lingam saivasiddhantam natarajar science siva

சாத்திர நூல் 2 p - சிவஞான சித்தியார் (பரபக்கம்)

go to -> சுபக்கம்

அருள் நந்தி சிவாச்சாரியார்
விரும்பிய பதிகத்திற்கு செல்ல
பாடல் .

Go to Meikanda Saathiram
| 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 |
| 8 | 9 | 10 | 11 | 12 | 13 | 14 |

உண்மை விளக்கம் நூலை இங்கே சொடுக்கி பதவிறக்கம் செய்யவும்.


<< முந்தயப் பதிகம் | முகப்பு | அடுத்தப் பதிகம் >>

              எண்: 33    14. பாஞ்சராத்திரி மதம் - பாஞ்சராத்திரி மத மறுதலை
பண் :

திருச்சிற்றம்பலம்

1. ஆதிதா னாகில் ஆதிக்(கு) அந்தமுண் டாகும் அந்தக்
கோதிலான் இறைவ னென்று கூறிடும் வேதம் ஞானச்
சோதியாய் நின்றா னாகில் தோய்ந்திடான் மாயை ஞானத்
தீதிலா உருவ மென்னில் சேர்ந்திடான் தாதுச் சென்றே. 271

2. தாதுவா னதுஏ தென்னில் சங்கரன் பலிக்குச் செல்லத்
தீதிலாக் கோதண் டத்தைத் திறந்தவன் விட்ட போது
போதுவ துதிர மன்றோ போந்துமூர்ச் சித்து வீழ்ந்தான்
நாதனார் எழுப்பப் பின்னே நடந்தனன் கிடந்த வன்றான். 272

3. இச்சையால் உருவங் கொள்வன் அரியெனில் இகழ்வேள் விக்கண்
எச்சனாய் உண்ணப் புக்கங் கிருந்தஅன் றீச னாலே
அச்சமார் தலைய றுப்புண் டான்தலை யாக்கிக் கொள்ளான்
நச்சினார் போற்ற நாதன் நாரணன் தலைகொ டுத்தான். 273

4. நூலினை உரைத்த வேத நூலினை நுவலும் வண்ணம்
மால்அருள் செய்தா னென்றாய் மறைநீதி உலகி யற்கை
சாலவே தெரியாக தாகிக் கிடந்தநாள் சகத்து யார்க்கும்
ஆலின்கீ ழிருந்து வேதம் அருளினான் அறைந்தான் நூலே. 274

5. அயன்றனைப் பயந்தா னென்றாய் அரிஅயன் சிரஞ்சே திப்பப்
பயந்திடான் தலைமால் தானும் படைத்திடான் சிரத்தைக் கிள்ளும்
சயந்தரும் அரனைத் தந்தான் அயனென்கை தப்பே யன்றோ
தியங்கிடா துணராய் எல்லாஞ் சிவன்செய லென்று தேர்ந்தே. 275

6. சீவன்கள் சநநம் போலச் சிலர்வயிற் றுதித்த மாலைத்
தேவென்றே உலகங் காக்கச் சுவேச்சையாற் சநித்தா னென்பீர்
பூவன்பின் படைக்க மாட்டா தரனடி போற்ற வேதக்
கோவந்து முகத்தில் தோன்றிச் சிருட்டியைக் கொடுத்தல் கூறும். 276

7. நாரணன் அயனை யீன்றும் அயனும்நா ரணனை யீன்றும்
காரணம் ஒருவ ருக்கங் கொருவர்தாம் இருவ ருக்கும்
வாரண முரித்த வள்ளல் காரண னென்று மன்ற
ஆரணம் உரைக்கும் பக்கத் தவர்களும் அடைந்தா ரன்றே. 277

8. அழிப்(பு)அரி யேவ லென்றாய் அரிதனை யழிக்கும் அன்றங்(கு)
அழிப்பது தவிர்க்க மாட்டான் அங்கமும் அழித்தே பூண்டான்
அழிப்(பு)அரி யேவ லென்றபே கறைந்ததும் அழிந்த தன்றோ
அழித்திடும் அரனே ஆக்கம் நோக்கமும் ஆக்கு வானே. 278

9. வானம்கீழ் மண்ணு மெல்லாம் மாயனே காப்பா னென்றாய்
தான்அஞ்சும் கலந்த ரன்தன் உடல்கீண்ட சக்க ரத்தை
ஆன்அஞ்சும் ஆடு வான்பாற் பெற்றுல களித்த வார்த்தை
தானெங்கு மாகு மெல்லாம் சங்கரன் காப்பே யாமே. 279

10. மாலினார் சேலி னாராய் வாரிகள் அடக்கிக் கொண்டன்(று)
ஆலியா உலக மெல்லாம் அழிப்பவன் நானே என்னச்
சேலினார் தமைப்பி டித்துச் செலுவினை இடந்து கண்ணைச்
சூலியார் மேல ணிந்தான் சூலிதா னாகு மன்றே. 280

11. ஆமையாய் மேருத் தாங்கி அடைகலாய்க் கிடந்த போது
நாமெனா உலகா தார நாதனென் றகந்தை பண்ண
ஆமெனா ரன்று மென்னார் அமரரு மானார் பார்த்துத்
தாமநாள் ஆமையாரைத் தகர்த்தோடு தரித்தா ரன்றே. 281

12. எழுதலம் இடந்து பன்றி யாய்இருங் கொம்பி லேற்றுத்
தொழுதுல கிறைஞ்ச நின்ற சோதிநா னென்ற போதன்(று)
அழுதல மந்து வீழ அருங்கோடு பறித்த தணிந்தான்
கழுதல மந்த காட்டில் ஆடிடுங் கடவு ளன்றே. 282

13. இங்கடா வுளனோ மாலென் றிரணியன் தூணை எற்ற
உங்கடா மோத ரன்றான் உரநர சிங்க மாகி
எங்கடா போவ தென்னா உடல்பிளந் திறையா னென்ன
அங்கடா சிம்பு ளாகி யெடுத்தடர்த் தான் அரன்றான். 283

14. தானமென் றிரந்து செல்லத் தனக்குமூ வடிகொடுப்ப
வானமும் அளந்து கொண்டு மாபலி தன்னைப் பின்னை
ஈனமாஞ் சிறையி லிட்டான் இறையன்றொன் றீந்தோன் தங்கட்(கு)
ஊனஞ்செய் திடுவோர் தாங்கள் உத்தம ரல்ல ராகும். 284

15. மாயமான் தன்னைப் பொய்ம்மா னெனஅறி யாத ரக்கன்
மாயையி லகப்பட் டுத்தன் மலைவியைக் கொடுத்தான் தன்னை
மாயைக்குத் கர்த்தா வென்பை மதிகெட்டபே கவனைக் கொன்று
நாயனார் தமைப்பூ சித்தான் கொலைப்பாவ நணுகி டாதே. 285

16. பரசுடன் பிறந்தான் தானும் பத்தனாயப் பரசி னாலே
அரசறுத் தரனை நோக்கி அருந்தவம் பரிந்தான் அன்று
பரசிய பரசு ராமன் பலதேவ னுலக மெல்லாம்
உரைசெயும் உமையாள் கோனை உள்நினைந் தியோகி னின்றான். 286

17. ஓதிய வாசு தேவர் தமைஉப மணியு தேவர்
தீதிலா நோக்கஞ் செய்து சிவகரஞ் சிரத்திற் சேர்த்தி
ஆதிபா லடிமை யாக்க அரிஉடல் பிராணன் அத்தம்
ஈதெலாம் கொள்நீ என்றங் கிறைஞ்சினார் அறிந்தி டாயே. 287

18. பின்வரும் பரிதா னாகி அரியென்றாய் பின்பு வந்தால்
என்வரு மீச னாலென் றறிகிலோம் இவுளி யார்க்கு
முன்வரும் அவதா ரங்கள் முடிந்தமை அறிந்தா யன்றே
பொன்வரும் சடையி னான்தன் புகழெங்கும் புக்க தன்றே. 288

19. கைவரை மூல மேயோ எனக்கரிக் குதவுங் காட்டின்
மொய்வரை எடுத்தான் மூலம் ஆயிட வேண்டு மோதான்
ஐயனேமுறையோ என்றால் அரசனோ அங்குச் செல்வான்
வையகங் காப்பான்செய்கை வழக்கன்றோ ஊர்காப்பான்போல். 289

20. அன்றியும் ஆனை மாலுக் கடிமையாய் மூல மேயோ
என்றிடு மதனால் மால்தான் இறைவனென் றியம்ப வேண்டா
உன்றனக் கடிமை யானார் உன்னையெம் பெருமா னென்றால்
இன்றுநீ வணங்கு முன்றன் எம்பெரு மானோ நீயே. 290

21. ஞாலம்உண் டவனால் உண்டார் நல்லமு தமரர் என்றாய்
வேலைநஞ் செழமா லாதி விண்ணவர் வெந்து சென்ற
காலமின் றெமக்குக் காவாய் கடவுளே யென்ன நாதன்
ஆலமுண் டிலனேல் தேவர் அமுதமுண் டிடுவ தெங்கே. 291

22. அஞ்சியன் றரிதா னோட அசுரனைக் குமர னாலே
துஞ்சுவித் தொருபெண்ணாலே தாரகன் உடல்துணிப்பித்(து)
அஞ்சிடப் புரம்தீ யூட்டிச் சலந்தர னுடல்கீண் டோத
நஞ்சினை யுண்டு மன்றோ நாயகன் உலகங் காத்தான். 292

23. பார்த்தனார் இரதமேறிப் படைதனைப் பார்த்துச் சார்பைக்,
கூர்த்தஅம் பாலே எய்து கொன்ற சாளே னென்னத்,
தேர்த்தனி லிருந்து மாயை செய்துமால் கொல்லச் செப்பும்,
வார்த்தைநூ லாக்கிக் கொண்டாய் புரங்கொல் நூடல மதித்தி டாயே. 293

24. மாயைதான் உயிர்க ளாகா துயிர்கள்தாம் மாயை யாகா
மாயவன் இவைதா னாகான் இவைதானு மாய னாகயா
ஏயுமாம் அநாதி யாக இறைபசு பாச மென்றே
தூயவன் கலப்பி னாலே எல்லாமாய்த் தோன்று வன்காண். 294

25. பாசத்தைப் பசுக்கள் விட்டுப் பதியினை அடைய முத்தி
ஆசற்ற ஆக மங்கள் அறைந்திட அறிவின் றிங்கே
மாசற்ற மால்மா சாகி மாயையு முறுவ னென்னில்
கூசிப்பின் கொள்ளார் நல்லோர் உனக்காமிக் குழப்பு நூலே. 295

26. பிரமம்நா னென்ற போது பிரமனோ டரியுங் கூடிப்
பரமனார் இகலி டாமே பார்த்திடர் பண்ணி நின்ற
உரமனார் அழலு ரூபம் தன்னையு முணர மாட்டான்
கரமனாள் திகிரி ஏற்றான் கடவுளென்றறைவதென்னே. 296

27. தோரி இறையன் றென்றே சிவமுனி ததீசி யோடே
போர்புரிந் திகல மாலைப் புக்கவன் பிடித்த டித்து
மார்பினி லுதைத்து மால்தன் சக்கரம் வயிற்றில் வைத்திட்(டு)
ஏர்மலி படைப டைத்திட் டரிபட வெறிந்தா னன்றே. 297

28. சூலிகாண் இறைமால் அல்லன் சூலியைத் தொழுந்துயர் வாசன்
மாலினார் மார்மி திப்பத் திருமறு மார்ப னாகி
நூலினார் மார்பன் நோன்றாள் பட்டிடஞ் சுத்த மென்று
பாலினார் கடலான்ஆங்கே பரிவொடும் திருவை வைத்தான். 298

29. தவகுண னாய்மால் சென்று தீவியைள் சக்க ரத்தால்
அவகுணஞ் செய்தன் றோடப் பிருகுவந் தவனைப் பார்த்துச்
சிவனடய தறியே னாகில் இதுசெய்தோன் செறிகப் பத்துப்
பவமென மொழிய மாலும் பயப்பட்டுப் பதறி வீழந்தான். 299

30. பயப்பட்டுப் பரனைநோக்கித் தவம்பண்ணப் பரனும்தோன்றி
நயத்தஞ்ச லென்று வேண்டிற் றென்னென நார் ணன்தான்
பெயர்த்தருள் பிருகு சாப மெனஅன்பன் பிருகு வென்ன
உயர்கொள்நீ பவந்தோ றென்ன ஓமென்றான் உலக நாதன். 300

31. இப்படிப் பிருகு சாபத் தீரைந்து பிறப்பின் வீழ்ந்து
மெய்ப்படு துயர முற்று வருபவன் விமலன் அல்லன்
எப்படி யானுஞ் சொன்னேன் இறைஅரி அல்ல னென்றே
மைப்படி கண்டன் அண்டன் மலரடி வணங்கி டாயே. 301


---திருச்சிற்றம்பலம்---

 

bot About Us | Policy | Contact Us | ©2018 Saiva Siddhanta
Back to Top