lingam saivasiddhantam natarajar science siva

சாத்திர நூல் 2 p - சிவஞான சித்தியார் (பரபக்கம்)

go to -> சுபக்கம்

அருள் நந்தி சிவாச்சாரியார்
விரும்பிய பதிகத்திற்கு செல்ல
பாடல் .

Go to Meikanda Saathiram
| 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 |
| 8 | 9 | 10 | 11 | 12 | 13 | 14 |

உண்மை விளக்கம் நூலை இங்கே சொடுக்கி பதவிறக்கம் செய்யவும்.


<< முந்தயப் பதிகம் | முகப்பு | அடுத்தப் பதிகம் >>

              எண்: 9    2. சௌத்திராந்திகன் மதம்
பண் :

திருச்சிற்றம்பலம்

1. நீதியார் வேத நூலின் நெறியலா அறங்கள் நாளும்
ஓதியோர் ஐந்து சீலம் உடையராய் உடல மூடிப்
போதிநீள் மரத்தின் மேவும் புத்தர்நால் வரினும் வைத்துச்
சாதிதான் இலாத கொள்கைச் சௌத்திராந் திகன்முன் சாற்றும். 64

2. முழுதுணர்ந் துலகிற் கோறல் முதற்செயல் முணிந்து மற்றும்
பழுதிலா அருளி னாலே பரதுக்க துக்க னாதித்
தொழுதுவா னவரும் போற்றத் தொல்பிட கங்க ளான
வழுவிலா கமங்கள் சொன்ன மாதவன் நநத னாவான். 65

3. மருவிய அளவை காட்சி மானமென் றிரண்டி வற்றறல்
கருதிய பொருள்கள் ஞான ஞேயமாய்க் கணத்திற் பங்கம்
வருமுரு அருவம் வீடு வழக்கென நான்க தாதித்
தருமவை ஒறி ரண்டாய்த் தான்விரிந் தெட்டி னாமே. 66

4. உருஇயல் பூத மோடங் குபாதாய ரூப மாகும்
அருஇயல் சித்தம் கன்மம் என்றிரண் டாகும் வீட்டின்
மருவியல் குற்றம் கந்த மெனவழங் கிடும்வ ழக்கின்
இருஇயல் உள்ள தோடங் கில்லதாம் இயம்புங் காலே. 67

5. மண்புனல் அனல்கால் பூதம் வலிகந்தம் இரதம் வன்னம்
எண்டரும் உபாதா யம்தா னிவைஇரு நான்குங் கூடி
உண்டொரு பொருளு ரூபம் உறுபுலன் உபாங்க மோடக்
கண்டது சித்தம் கன்மம் நன்றுதீ தென்றட காணே. 68

6. குற்றவீ டராக மாதி குணங்களைக் குறைதத லாகும்
மற்றவீ டுருவ மாதி ஐந்தையு மாய்த் லாகும்
சொற்றருந் தொகைதொ டர்ச்சி மிகுத்துரை யென்று மூன்றாய்
உற்றிடும் வழக்கி ரண்டும் ஒன்றுமூன் றாகி ஆறாம். 69

7. ஒருவனென் றோதப் பட்டான் உருவாதி ஐந்தும் கூடி
வருபவ னென்று ரைத்தல் தொகையுண்மை வழக்க தாகும்
உருவமங் காதி யாய ஐந்தையும் ஒருவன் இன்று
தருவது தொகையினின்மை வழக்க தாஞ்சாற் றுங்காலே. 70

8. காரண காரி யத்தின் தொடர்ச்சியாய்க் கால மூன்றின்
சோர்வறத் தோன்றும் கெட்டு வழியென்கை தொடர்ச்சி யுண்மை
ஓர்தரின் ஒருவ னேஎக் காலத்தம் உள்ளா னென்று
தேர்வது தொடர்ச்சியின்மை வழக்கதாம் செப்புங்காலே. 71

9. தோன்றிய பொருள்க ளெல்லாம் நாசமாம் என்று சொல்லும்
மாற்றமுன் னுரைத்தல் மற்றை மிகுத்துரை வழக்கி னுண்மை
போற்றிய பொருள்கண் கட்குப் போனது அஅ£ல்மு திர்ந்து
வேற்றுமைப் பட்ட தென்கை மிகுத்துரை இல்வழக்கே. 72

10. உள்வழக் கில்வ ழக்குள் ளதுசார்ந்த உள்வ ழக்கோ(டு)
உள்ளது சார்ந்த இன்மை வழக்குடன் இன்மை சார்ந்த
உள்வாக் கின்மை சார்ந்த இல்வழக் கென்றோ ராறாம்
உள்வழக்குள துண்டென்கை முயற்கோடின் றில்வழக்கே. 73

11. உணர்வுசார்ந் துணர்வு திக்கை யுள்ளது சார்ந்த வுண்மை
உணர்வுபி னின்றா மென்கை யுள்ளது சார்ந்த இன்மை
உணர்வுமுன் பின்றித் தோன்றல் இல்லது சார்ந்த வுண்மை
உணரினில் லதுசா ரின்மை உள்ளங்கை உரோம நாணே. 74

12. சொன்னநால் வகையு மின்றிச் சொல்லிடும் பொருள்க ளெல்லாம்
என்னையோ அறிகி லோம்பித் தேறியோ வானம் ஆன்மா
மன்னுகா லங்கடிக்கு மனமுடன் வாக்கி றந்திட்(டு)
உன்னுமோர் இறையும் உண்டென் றுரைப்பது நித்த மன்றே. 75

13. ஈங்குவவன் செயற்கு வாரா இயம்பிய பொருள்க ளெல்லாம்
தாங்குவான் உளதே யென்னில் தரித்திடா தருவ மாதல்
ஓங்குவான் ஓசைக் ககதி யெனிலதங் குருவின் கூட்டம்
நீங்குவா னின்றி எங்கும் நின்றதேல் எங்கு மின்றே. 76

14. போதமுண் டுயிர்கட் கென்னில் வாயிலைம் புலனும் நூலும்
ஆய்தலின் றொட்டுத் தீட்டுக் கலப்பினில் அறியு மென்னில்
ஏதமுண் டிரவிற் பச்சை சிவப்புடன் ஏய்ந்த போது
கேதநின் றென்னோ என்னும் ஐயமுன் கிடத்த லாலே. 77

15. அறிந்திடா வாயி லின்றேல் அறிவின்றாம் ஐந்தும் பற்றி
அறிந்திடும் அறிவுண் டென்னில் ஐந்தினும் அறிவொன் றாக
அறிந்திட வேண்டும் சார்பின் அறிந்திடு மென்னில் உன்னை
அறிந்திலோம் புத்த னென்றிங் கழகிது சொன்ன வாறே. 78

16. ஞானஞே யங்க ளன்றி ஞாதிரு என்று சொல்ல
ஆனதிங் கறிவேவ அன்றோ அன்றெனில் அவனி போலும்
தாதிங் கறிவே என்னில் சமைந்திடு நன்ப ருப்புப்
போனக மதற்குத் தானே கறியெனப் புகன்ற தாமே. 79

17. உயிரினை அருவ தென்னில் உருவுடன் உற்று நில்லா(து)
உயிரினை உருவ தென்னில் உடலினில் உடல டங்கா(து)
உயிரினை அணுவ தென்னில் உடல்பல துவார மோடும்
உயிரினை நித்த மென்னில் உணர்வுத யாந்த மின்றே. 80

18. எங்குமாய் நின்ற தான்மா என்றிடின் எங்கும் இன்றாம்
தங்கிடு நிறைவு தத்தம் சரீரங்கள் தோறு மென்னின்
மங்கிடும் உடலத் தோடே வடிவினில் ஓரிடத்தே
அங்கது நின்ற தென்னில் அடிமுடி அறிவின் றாமே. 81

19. சாற்றிய காலம் இங்குத் தங்கிய வாறி தென்னை(னில்)
தோற்றுவித் தளித்துப் போக்கும் தொழிலவை கால மென்
போற்றிய பொருளில் புக்குப் பிணங்கிடும் பொருட்பின் இன்றாம்
தேற்றிய இல்வ ழக்குத் திரவியத் தியல்பி னாமே. 82

20. எனக்குநீ கிழக்கி ருந்தா யாகின்மேற் கென்றா யென்பால்
எனக்குமேற் கிருந்தான் என்பாற் கிழக்கென இயம்புந் திக்குத்
தனக்குநாம் கொள்வ தெப்பால் சாற்றிடாய் இல்ல ழக்குத்
தனக்குள தாகும் உண்மை தானில தாகு மன்றே. 83

21. உலகினைப் படைத்தான் என்றாய் ஒருவனிங் குள்ள தாயின்
உலகினைப் படைக்க வேண்டா இல்லையேல் படைக்க வொண்ணா(து)
உலகினுக் குபாதா நந்தான் உள்ளதாய்க் காரி யத்தாம்
உலகினைப் படைக்கில் அங்கும் உளதில தாவ துண்டே. 84

22. உள்ளது கடாதி போல உதிப்பித்தான் என்று ரைக்கின்
மௌ¢ளவே யெங்கு நின்று விதித்தனன் உலகின் மீது
வள்ளல் தான்நின்றா னென்னில் வந்ததாம் உலக முன்னே
தள்ளிடா தெங்கு நிற்கின் எங்குமுன் தந்த தாமே. 85

23. இல்லது கருணை யாலே இயற்றினன் இறைவன் என்னில்
கொல்லரி உழுவை நாகங் கூற்றமுங் கொண்டு தோற்ற
வல்லவன் கருணை யென்னோ வலியினால் வேண்டிற் றெல்லாம்
பல்கவே படைத்தா னாயிற் பித்தரைப் பணிந்தி டாயே. 86

24. பெறுவதிங் கென்பபடத்துப் பெற்றது விளையாட் டென்னில்
சிறுமழ விறைய தாகும் செய்திடும் கன்மத் தென்னின்
உறுபெருங் கன்மஞ் செய்வோர் முன்புள ராவ ருண்மை
அறிவுறின் ஞால மெல்லாம் அநாதியென் றறிந்தி டாயே. 87

25. உருவொடு நின்றா னென்னின் உருவமுன் படைத்தார் வேண்டும்
உருவவன் இச்சை யென்னில் உலகெலாம் இச்சை யாகும்
உருவுல கத்து ளோர்கட் குறுவது கன்மா லென்னின்
உருவுடை யோர்கட் கெல்லாம் உற்றது கன்மத் தாமே. 88

26. அருவெனில் பவத்தி னின்றும் எடுத்திடான் ஆகா சம்போல்
மருவினன் நிழல்போ லென்னின் மருவினோர்க் காகும்மாட்சி
பெருகிய அறிவுண் டென்று பேசிடின் நேசத் தோடும்
கருதிட உருவம் வேண்டும் இல்லையேற் கருத லின்றே. 89

27. எங்கள்நூல் அநாதி யயக இறைவனுண் டென்னு மென்னின்
உங்கள்நூல் உரைப்பா ரின்றி ஓதுவ தழகி தாகும்
அங்கவன் தன்ஆஆ நூல்கொண் டறிந்தனம் அவனைக் கொண்டே
இங்குநூல் அறிந்தோ மென்னில் ஈதோராச் சரிய மாமே. 90

28. உற்றெழு மரங்க ளாதி உயிரின்றிப் பூத ரூபம்
பற்றியிப் பாரின் மீது பாங்கினாற் பலவு மாகிப்
புற்றொடு மயிர்கொம் பாதி போலவே தோன்றி மாயும்
மற்றுள யோனி கட்குப் பயனென வழங்கு மன்றே. 91

29. கொண்றிட லாகா தென்றும் கொன்றவை கொண்டு நாளும்
தின்றிட லாகு மண்ணோ டொத்திடும் செத்த வெல்லாம
ஒன்றிய வாச மூட்டி உண்ணுநீர் வைத்த வர்க்கோ
சென்றுநின் றுண்ட வர்க்கோ புண்ணியம் செப்பி டாயே. 92

30. ஓங்கிய உருவ மோடும் வேதனை குறிப்பி னோடும்
தாங்குபா வனைவிஞ் ஞானம் தாமிவை ஐந்துங் கூடிப்
பாங்கினாற் சந்தா னத்திற் கெடுவது பந்த துக்கம்
அங்கவை பொன்றக் கேடாய் அழிவது முத்தி யின்பம். 93

31. அழித்திடும் அராக மாதி அகற்றிநல் லறங்கள் பூரித்(து)
இழித்திடும் புலன்கள் போக்கி இன்பொடு துன்பம் வாட்டிப்
பழித்திடாப் பழுதில் வாழ்க்கை எட்டையும் பாரித் தெல்லாம்
ஒழித்திடு ஞான சீலம் சமாதியின் உறுதி யாமே. 94


---திருச்சிற்றம்பலம்---

 

bot About Us | Policy | Contact Us | ©2018 Saiva Siddhanta
Back to Top