப்பிரமணியக் கடவுள்

அருமறைஆ கமம்அங்கம் அருங்கலைநூல் தெரிந்த அகத்தியனுக் கோத்துரைக்கும் அருட்குருவாங் குருளை,
திருமறைமா முனிவர்முனி தேவர்கள்தந் தேவன் சிவனருள் சேர் திருமதலை தவநிலையோர் தெய்வம்,
பொரும்அறையார் கழல்வீரர் வீரன் கையில் பூநீர்கொண் டோவாது போற்றும் அடி யார்கள்,
கருமறையா வகையருளிக் கதிவழங்குங் கந் தன் கழலிணைக ளெஞ்சிரத்திற் கருத்தில் வைப்பாம். 5

5. மெய்கண்டதேவ நாயனார்

பண்டைமறை வண்டாற்றப் பசுந்தேன் ஞானம் பரிந் தொழுகச் சிவகந்தம் பரந்து நாறக்,
கண்டஇரு தயகமல முகைக ளௌ¢ளலாங் கண்திறப்பக் காசினிமேல் வந்தஅருட் கதிரோன்,
விண்டமலர்ப் பொழில்புடைசூழ் வெண்ணெய் மேவு மெய்கண்ட தேவன்மிகு சைவ நாதன்,
புண்டரிக மலர் தாழச் சிரத்தே வாழும் பொற்பாதம் எப்போதும் போற்றல் செய்வாம். 6


---திருச்சிற்றம்பலம்---

 

bot About Us | Policy | Contact Us | ©2018 Saiva Siddhanta
Back to Top