lingam saivasiddhantam natarajar science siva

சாத்திர நூல் 2 p - சிவஞான சித்தியார் (பரபக்கம்)

go to -> சுபக்கம்

அருள் நந்தி சிவாச்சாரியார்
விரும்பிய பதிகத்திற்கு செல்ல
பாடல் .

Go to Meikanda Saathiram
| 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 |
| 8 | 9 | 10 | 11 | 12 | 13 | 14 |

உண்மை விளக்கம் நூலை இங்கே சொடுக்கி பதவிறக்கம் செய்யவும்.


<< முந்தயப் பதிகம் | முகப்பு | அடுத்தப் பதிகம் >>

              எண்: 3    அவையடக்கம்
பண் :

திருச்சிற்றம்பலம்

1. மாலயன்மா மறைஅறியா ஆதி மார்க்கம் வையகத்தா கமம்வேத மற்று முள்ள,
நூலையெலாம் உணர்ந்திறைவன் கழலே நோக்கு நோன்மைஅருந் தவர்முன்யான் நுவலு மாறு,
வேலையுலா வுந்திரைகள் வீசி யேறி வேறேழு மொன் றாகி நின்ற போது,
சாலவுமான் குளப்பிடியிற் றங்கி நின்ற சலமதுதா னேரென்னுற் தன்மைத் தாலோ. 7

2. நீடுபுகழ் உலகுதனில் மைந்தர் மாதர் நேயமொடு தாம் பயந்த புதல்வர் வாயில்,
கூடுமொழி மழலையொடு குழறி ஒன்றும் குறிப்பரிதா யிடினுமிகக் குலவிப் போற்றி,
மாடு நமக் கிதுவென்று கொண்டு வாழ்வர் அதுபோல மன்னு தமிழ்ப் புலமை யோரென்,
பாடுகவிக் குற்றங்கள் பாரார் இந்நூல் பாராட்டா நிற்பர் அருட் பரிசி னாலே. 8


---திருச்சிற்றம்பலம்---

 





bot About Us | Policy | Contact Us | ©2017 Saiva Siddhanta
Back to Top