lingam saivasiddhantam natarajar science siva

சாத்திர நூல் 2 p - சிவஞான சித்தியார் (பரபக்கம்)

go to -> சுபக்கம்

அருள் நந்தி சிவாச்சாரியார்
விரும்பிய பதிகத்திற்கு செல்ல
பாடல் .

Go to Meikanda Saathiram
| 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 |
| 8 | 9 | 10 | 11 | 12 | 13 | 14 |

உண்மை விளக்கம் நூலை இங்கே சொடுக்கி பதவிறக்கம் செய்யவும்.


<< முந்தயப் பதிகம் | முகப்பு | அடுத்தப் பதிகம் >>

              எண்: 21    8. பட்டாசாரியன் மதம்
பண் :

திருச்சிற்றம்பலம்

1. வேதமே யோதி நாதன் இலையென்று விண்ணில் ஏறச்
சேதமாங் கன்மஞ் செய்யச் சைமினி செப்பும் நூலின்
நீதியே கொண்டு பட்டா சாரியன் நிகழ்த்தும் நீர்மை
ஓதநீர் ஞாலத் துள்ளே உள்ளவா றுரைக்க லுற்றாம். 181

2. உற்றிடுங் காம மாதி குணங்கள்தாம் உயிர்கட் குண்டாம்
மற்றிவை தருமே யாகின் மறைமொழி வாய்மை யின்றாம்
கற்றநூல் அளவாற் போதம் கலப்பது கல்வி யின்றேல்
பெற்றிடும் மழவு மூங்கை என்னவே பேச லாமே. 182

3. உண்டொரு கடவுள் வேதம் உரைத்திட உயிரின் தன்மை
கொண்டவன் அல்லன் என்றுங் கூறிடின் உருவங் கூடில்
பண்டைய உயிரே யாகும படித்தநூ லளவு ஞானம்
கண்டிடும் உருவ மின்றேல் கருதுவ தில்லை என்றான். 183

4. தேவரும் முனிவர் தாமும் சித்தரும் நரரும் மற்றும்
யாவரும் உரைப்பர் வேதம் இயம்பினர் இன்ன ரென்னப்
போவதன் றென்று நாளும் பரம்பரை புகல்வ தாகும்
கூவல்நி ரென்னில் கொள்ளேம் மறுமையைக் குறித்த லாலே. 184

5. உன்னிய அங்க மாறும் மூன்றுப வேதந் தானும்
தன்னுளே அடக்கி வேறு தங்கிடா வகையைச் சார்ந்து
முன்னமோர் தோற்ற மின்றி முடிவின்றி நித்த மாகி
மன்னியோர் இயல்பே யாகி வழங்கிடும் மறைய தென்றான். 185

6. செய்தியும் நெறியும் மேவுந் தேவரும் பொருளும் எல்லாம்
எய்திய பன்மை யாலே ஓரியல் பியம்பா தாகும்
ஐயமில் காலம் மூன்றும் அறிந்தபின் நெஞ்ச கத்தாய்
மெய்யதாய் வந்து தோன்றி விளங்கிடும் வேத நூலே. 186

7. தப்பிலா வாகுந் தாது பிரத்தியந் தன்னி னோடே
ஒப்பிலா தாம்பி ராதி பதிகமாம் உறுப்புங் கொண்டு
செம்பபுமாம் வேதம் சொன்ன விதிப்படி செய்யச் சேம
வைப்பதாம் வீடு பாசம் மருவலாம் ஒருவ லாமே. 187

8. போக்கொடு வரவு காலம் ஒன்றினில் புணர்வ தின்றி
ஆக்கவே றொரவ ரின்றி அநாதியாய் அணுக்க ளாகி
நீக்கிடா வினையிற் கூடி நிலமுத லாக நீடி
ஊக்கமா ருலகம் என்றும் உள்ளதென் றுரைக்க லாமே. 188

9. நித்தமாய் எங்கு முண்டாய் நீடுயிர் அறிவு தானாய்ப்
புத்திதான் ஆதி யாய கருவியின் புறத்த தாகிச்
சுத்தமாய் அருவ மாகித் தொல்லைவல் வினையின் தன்மைக்(கு)
ஒத்ததோர் உருவம் பற்றிப் புலன்வழி உணர்ந்து நிற்கும். 189

10. செயல்தரு வினைகள் மாய்ந்து சிந்தையிற் சேர்ந்து நின்று
பயனொடு பலியா நிற்கும் பலாலமும் தழையு மெல்லாம்
வயல்தனின் மருவி நாசம் வந்தபின் பலத்தை வந்திங்(கு)
இயல்பொருந் தந்தாற் போல என்றும்பின் இயம்பு கின்றான். 190

11. நீதியா நித்த கன்மம் நிகழ்த்திடச் சுபத்தை நீங்கார்
தீதிலா இச்சா கன்மஞ் செந்தழல் ஓம்பிச் செய்ய
ஏதுதான் வேண்டிற் றெல்லாம் எய்தலாஞ் சோம யாகம்
ஆதிதான் ஆசை வீசி அமைத்திட வீட தாமே. 191

12. கருதிய கன்மம் ஞானம் இரண்டுங்கா லாகக் கொண்டு
மருவிட லாகும் வீடு மதிதனை மதித்துச் செய்தி
ஒருவிடில் பதித னாகும் பதிதனைக் கதியின் உய்க்கத்
தருவதோர் நெறிதான் இல்லை என்னவுஞ் சாற்றி னானே. 192

13. பசுப்படுத்(து) யாகம் பண்ணப் புண்ணியம் ஆவ தென்று
வசிப்பினான் மறைகள் சொன்ன வழக்கினால் வாய்மை யாக
நசிப்பிலா மந்தி ரங்கள் நவிற்றலின் இன்ப மாகும்
பசிப்புளான் ஒருவன் உண்ணப் பசியது தீர்ந்த பண்பே. 193


---திருச்சிற்றம்பலம்---

 

bot About Us | Policy | Contact Us | ©2018 Saiva Siddhanta
Back to Top