lingam saivasiddhantam natarajar science siva

சாத்திர நூல் 2 s - சிவஞான சித்தியார் (சுபக்கம்)

go to -> பரபக்கம்

அருள் நந்தி சிவாச்சாரியார்
விரும்பிய பதிகத்திற்கு செல்ல
பாடல் .

Go to Meikanda Saathiram
| 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 |
| 8 | 9 | 10 | 11 | 12 | 13 | 14 |

உண்மை விளக்கம் நூலை இங்கே சொடுக்கி பதவிறக்கம் செய்யவும்.


<< முந்தயப் பதிகம் | முகப்பு | அடுத்தப் பதிகம் >>

இயல் : சாதனவியல்
              எண்: 10    ஏழாஞ் சூத்திரம்

திருச்சிற்றம்பலம்

1. அனைத்துஞ்சத் தென்னின் ஒன்றை அறிந்திடா தசத்தா லென்னின்,
முனைத்திடா தசத்துச் சத்தின் முன்னிருள் இரவி முன்போல்,
நினைப்பதிங் கசத்தே யென்னில் சத்தின் முன்நிலாமை யானும்,
தனைக்கொடொன் றுணர்த லானும் தானசத் துணரா தன்றே. 249

2. சத்தசத் தறிவ தான்மாத் தான்சத்தும் அசத்து மன்று
நித்தனாய்ச் சதசத் தாகி நின்றிடும் இரண்டின் பாலும்
ஒத்துட னுதித்து நில்லா துதியாது நின்றி டாது
வைத்திடுந் தோற்றம் நாற்றம் மலரினின் வருதல் போலும். 250

3. சுத்தமெய்ஞ் ஞான மேனிச் சோதிபால் அசத்தஞ் ஞானம்
ஒத்துறா குற்ற மெல்லாம் உற்றிடு முயிரின் கண்ணே
சத்துள போதே வேறாம் சதசத்தும் அசத்து மெல்லாம்
வைத்திடும் அநாதி யாக வாரிநீர் லவணம் போலும். 251

4. அறிவிக்க அறித லானும் அழிவின்றி நிற்ற லானும்
குறிபெற்ற சித்தும் சத்தும் கூறுவ துயிருக் கீசன்
நெறிநித்த முத்த சுத்த சித்தென நிற்பன் அன்றே
பிறிவிப்பன் மலங்க ளெல்லாம் பின்னுயிர்க் கருளினாலே. 252


---திருச்சிற்றம்பலம்---

 

bot About Us | Policy | Contact Us | ©2017 Saiva Siddhanta
Back to Top