lingam saivasiddhantam natarajar science siva

சாத்திர நூல் 2 p - சிவஞான சித்தியார் (பரபக்கம்)

go to -> சுபக்கம்

அருள் நந்தி சிவாச்சாரியார்
விரும்பிய பதிகத்திற்கு செல்ல
பாடல் .

Go to Meikanda Saathiram
| 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 |
| 8 | 9 | 10 | 11 | 12 | 13 | 14 |

உண்மை விளக்கம் நூலை இங்கே சொடுக்கி பதவிறக்கம் செய்யவும்.


<< முந்தயப் பதிகம் | முகப்பு | அடுத்தப் பதிகம் >>

              எண்: 27    11. மாயாவாதி மதம்
பண் :

திருச்சிற்றம்பலம்

1. நானே பிரமம் என்றுரைத்து ஞாலம் பேய்த்தே ரெனஎண்ணி,
ஊனே புகுந்து நின்றுயிர்கட் குபதே சங்கள் உரைத்துவரும்,
மானா மதிகே டனுமாய மாயா வாதி பேயாகித்,
தானே உரைக்கும் அந்நூலின் உண்மை தன்னைச் சாற்றுவாம். 220

2. அறிவாய் அகில காரணமாய் அநந்தா நந்த மாய்அரு வாய்ச்,
செறிவாய் எங்கும் நித்தமாய்த் திகழந்த சத்தாய்ச் சுத்தமாய்க்,
குறிதான் குணங்க ளொன்றின்றிக் கூறும் வேதம் தனக்களவாய்ப்,
பிறியா அநுபூ திகந்தனக்காய் நின்ற தந்தப் பிரமந்தான். 221

3. ஒன்றாம் இரவி பலபாண்டத்(து) உண்டாம் உதகத் தங்கங்கே,
நின்றாற் போல உடல்தோறும் நிகழ்ந்து நிற்கும் பொருள் மேற்கண்,
சென்றாற் போலப் புலன்களுக்குஞ் சிந்தை தனக்குந் தெரிவரிதாம்,
என்றால் காட்சி முதலாய இருமூன் றளவைக் கெட்டாதால். 222

4. இருளில் பழுதை அரவெனவே இசைந்து நிற்கும் இருங்கதிர்கள்,
அருளப் பழுதை மெய்யாகி அரவும் பொய்யாம் அதுவேபோல்,
மருளில் சகமுஞ சத்தாகி மருவித் தோன்றும் மாசில்லாத்
தெருளில் சித்தே சத்தாகும் பித்தாம் சகத்தின் செயலெல்லாம். 223

5. உலகந் தானும் திருவசநத் துண்டாம் இன்றேல் உதியாது
நிலவி யுண்டேல் அழியாது நிற்ப தாகும் மித்தையால்
இலகு சுத்தி கனல்சேர இன்றாம் வௌ¢ளி நின்றதாம்
குலவு சகமும் அவிகாரம் பரமார்த் தத்தில் கொள்ளாதால். 224

6. தாங்கும் உலகுக் குபாதாநம் சத்தாம் சிலம்பி நூல்தன்பால்,
வாங்கி வைத்துக் காப்பதுபோல் வையமெல்லாம் தன்பக்கல்,
ஓங்க உதிப்பித் துளதாக்கி நிறுத்தி ஒடுக்கத் திலதாக்கும்,
ஆங்கு வந்த வாறதனால் சத்தாம் சகத்தின் அமைவெல்லாம். 225

7. மன்னும் பிரமந் தனின்வானாய் வானின் வளியாய் அந்தவளி,
தன்னின் அழலாய் அழலின்பால் சலமாய்ச் சலத்தில் தாரணியாய்ச்,
சொன்ன இதனின் மருந்தாகித் தோற்றும் மருந்தில் அன்னமாய்,
அன்ன மதனில் துவக்காதி ஆறு தாது ஆயினவால். 226

8. ஆறு தாதுக் களும்கூடி வந்த கோசம் அன்னமயம்
மாறில் பிராண கோசமயம் மன்னு மதனில் மனோமயந்தான்
வேறு வரும்விஞ் ஞானமயம் மேவும் அதனின் அதுதன்னில்
கூறி வரும்ஆ நந்தமயம் கோச மயம்பின் கூடியதால். 227

9. கோச உருவில் பிரமந்தான் கூடித் தோன்றும் நீடுமொரு
காசம் மருவும் கடற்தோறும் நின்றாற் போலக் கதிரவன்தன்
வீசு கிரணம் உருவின்கண் வௌ¤ப்பட்ட டிடுவ ததிற்பற்றும்
பாசம் அதனுக் கின்றாகும் என்றாற் பரத்திற் பற்றுண்டோ. 228

10. அலகில் மணிக ளவைகோவை அடைந்த பொழுதின் அங்கங்கே,
நிலவும் ஒருநூல் பலநிறமாய் நின்றாற் போல நீடுருவம்,
பலவும் மருவு பேதத்தால் பன்மை யாகும் பிரமந்தான்,
குலவு போக போக்கியங்கள் கொள்ளும் போன்று கொள்ளாதால். 229

11. போற்றும் செயலால் பலநாமம் புனைந்து போக போக்கியத்தில்,
தோற்றும் நனவு கனவினுடன் சுழுத்தி துரியம் எய்தும் இதற்(கு),
ஏற்ற கரணம் நிரைநிரையே ஈரேழ் நாலொன் றெல்லாமும்,
மாற்றி நிற்கும் கேடின்றி வந்த போகம் மாய்ந்திடல். 230

12. கருவி யெல்லாம் நானெனவே கருதல் பந்தம் அக்கருத்தை
ஒருவ முத்தி யுண்டாகும் உள்ளம் வித்தாம் செய்தியினால்
மருவும் மாயா காரியங்கள் அவித்தை மாய வேமாயை
பிரியும் பிரிய ஞானமது பிறக்கும் பிறவா பேதமே. 231

13. ஆன கன்ம அநுட்டயங்கள் அந்தக் கரண சுத்திதரும்
ஊன மின்றி அச்சுத்தி ஞான மதனை உண்டாக்கும்
ஞான மதுதான் பிரமத்தை நானென் றுணர்த்தும் நான்பிறந்தால்
வான மதிநீர்த் துளக்கமெனக் காணுந் தன்னை மாயையிலே. 232

14. தானே தானாய் அநுபோகம் தன்னில் தன்னை அநுபவித்திட்(டு)
ஊனே உயிரே உணர்வேயென் றொன்று மின்றி உரையிறந்து
வானே முதலாம் பூதங்கள் மாய மாயா தேமன்னி
நானே பிரமம் எனத்தௌ¤யும் ஞானம் பிரம ஞானமே. 233

15. சாற்றும் மறைதத் துவமசிமா வாக்கி யங்கள் தமையுணர்ந்தால்
போற்றி அதுநீ யானாயென் றறைவ தல்லால் பொருளின்றே
தேற்று மிதனைத் தௌ¤யாதாச் தௌ¤யப் பஞ்ச ஆதநமேல்
ஏற்ற இயம நியமாதி யோகம் இருநான் கியற்றுவரால். 234


---திருச்சிற்றம்பலம்---

 

bot About Us | Policy | Contact Us | ©2018 Saiva Siddhanta
Back to Top