lingam saivasiddhantam natarajar science siva

சாத்திர நூல் 2 p - சிவஞான சித்தியார் (பரபக்கம்)

go to -> சுபக்கம்

அருள் நந்தி சிவாச்சாரியார்
விரும்பிய பதிகத்திற்கு செல்ல
பாடல் .

Go to Meikanda Saathiram
| 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 |
| 8 | 9 | 10 | 11 | 12 | 13 | 14 |

உண்மை விளக்கம் நூலை இங்கே சொடுக்கி பதவிறக்கம் செய்யவும்.


<< முந்தயப் பதிகம் | முகப்பு | அடுத்தப் பதிகம் >>

              எண்: 32    14. பாஞ்சராத்திரி மதம்
பண் :

திருச்சிற்றம்பலம்

1. ஆதியாய் அருவ மாகி அகண்டபூ ரணமாய் ஞானச்
சோதியாய் நின்ற மாயன் சுவேச்சையால் உருவு கொண்டு
நீதியார் கருணை யாலே நீள்கடல் துயின்று நூலும்
ஓதினா னென்று பாஞ்ச ராத்திரி உரைப்ப னுற்றே. 264

2. உந்தியில் அயனை ஈன்றும் அவனைக்கொண் டுலகுண் டாக்கி
அந்தநல் லுலக ழிக்க அரனையும் ஆக்கு வித்துத்
யூந்திடுஞ் சகத்தி னுக்குத் திதிகர்த்தா தானே யாகி
வந்திடும் தோற்றம் ஈறும் நிலைமையும் பண்ணும் மாயன். 265

3. மீன்ஆமை கேழல் நார சிங்கம்வா மனனாய் வென்றி
ஆனாத இராமர் மூவர் ஆயனாய் அளித்தான் கற்கி
தானாயும் வருவன் இன்ன மென்றவன் சாற்றித் தேவர்
கோனாயும் நிற்ப னென்று கூறுவன் குறிப்பி னோடே. 266

4. ஏழ்கடல் செலுவில் ஏற்றும் இருங்கிரி முதுகில் ஏற்றும்
தாழ்தலம் முழுதுங் கண்டும் தபநியன் உடல்பி ளந்தும்
வாழுல களந்தும் மன்னாய் மன்னர்க்கு மன்ன ராயும்
பாழ்பட உழறப் பாரும் நோக்கும்பின் பரியு மாயே. 267

5. பொய்கைவாய் முதலை வாயில் போதகம் மாட்டா(து)
ஐயனே நாதா ஆதி மூலமே என்ற ழைப்ப
உய்யயாம் பணிமால் ஓல ஓலவென் றோடிச் சென்று
வெய்யவாய் முதலை வீட்டிக் கரிக்கும்வீ டருளி னானே. 268

6. அலைகடல் கடைந்தும் வானோர்க் கமுதினை அளித்துந் தீய
கொலைபுரி அசுரர் தம்மைக் கொன்றுல கங்கள் காத்தும்
கலைமலி பொருளன் பர்க்குக் கருணையால் உரைத்தும் மிக்க
தலைமையில் நிற்பன் மாய னென்றும்பின் சாற்றி னானே. 269

7. மாயையாய் உயிராய் மாயா காரிய மாகி மன்னி
மாயையாற் பந்தஞ் செய்து வாங்கிடும் அவனா லன்றி
மாயைபோ காதென் றெண்ணி மாயனை வணங்கப் பின்னை
மாயைபோம் போனால் மாயன் வைகுண்டம் வைப்பனன்றே. 270


---திருச்சிற்றம்பலம்---

 

bot About Us | Policy | Contact Us | ©2017 Saiva Siddhanta
Back to Top