lingam saivasiddhantam natarajar science siva

சாத்திர நூல் 2 p - சிவஞான சித்தியார் (பரபக்கம்)

go to -> சுபக்கம்

அருள் நந்தி சிவாச்சாரியார்
விரும்பிய பதிகத்திற்கு செல்ல
பாடல் .

Go to Meikanda Saathiram
| 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 |
| 8 | 9 | 10 | 11 | 12 | 13 | 14 |

உண்மை விளக்கம் நூலை இங்கே சொடுக்கி பதவிறக்கம் செய்யவும்.


<< முந்தயப் பதிகம் | முகப்பு | அடுத்தப் பதிகம் >>

              எண்: 8    1. உலகாயுதன் மதம் - உலகாயதன்மத மறுதலை
பண் :

திருச்சிற்றம்பலம்

1. உள்ள தாவது கண்ட தென்றுரை கொண்ட தென்னுல கத்துநீ,
பிள்ளை யாய்வளர் கின்ற நாளுனைப் பெற்ற தாயொடு தந்தையைக்,
கள்ள மேபுரி கால னாருயி ருண்ண வின்றொரு காளையாய்,
மௌ¢ள வேயுள ரென்று கொண்டு விரும்பு மாறு விளம்பிடே. 33

2. இடித்து மின்னி இருண்டு மேக மெழுந்த போதிது பெய்யுமென்,
றடுத்த தும்அகில் சந்த முந்தி அலைத்து வார்வுனல் ஆறுகொண்,
டெடுத்து வந்திட, மால்வ ரைக்க ணிருந்து கொண்டல் சொரிந்த தென்று,
முடித்த தும்இவை காட்சி யன்றனு மான மென்று மொழிந்திடே. 34

3. காண்ட லோஅநு மான மாவதும் காட்சி மன்னதும் காட்சியேல்,
பூண்ட பூத உடம்பி னுள்எழு போத மென்கொடு கண்டனை,
மாண்ட வாயின் மனங்கொள் ஞான முணர்ந்த தும்அநு மானமென்,
றீண்டு பூத மியைந்த திவ்வுடன் என்ப தென்பிர மாணமே. 35

4. பழுதி லாமறை கண்ட நூல்பழு தின்றி யுண்டது பாரின்மேன்,
மொழிவர் சோதிட முன்னி யின்னது முடியு மென்பது முன்னமே,
அழிவி லாதது கண்ட னம்அவை யன்றி யுஞ்சில ஆகமங்களின்,
எழுதி யோர்படி என்று கொண்டிரு நிதியெ டுப்பதும் எண்ணிடே. 36

5. பூத மானவை நித்த மென்று புகன்ற தென்னை உருக் களாய்,
ஆத லோடழி வாகு மாதலி னாக்கு வோரவர் வேண்டிடும்,
காத லோடு கடாதி மண்கொ டியற்று வோருளர் கண் டனம்,
சீத நீரி லெழுந்த கொப்புள் நிகழ்ந்த மாருதச் செய்கையே. 37

6. நீரின் வந்தெழு கொப்புள் நீரது வாயெ ழும்நிகழ் பூதமும்
ஓரின் வேறுணர் வாயெ ழாஅவை பூத மாகி உதித்திடும்
தேரின் நூறடை காய்செ றிந்தவை சேர வேறு சிவப்பெழும்
பாரி னிற்பிரி யாது புந்தி பழிப்பு டம்பு கிடக்கவே. 38

7. கூறு சேர்வையின் வந்த போது சிவப்பெனும் குணம் ஒன்றுமே,
வேறு வேறு புலன்கு ணங்கள் உடற்கண் வந்து விளைந்ததென்,
நூறு காயடை கூடும் வேறொரு வன்ந னாலென நோக்கிநீ,
தேறு பூத செயற்கும் வேண்டும் ஒருத்த னென்று தௌ¤ந்திடே. 39

8. ஆன ஐம்பொறி உண்டி நித்திரை அச்சம் மைதுனம் ஆதியாய்,
ஊனில் வந்திடு முன்பி லாதவை யென்று ரைக்கின் உலூதைபோல்,
வானின் வந்திடும் மாதர் ஆண்அலி யாகி மானுடர் ஆதியாய்,
யோனி பன்மையும் இன்று பூதம் உறும்பு ணர்ச்சியொர் தன்மையே. 40

9. ஐந்து நான்கொரு மூன்றி ரண்டுடன் ஒன்ற தாய்உட லங்களின்,
வந்தி டாவுணர் விந்தி யங்களும் வன்ன பன்மையும் இன்மையாம்,
புந்தி யோடிய வன்ன போக குணங்கள் பூத புணர்ச்சிதான்,
தந்தி டாதிவை பேத மாயிட வந்த வாவினை தந்தவா. 41

10. அறிவு பூதம தென்னில் வேறு புறத்த தறிந்தமை கண்டடிலம்
செறிவு தான்உ டலத்தெ னில்சவ மான போதுடல் பேதருமோ
குறிகொ ளாதுடல் வாயுவானது கூடி டாமையின் என்னின்நீ
பிறித ராதுயிர் நிற்க ஞானம் உறக்க மென்பிற வாததே. 42

11. அறிவு டற்குண மென்னில் ஆனைய தததி அந்தம் எறும்பதா
உறுமு டற்பெரி தான வற்றில் உதித்தி டும்பெரி தாகவே
சிறுவு டற்செறி ஞான மும்சிறி தாயி டும்பரி ணாமமும்
பெறுமு டற்சிறி தாவ தென்பெரி தாவதென்சில பேசிடே. 43

12. போத மம்மெலி வவகி யும்மலி பூத மானவை கூடலிற்
பேத மோடு பெருத்து டற்கள்சிறுத்த பெற்றிமை என்றிடின்
ஓது டற்பெரி தான வுஞ்சிறி தாயி டாசிறி தானவும்
நீதி யிற்பெரி தாயி டாமுனம் உள்ள தன்மையின் நீடுமே. 44

13. இயல்பு காண்இவை யென்னில் வேறிசை பெண்ணோ டாணிரு தன்மையாஞ்,
செயல்கொ ளாஇவர் செய்தி காரண மாக வந்து செனிப்பதென்,
இயல்ல தாமுடல் பூத காரிய மாவ தும்மில்ஆஆ யாகுமால்,
மயல தாம்பிஆஆ யாலொ ருத்தன் வகுத்த தன்மையின் வந்ததே. 45

14. கார ணம்அவை யென்ற தென்னை கடாதி போல்நிகழ் காரியம்,
நேர ணைந்து சமைந்து நின்றிடும் என்ப தும்அது நேர்கிலோம்,
போர ணைந்திடு மொன்றொ டொன்று பொருந்து மாகில் வருந்தியும்,
நீர ணைந்தொரு தீயி னின்றது கண்ட தாயின் நிகழ்த்திடே. 46

15. பூத மேவு புணர்ச்சி யேபுரி காய காரண மாகுமேல்
காதல் ஆணொடு பெண்ணும் மேவு புணர்ச்சி ககரண மாவதெ
ஆதி யேஉல கத்தில் ஆணொடு பெண்ணு மாயணை காரியம்(ன்)
நாதன் நாயகி யோடு கூடி நயந்த காரணம் என்பரே. 47

16. கந்தம் வெம்மை கலந்தி டும்புனல் கன்மம் என்செய்த தென்றனை
சந்த னந்தழல் சார நீரிரு தன்மை யுற்றிடு மாறதோர்
தந்த கன்மம் இரண்ட ணைந்து தருஞ்சு கத்தொடு துக்கமும்
சிந்தி யாஎழு சீவ னுற்றிடும் அஅறு டற்கிலை தேறிடே. 48

17. இன்பம் எய்தி இருந்து நீவினை இல்லை இங்கியல் பென் றிடில்,
துன்பம் எய்திடு வானென் மற்றிது சொல்லி டாய் சொல வல்லையேல்,
முன்பு செய்திடு கன்ம மென்றறி கன்ம மும்முதல் வன்னறிந்,
தன்பி னாலுறு விக்கு மப்பயன் ஆங்க மைப்பொ டநாதியே. 49

18. அநாதி யேலமை வின்றெ னின்மல மாஆஆ கன்மம் அணுச்சிவன்
அநாதி கன்மம் அணுக்கள் செய்ய அறிந்து கன்மம் உடற்செயா
அநாதி காரிய மாமு டற்கள் அசேத னம்மணை யாவறிந்(து)
அநாதி யாதி அமைக்க வேண்டும் அமைப்பி னோடும் அநாதியே. 50

19. காணொ ணாகர ணங்க ளுக்குயிர் கண்டி டாமையின் இன்றெனில்
காணு மோகடங் கண்ட கண்ணினைக் கண்டு நிற்பதுங் கண்ணதே
காணொ ணாதுயிர் தானு மிப்படி கண்டி டுங்கர ணங்களைக்
காணொ ணாகர ணங்க ளுக்குயி ருண்மை யாவதுங் கண்டிடே. 51

20. அங்கி யானது தானு மொன்றை அணைந்து நின்று நிகழ்ந்திடும்
பங்கி யாதுயிர் தானு மிப்படி பற்றி யல்லது நின்றிடா(து)
எங்கு மார்தயி லத்தை யுண்டெழு தீப மான தெரிந்திடும்
அங்க தாம்உடல் நின்று கன்மம் அருந்தி யாருயி ராவதே. 52

21. அறிவு தானுட லத்தின் வேறது வாயி றந்து பிறந்திடின்
அறிவு முன்புள திங்கு வந்தும் அறிந்தி டாமைய தின்றெனின்
அறிவை யோகன வத்து நீநன வத்தை அன்று தரத்திருந்
தறியு மவ்வறி வோம யட்ககறி வாத லாலறி யாதுகாண். 53

22. இறந்தி டும்அறி வேபி றந்திடு மென்ப திங்கிசை யாதெனின்,
உறங்கி டும்பொழு தின்றி நின்றுணர் விங்கு தித்திடு மாறதோர்,
பிறந்த இவ்வுடல் போக வேறுடல் பின்பு வந்தமை பேசிடின்,
மறந்தி டுங்கன வத்தின் வேறு டல் வந்த வாறு மதித்திடே. 54

23. கரணம் வாயு விடத்த டங்க அடங்கி வந்தெழு காரியம்
மரண மான விடத்து மற்றிவை மாய்ந்து பின்பு வருஞ்செயல்
கிரண மார்கலை கெட்டு திப்ப இறப்பி னோடு பிறப்பையும்
தரணி யோர்கள் மதிக்கு ரைப்ப ருயிர்க்கு மிப்படி சாற்றிடே. 55

24. பூத மானவை காரி யங்கள் பொலிந்து மன்னி அழிந்திடும்
ஆத லால்ஒரு நாதன் இங்குளன் என்ற றிந்துகொள் ஐயனே
பேத மான கடாதி மண்ணினில் வந்த வாறு பிடித்திடில்
போதி லாத குலால னால்வரு செய்கை யென்று குறிப்பரே. 56

25. வேதன் நாரணன் ஆர ணம்மறி யாவி ழுப்பொருள் பேதைபால்,
தூத னாயிரு கால்ந டந்திடு தோழன் வன்னம செய் தொண்டனுக்(கு),
ஆத லாலடி யார்க ளுக்கௌ¤ யான டிக்கம லங்கள்நீ,
காத லாலணை ஈண்டன் வேண்டின இம்மை யேதருங் கண்டிடே. 57

26. பொன்கு லாவு மணிக்க லன்கள் மலம்பு கில்கை பொருந்திடா,
மின்கு லாம்இடை யார்கள் தாமுல கத்தின் வேட்கை விடும்பொருள்,
புன்பு லால்மல மூத்தி ராதி பொசிந்து நாறு புலைக்கலம்,
என்கொ லாமிவர் மேல்வி ழுந்த திவற்றின் என்பெற எண்ணியே. 58

27. தோலி ரத்தம் இறைச்சி மேதை யெலும்பு மச்சை சுவேதநீ
ராலெ டுத்த முடைக்கு ரம்பை அழுத்தி னோடு புழுக்குழாம்
நூலொ ழுக்கிடு கோழை ஈரல் நுரைக்கு மூத்திர பாத்திரம்
சேல டர்த்தகண் ணார்க ளென்பது தேர்ம லத்திரள் திண்ணமே. 59

28. ஆசை யுற்றுழல் சூக ரங்கள் அசுத்த மேவி அளைந்துதின்
றேசு கித்தன வாயி டுஞ்சுகம் ஏழை யோடுறும் இன்பம் நீ
மாச தற்றொளிர் நித்த சுத்த வளந்த ருஞ்சுக வாரிகாண்
ஈச னுக்கடி மைத்தி றத்தின் இசைந்து நாம்பெறும் இன்பமே. 60

29. குரோத மேகுண மாயி ருந்தவர் சாந்தி நன்மை குறிக்கொளார்
அராக மேயணை வார்க ளாசை அறுத்த இன்பம் அறிந்திடார்
பராவு தேவர் பராவு தூய பராப ரன்அடி பற்றிநீ
விராவு மெய்யில் விடாத இன்பம் விளைந்திடும் இதுமெய்ம்மையே. 61

30. காம மாதி குணங்க ளைச்சுக மென்று கொண்டனை காதலால்
தூம மாரழல் அங்கி சீத மலிந்த போது சுகந்தரும்
நாம மார்தரு சீதம் வெம்மை நலிந்த பேபது தருஞ்சுகம்
சேச மாகிய இன்ப மாமிகு தெய்வ நன்னெறி சேரவே. 62

31. படிக்கு நூல்கள் சிவாக மம்பசு பாசமொடு பதித்திறம்,
எடுத்தி யம்புவ தீசன் வார்கழ லேத்தி டுந்தொழி லென்றுமே,
விடுத்தி டும்பொருள் காம மாதிகள் வேண்டி டும் பொரு ளீண்டருள்,
முடித்து மும்மலம் விட்டு நின்மல னோடு நின்றிடன் முத்தியே. 63


---திருச்சிற்றம்பலம்---

 

bot About Us | Policy | Contact Us | ©2018 Saiva Siddhanta
Back to Top