lingam saivasiddhantam natarajar science siva

சாத்திர நூல் 2 p - சிவஞான சித்தியார் (பரபக்கம்)

go to -> சுபக்கம்

அருள் நந்தி சிவாச்சாரியார்
விரும்பிய பதிகத்திற்கு செல்ல
பாடல் .

Go to Meikanda Saathiram
| 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 |
| 8 | 9 | 10 | 11 | 12 | 13 | 14 |

உண்மை விளக்கம் நூலை இங்கே சொடுக்கி பதவிறக்கம் செய்யவும்.


<< முந்தயப் பதிகம் | முகப்பு | அடுத்தப் பதிகம் >>

              எண்: 22    8. பட்டாசாரியன் மதம் - பட்டாசாரியன் மத மறுதலை
பண் :

திருச்சிற்றம்பலம்

1. வேதஞ் சுயம்புவென வேதந்த வாய்மொழியில் வேறும் பிரமாண முளதேல்,
நீதந்து காணிங்கு மாதுங்க பாரதமும் நேர்கண்ட தாகும் அதுபோல்,
ஓதுஞ் சொலாய்வருத லானுங்க டாதிபட மோவந்தி டாஒருவரா,
லேதந்த தாமறைக ளாய்வந்த வாய்மொழியும் வேறிந்து சேக ரனதே. 194

2. உரைதந்தி டானஒருவன் எனிலிந்த வானினிடை ஒலி கொண்டு மேவி உளதாம்,
புரைதந்த வாம்மறைகள் அபிவெஞ்ச மாயொளிர்கை பொருள்தந்த தீப மதுவேல்,
வரை தந்த தாலில்வுரை கபிலன்சொ லாகுமது மறைகின்ற வாறும் வரவும்,
விரைவின்சொ லாயிதனை யெதுகொண்டு மேவுவது விடைகொண்ட தாலுன் உரையே. 195

3. உருவின்க ணேமருவி வரில்இன்று தேரைஉரை உளதுங்கள் நூலின் மறையும்,
தருகின்ற நாதரவர் இவரென்று நாமமது தரவந்தி டாமை யதனால்,
வருமென்று நேடியெனில் வளர்கின்ற தீவதனில் வருகிந்ற வாடை பலவால்,
ஒருதந்து வாயனவன் இவனென்ற போதிலிவை உளதென்று நீடிய வையே. 196

4. மறைநின்று நாலுதிசை யவர்ஒன்ற தாகவரும் உரை தந்த வாய்மை அதனால்,
நிறைவென்று நீடுமெனில் வனையுங்க டாதிபல சொலவொன்றி நீடி யுளதாம்,
குறைவின்றி நாடும் மொழி அவைசென்று கூடுவதொர் குணமுண்ட தாகு மலர்தான்,
உறைகின்ற மாலைதனில் உளதென்ற தாகுமெனின் உணர்வின்ற தாழி ஒலியே. 197

5. உடல்நின்று நாமுணரு மதுகண்ட வாறொருவன் உலகங்க ளேஉ ருவமாய்,
இடைநின்று மாமறைக ளவைஅன்று வாய்மொழிய இவைகொண்டு லோக நெறியின்,
கடனின்று வாழுமது கருதும்பின் ஆணைவழி கருமஞ்செய் காசினி யுளோர்,
திடமென்று சீர்அரச னுரைதங்கும் ஓலைதிரு முகமென்று சூடு செயலே. 198

6. முடிவின்றி வேதியர்கள் முதல்வந்த மூவர்களும் மொழி யும்சொல் ஆரிய மெனில்,
கடிவின்றி யேகணித ரவர்கண்ட வாறதுவென் வடகண்ட சாதி கடியா(து),
ஒடிவின்றி ஓதுவதென் உரைதங்கு வேதமொழி உளதென்று கூறு மவர்தாம்,
அடியின்று தானெனும தறிவின்றி ஈனுமவர் இலையென்ற ஆத ரவதே. 199

7. அறிகின்ற பான்மைஅவ யவநின்ற தாகில்அணு அழியுங்க டாதி யெனவே,
செறிகின்ற வாறதிலை யெனின்வந்து சேருமது திடமன்றுகூட வொருவன்,
குறிகொண்டு காரின் முளை வருகின்ற பீசமவை குலையொன்றி வேனி லழியும்,
உறுகின்ற காலமவை உடனின்று போயழியும் உலகென்று நீடி யிலதே. 200

8. நிறைவெங்கு மாகில்உயிர் நெறிநின்று போய்வருதல் அணைவின்ற தாம் உடலிலே,
குறைவின்றெ லாமும்உள குடகந்த மாகில் அவை விடநின்ற வாறு குறியா,
உறைகின்ற மாதவர்கள் உடனின்று போய்வறிதொர் உடல்கொண்டு மீள்வ துணராய்,
மறைதந்த வாய்மைதனில் நிறைவின்றி யேயுலகின் மலைகின்ற தாலுன் உரையே. 201

9. அழிகின்ற தால்வினைகள் ஆகின்ற வாறெனெர வது மங்கி யான பரிசேல்,
ஒழிவின்றி ஓதநமும் அறவுண்ண நாம் வினைகள் உறுகின்ற வாறதெனலாம்,
கழிகின்ற தாலறிவு வினைதந்தி டாவினைஞர் கருமங்கள் நாடி யுறுவோர்,
பழுதின்றி யேஉதவும் அதுபண்ப தாகஅருள் பரமன்க ணாகும் வினையே. 202

10. கருமங்கள் ஞானமது வுடன்நின்ற லல்மருவு கதிதங்க லாகு மெனின்நீ,
தரும் அங்க ராகமுதல் அவைதங்க மேலறிவ தவிரும்பின் வீடும் அணையா,
பொருள் நின்று தேடிவரு பயன் உண்டு போவினை புரிகின்ற வாற தெனவே,
திருநின்ற போகம் வளர் அவிசென்று மேவியது செலவுண்டு சூழவ செயலே. 203


---திருச்சிற்றம்பலம்---

 

bot About Us | Policy | Contact Us | ©2018 Saiva Siddhanta
Back to Top