lingam saivasiddhantam natarajar science siva

சாத்திர நூல் 2 p - சிவஞான சித்தியார் (பரபக்கம்)

go to -> சுபக்கம்

அருள் நந்தி சிவாச்சாரியார்
விரும்பிய பதிகத்திற்கு செல்ல
பாடல் .

Go to Meikanda Saathiram
| 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 |
| 8 | 9 | 10 | 11 | 12 | 13 | 14 |

உண்மை விளக்கம் நூலை இங்கே சொடுக்கி பதவிறக்கம் செய்யவும்.


<< முந்தயப் பதிகம் | முகப்பு | அடுத்தப் பதிகம் >>

              எண்: 7    1. உலகாயுதன் மதம்
பண் :

திருச்சிற்றம்பலம்

1. இந்திர புரோகிதன் இயம்பும்ஒரு நூலின்
தந்திர மெனாதறிவி னோட்ருளி லாமல்
சந்தணை புயத்துமண மாலைகள் தயங்க
உந்தியுல கத்திலுல காயத னுரைப்பான். 12

2. ஈண்டளவை காட்சிமன மாதிஇரு மூன்றாய்
வேண்டும்அனு மானமுத லானபல வேண்டா
பூண்டபொருள் பூதமவை புகழ்கடின சீதந்
தீண்டரிய வெம்மைசல னத்தினொடு சேர்வே. 13

3. சாற்றுபெய ரானவை தலம்புனல் கனற்பின்
காற்றுமென லாம்இவை கலந்தகுண மோதின்
நாற்றம்இர தம்உருவம் நற்பரிச மாகும்
போற்றுமிவை நித்தஇயல் பாமிவை புணர்ப்பே. 14

4. ஒத்துறு புணர்ச்சியின் உருக்கள்பல வாகும்
வைத்துறு கடாதிபல மண்ணின்வரு மாபோற்
புத்திகுண நற்பொறி புலன்களிவை யெல்லாம்
இத்தில்வரும் நீரினில் எழுங்குமிழி ஒத்தே. 15

5. பூதமதின் ஒன்றுபிரி யப்புலன் இறக்கும்
நீதியினின் நிற்பன நடப்பனவும் முற்போல்
ஓதும்வகை யாகிஉறு காரியம் உலந்தால்
ஆதியவை யாம்இதனை யறிவதறி வாமே. 16

6. இப்படி யன்றிக் கன்மம் உயிர்இறை வேறுண் டென்று
செப்பிடும் அவர்க்கு மண்ணோர் செய்திடுங் குற்ற மென்னோ
ஒப்பிலா மலடி பெற்ற மகனொரு முயற்கொம் பேறித்
தப்பில்ஆ காயப் பூவைப் பறித்தமை சாற்றி னாரே. 17

7. சேய்திடும் கன்ம மெல்லாம் செய்தவர் தம்மைப் பற்றி
எய்திடு மென்னில் இங்கே மாய்ந்திடும் ஏய்வ தெங்ஙன்
மெய்தரு தூலங் கெட்டுச் சூக்கமாய் மேவு மென்னில்
ஐயனே தீபம் போனால் அதனொளி யாவ துண்டோ. 18

8. மாய்ந்துபின் வயலி லிட்ட வைதழை பலிக்கு மாபோல்
ஏய்ந்திடும் கன்ம மென்னில் இட்டிடத் திசையும் மேனி
ஓய்ந்துவந் தவரை உண்ணப் பண்ணுஞ்சோ£ றுதரத் தற்றால்
வாய்ந்திடும் மலம் வயிற்றிற் கொண்டிடும் வழக்கு வைத்தாய். 19

9. உருவமும் உணர்வும் செய்தி ஒத்திரா கன்மம் என்னின்
மருவுகை விரல்கள் தம்மின் வளர்வுடன் குறைவுண் டாகி
வருவதிங் கென்ன கன்மம் செய்துமுன் மதியி லாதாய்
பெருகுபூ தங்கள் தம்மின் மிகுகுறைப் பெற்றி யாமே. 20

10. இன்பொடு துன்ப மெல்லாம் எய்துவ கன்ம மென்னில்
நன்புனல் சந்த னாதி நணுகவும் அணுக வொண்ணா
மின்பொலி அழலி னோடு மேவுவ நன்மை தீமை
என்செய்த தியம்பி டாய்நீ இவையெலாம் இயல்ப தாமே. 21

11. காயத்தின் குணம தன்றிக் கண்டதான் மாவுண் டாயின்
மாயத்திற் சொல்லி டாதே மனமுதல் ஆறி னுக்கும்
நேயத்த தாக வேண்டும் அன்றியே நிகழ்த்து முண்மை
தேயத்தின் முயற்கொம் பெல்லை செப்பு வோர்செய் தியாமே. 22

12. அருவமே இறைவ னாகில் அறிவின்றா காய மாகும்
உருவமே யென்னிற் பூதக் கூட்டத்தில் ஒருவ னாகும்
மருவிய இரண்டுங் கூடி நிற்பவன் என்னின் மண்மேல்
இருவிசும் பொருகல் லேந்தி நிற்குமோ இயம்பி டாயே. 23

13. பூதத்தே அன்ன மாகி அன்னத்தால் உடம்பு புத்தி
பேதித்தே மனமு மாகிப் பிரிந்தமை திருந்த இன்று
வேதத்தே யுரைக்க என்னோ மேதினி யோர்க ளெல்லாம்
கேதத்தே வீழ்ந்து வேறு நெறியல் கேட்கு மாறே. 24

14. போகத்தை மண்ணிற்கண்டு விட்டுப்போய் விண்ணிற்கொள்ள
மோகத்த ராகி அல்லல் முயன்றுழல் மூட ரெல்லாம்
தாகத்தில் தண்ணீ கண்டு விட்டுப்போய்த் தண்ணீர் கேட்டுச்
சோகித்தே உண்ண வெண்ணித் துயருறு வார்க ளந்தோ. 25

15. வாழவே வல்லை வாமி வலக்கைதா வென்னு யிர்க்குத்
தோழனீ யுன்னை யொப்பார் சொல்லிடி னில்லை கண்டாய்
கோழைமா னுடர்தீ தென்னுங் கொலைகள வாதி கொண்டே
சூழும்வார் குழலார் மொய்ப்பச் சுடரெனத் தோன்றி னாயே. 26

16. ஈசனார் அயனார் மாலோ டிந்திரன் தெரிவை மார்பாற்
பேசொணா வகைக ளெல்லாஞ் செய்தன்றோ பெரியயோரானா£
ஆசையால் அவர்போல் நாமும் ஆகவே வேண்டு மாயின்
வாசமார் குழலா ரோடும் வல்லவா கூடி வாழ்மின். 27

17. தையலார் ஊட லாடத் தாமவ ரோடுங் கூடிச்
செய்யதா மரையை வென்ற சீறடி செம்பஞ் சூட்டி
மெய்யெலாம் பாதஞ் சூடும் வேடத்தார் மெய்யிற் கூடா
மையல்மா னுடர்பொய் மார்க்க வேடத்தே மாய்கின் றாரே. 28

18. வாசமார் குழலி னார்கள் மணிஅல்குல் தடத்தே மூழ்கி
நேசமார் குமுதச் செவ்வாய் அமுதினை நிறைய உண்டு
தேசுலா மணிமென் தோள்மேற் சேர்ந்துவீற் றிருந்திடாதே
மாசுலா மனத்தோரெல்லாம் மறுமைகொண் டழிவர் மன்னோ. 29

19. மதிநிலா நுதலா ரோடு மணிநிலா முன்றி லேறி
முதிர்நிலா வெறிப்பச் செவ்வாய் இளநிலா முகிழ்ப்ப மொய்த்த
கதிர்நிலா வடங்கொள் கொங்கைக் கண்கள்மார் பகலமூழ்கும்
புதுநிலா வியநன் போகம் விடுவர்புன் சமயத் தோரே. 30

20. ஊடுவ துணாவ துற்ற கலவிமங் கையரை யுள்கி
வாடுவ தடியில் வீழ்ந்து வருந்துவ தருந்த வம்பின்
கூடுவ துணர்வு கெட்டுக் குணமெலாம் வேட்கை பேயாய்
நீடுவ தின் முத்தி யித்தில்நின் றார்கள் முத்தர். 31

21. வீட்டினை உளதென் றோடி மெலிவதிங் கென்னை வீடு
காட்டினோர் கண்டோர் கேட்டோர் கரியவை உண்டேல் காட்டீர்
நாட்டினில் அரச னாணைக் கிசையவே நடந்து நாளும்
ஈட்டிய பொருள்கொண் டிங்கே இன்பத்துள் இசைந்தி டீரே. 32


---திருச்சிற்றம்பலம்---

 

bot About Us | Policy | Contact Us | ©2018 Saiva Siddhanta
Back to Top