lingam saivasiddhantam natarajar science siva

சாத்திர நூல் 2 p - சிவஞான சித்தியார் (பரபக்கம்)

go to -> சுபக்கம்

அருள் நந்தி சிவாச்சாரியார்
விரும்பிய பதிகத்திற்கு செல்ல
பாடல் .

Go to Meikanda Saathiram
| 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 |
| 8 | 9 | 10 | 11 | 12 | 13 | 14 |

உண்மை விளக்கம் நூலை இங்கே சொடுக்கி பதவிறக்கம் செய்யவும்.


<< முந்தயப் பதிகம் | முகப்பு | அடுத்தப் பதிகம் >>

              எண்: 28    11. மாயாவாதி மதம் - மாயாவாதி மத மறுதலை
பண் :

திருச்சிற்றம்பலம்

1. ஏகம் நானென இயம்பி இப்படி அறிந்து முத்தியடை மின்னென,
மோக மானஉரை சோகம் இன்பொடு முடிந்தி டாதுமல டாகிய,
பாக மானது கருங்க லின்தசை பறித் தழுங்கரிய குஞ்சியின்,
தாக மார்பசி தவிர்க்க வாயிடை கொடுத்ததென் றுரைசெய் தன்மையே. 235

2. நீடு வேதம்அள வாக ஏகமெனும் நீதி தான்நிகழ்வ தாகுமேல்,
நாடி ஞாதிருவும் ஞான ஞேயமுடன் நாளு நான்மறையும் ஓதலால்,
ஓடு மாகுமுன(து) ஏகம் ஓதுமிவை ஊன மாகிஉரை மாறுகோள்,
கூடு மாகும்அநு பூதி தானுமது கூடிடாதறிவி லாமையால். 236

3. நீதியால் ஔ¤கொள் பானு வான(து)அக னீரி லேநிகழு மாறுபோல்,
ஆதி தானுருவ மாய காயமதன் மேவி ஆவதிலை யாகுமாம்,
தீதி லாஅருவ மாதலால் நிழல்கள் சேர வேறிடமி லாமையால்,
ஓதி ஓர்அகலின் நீரி லேயொருவர் காணலால் இலதுன் ஏகமே. 237

4. வேறு வாயில்புல னோடு மேல்மனமும் மேவி டாதுபிர மாணமு,
கூறி டாதறிவு தானெ னாஉணர்தல் கோடு நீ முயலின் நாடினாய்,
ஈறி லாதபரம் ஏக மேயென இயம்பு நீ இசையும் ஞானமும்,
பேற தாவதிலை பேத மானஇது பேண வேயுளது பேசிலே. 238

5. இலகு சோதிமணி எனவும் ஏகமெனின் இதனில் ஏக மது விலகினாய்,
குலவு காசுமொளி அதுவும் நீடிவளர் குணமும் நாடுவதொர் குணியுமாம்,
பலவு மானகுண மொருவும் ஏகமது எனவும் நீபகரில் நிகரிலா,
உலக மானதனை உதவு மாறதிலை உணர்வு தானுமிலை உணரிலே. 239

6. புற்றி னேர்பழுதை தொக்க போதுமயிர் புளகமாக அரவிரவிலே,
உற்ற தாம்அதனை யொக்க வேஉலகு திக்கு மாறுமொரு சத்திலே,
பெற்ற தாகுமெனின் அப்பி ராந்தியுடை யோரும் அப்பிரம பேதமாய்,
நிற்பர் நீபகரின் முற்றும் ஐயநிலை பெற்றும் இன்பமதி லாததாம். 240

7. ஓதி யேஉலக மாதனை நீயும்நிரு வசன மாகஉரை செய்வதென்,
பேதை யோய்உளதும் இலதும் அல்லபொருள் பேசு வாரும்உள ரோசொலாய்,
ஆதி யேயுளது வருத லால்இலதி லாவ தின்மைய தணிந்துபோம்,
நீதி யால்உளதி லாமை நேர்வ தெனின் நேர்மை யாகியது நின்றதே. 241

8. வேற தாகியது போல்இ ருந்தமையில் வௌ¢ளி சுத்தி யெனில் ஐயமே,
கூற லாம்ஒருப ரத்தொ டொத்தபொருள் கொண்டு விண்டநிலை கண்டனம்,
மாறி டாதுநிலம் நீர தாகி அனல் வாயு வாகிஅவை மாறியும்,
சேறி லாதுவிவ கார மன்றுபர மார்த்த மாயது செறிந்ததே. 242

9. மாய நூலதுசி லம்பி வாயினிடை வந்த வாறதனை மானவே,
ஆய தேஉலக மான தும்பிரம மதனி லேயெனில் அடங்கிநின்(று),
ஏயு மாகுமொரு சித்து மத்துடன்நி லாத தென்றுபின் இயம்பின்நீ,
பேய னேகடம்மி ருத்தில் வந்தது பிறப்ப தாவதிலை பேசிலே. 243

10. வேற தாகும்உரு வத்தி லேபரம்வெ ளிப்ப டும்மென விளம்பில்நீ,
ஊறி லாஉருஅ சத்தி லேபிரமம் உண்டு தானுணர்வி லாததென்,
மாறி வாயுவும னாதி யானவையும் வந்தி டாமையினி லின்றெனில்,
ஈறு தானுடைய தாய தோபிரம மென்கொ லோஇவை இறப்பதே. 244

11. பற்ற தின்றிஉடல் நின்றி டும்பரமெ னப்ப கர்ந்தனைப ரிந்துடன்,
உற்று டம்புநரை திரைகள் நோய்சிறை உறுப்ப ழிந்திவையு முள்ளபின்,
குற்ற மென்றிதனை விட்டி டாதுவிட வென்ற லும்குலைவு கொண்டிடும்,
பெற்றி கண்டுமொரு பற்ற றும்பரிசு பேச வேஉளது னாசையே. 245

12. சோதி மாமணிகள் ஊடு போனதொரு நூலு மானநிலை சொல்லிடும்,
நீதி யால்மணிகள் பேத மாகிஒரு நூலின் நின்றமைநி கழ்த்தினாய்,
ஆதி தானொருவ னாகி யேபல அநந்த யோனில் அமர்ந்தவன்,
பேதி யாதநிலை பேசினாய் உலகு பேத மேஇலத பேதமே. 246

13. ஒத்து நின்றுலின் இன்ப துன்பமவை உற்றும் உற்றிடுவ தின்றெனும்,
பித்த உன்னரையின் உற்ற தேயிலது பெற்ற தின்றிலது பெற்றதேல்,
துய்த்த லென்னுறுதல் சீவ பாவமது சொல்லி னொன்றினுந்தோய் விலாமைநீ,
வைத்து நித்தமன வாக்கி றந்தபர மென்ன மானமிலை இன்னமே. 247

14. எங்கும் நின்றிடில் அவத்தை யின்றிடும் இசைந்தி டுங்கரண மென்னில்நீ,
அங்கு நின்றபரம் எங்கொ ளித்ததது நின்ற தேல்அவை அடங்கிடா,
இங்கு நின்றதொரு காந்த மானகல் இரும்பு சந்நிதிஇ யங்குநேர்,
தங்கி நின்றதெனில் நீங்கி மீளும்வகை தங்கி டாதுனுரை தப்பதே. 248

15. இருள்பொ திந்ததொரு பரிதி இவ்வுலகில் இசையில் இன்றுடலம் நானெனும்,
மருள்பொ திந்ததொரு பிரம மிங்குளது மருவி நின்றஉரு ஒருவியே,
தெருள்பொ திந்து பரம்நானெ னும்தௌ¤வு சென்ற போதுகதி யென்றிடும்,
பொருள்பொ திந்ததெனில் அமல னுக்குமலம் வருத லாலுளது புன்மையே. 249

16. சுத்த மானதுப ரத்தி னுக்கணைவ தின்று சுத்தமத நாதிநீ,
வைத்த மாயமுறு சித்(து) அசுத்தமுற மற்ற தற்கு மலம் வைத்தனை,
ஒத்த சீவன்மல கன்ம மாயையுறு கின்ற காரணமு ணர்ந்திடாய்,
பித்த னேவிறகி னிற்பி றப்பதெரி யென்னில்வே றுபொருள் பெற்றதே. 250

17. உன்னின் நியும் அநுபோக மென்றபொழு துற்றி டும் துவிதம் மற்றதிங்(கு),
என்னில் இல்லையெனில் இல்லை நீயுமறி வின்மை கண்டஇடம் உண்மையேல்,
மன்னு மோருணர்வு வந்தி டும்முணர்வெ லாமு மாயையெனில் மாயையே,
சொன்ன தோர்பிரம மாயி டும்பிரமம் மாயை யாய்அறிவு சோருமே. 251

18. ஆர ணங்கள் தரு தத்து வம்அசிப தங்க ளின்பொருள் அறிந்திடாய்,
கார ணம்அதுவும் நீயும் என்றிருமை கண்டு வேறதின்மை கருதிடாய்,
நார ணன்பிரம னாலும் நாடரிய நாய கன்கழல்கள் நண்ணிநீ,
ஏர ணைந்துபொலி சாத நங்கள் கொடு யோக ஞானமும் இயற்றிடே. 252


---திருச்சிற்றம்பலம்---

 

bot About Us | Policy | Contact Us | ©2018 Saiva Siddhanta
Back to Top