lingam saivasiddhantam natarajar science siva

சாத்திர நூல் 2 s - சிவஞான சித்தியார் (சுபக்கம்)

go to -> பரபக்கம்

அருள் நந்தி சிவாச்சாரியார்
விரும்பிய பதிகத்திற்கு செல்ல
பாடல் .

Go to Meikanda Saathiram
| 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 |
| 8 | 9 | 10 | 11 | 12 | 13 | 14 |

உண்மை விளக்கம் நூலை இங்கே சொடுக்கி பதவிறக்கம் செய்யவும்.


<< முந்தயப் பதிகம் | முகப்பு | அடுத்தப் பதிகம் >>

இயல் : பயனியல்
              எண்: 14    பதினொராஞ் சூத்திரம்

திருச்சிற்றம்பலம்

1. காயமொழிந் தாற்சுத்த னாகி ஆன்மாக்
காட்டக்கண் டிடுந்தன்மை யுடைய கண்ணுக்(கு)
ஏயும்உயிர் காட்டிக்கண் டிடுமா போல
ஈசனுயிர்க் குக்காட்டிக் கண்டிடுவன் இத்தை
ஆயுமறி வுடையனாய் அன்பு செய்ய
அந்நிலைமை இந்நிலையின் அடைந்தமுறை யாலே
மாயமெலாம் நீங்கிஅரன் மலரடிக்கீ ழிருப்பன்
மாறாத சிவானுபவம் மருவிக் கொண்டே. 310

2. பரஞானத் தாற்பரத்தைத் தரிசித்தோர் பரமே
பார்த்திருப்பர் பதார்த்தங்கள் பாரார் பார்க்க
வருஞானம் பலஞானம் அஞ்ஞான விகற்பம்
வாச்சியவா சகஞானம் வைந்தவத்தின் கலக்கம்
தருஞானம் போகஞா திருஞான ஞேயம்
தங்கியஞா னஞ்சங்கற் பனைஞான மாகும்
திருஞானம் இவையெலாங் கடந்தசிவ ஞானம்
ஆதலாற் சீவன்முத்தர் சிவமேகண் டிருப்பர். 311

3. அநாதிஉடல் ஒன்றினைவிட் டொன்றுபற்றிக் கன்மால்
ஆயழிந்து வருதலால் அந்த மில்லை
பினாதியருள் பெற்றவர்கள் நித்தவுரு வத்தைப்
பெற்றிருக்கை முத்தியெனிற் பெறும்பதமே இதுவும்
இனாதுநிலை இதுதானுங் காய முண்டேல்
இருங்கன்ம மாயைமல மெல்லா முண்டாம்
மனாதிதரு முடலாதி காரியத்தால் அநாதி
மலம்அறுக்கும் மருந்தற்றால் உடன்மாயுங் காணே. 312

4. தெரிவரிய மெய்ஞ்ஞானம் சேர்ந்த வாறே
சிவம்பிரகா சிக்குமிங்கே சீவன்முத்த னாகும்
உரியமல மௌடதத்தால் தடுப்புண்ட விடமும்
ஔ¢ளெரியின் ஔ¤முன்னர் இருளுந் தேற்றின்
வருபரல்சேர் நீர்மருவு கலங்கலும்போ லாகி
மாயாதே தன்சத்தி மாய்ந்து காயம்
திரியுமள வும்உளதாய்ப் பின்பு காயஞ்
சேராத வகைதானுந் தேயு மன்றே. 313

5. ஆணவந்தான் அநாதிஅந்த மடையா தாகும்
அடையின்அந்த ஆன்மாவும் அழியுமெனிற் செம்பிற்
காணலுறுங் களிம்பிரத குளிகைபரி சிக்கக்
கழியுஞ்செம் புருநிற்கக் கண்டோ மன்றே
தாணுவின்தன் கழலணையத் தவிரும்மலந் தவிர்ந்தால்
தான்சுத்த னாயிருக்கை முத்திஅரன் தாளைப்
பூணவேண் டுவதொன்று மில்லையெனின் அருக்கன்
புகுதஇருள் போம்அடியிற் பொருந்தமலம் போமே. 314

6. நெல்லினுக்குத் தவிடுமிகள் அநாதி யாயே
நெல்லைவிட்டு நீங்கும்வகை நின்றநிலை நிகழ்த்தீர்
சொல்லியிடில் துகளற்ற அரிசியின்பா லில்லை
தொக்கிருந்து மற்றொருநெல் தோன்றி டாவாம்
மெல்லஇவை விடுமறவே இவைபோல அணுவை
மேவுமல முடல்கன்மம் அநாதிவிட்டே நீங்கும்
நல்லசிவ முத்தியின்கட் பெத்தான் மாவை
நணுகிநிற்கு மாதலால் நாசமுமின் றாமே. 315

7. எவ்விடத்தும் இறையடியை இன்றியமைந் தொன்றை
அறிந்தியற்றி யிடாஉயிர்க ளிறைவன் றானும்
செவ்விதினின் உளம்புகுந்து செய்தியெலாம் உணர்ந்து
சேட்டிப்பித் தெங்குமாய்ச் செறிந்து நிற்பன்
இவ்வுயிர்கள் தோற்றும்போ தவனையின்றித் தோற்றா
இவற்றினுக்கம் முதலெழுத்துக் கெல்லாமாய் நிற்கும்
அவ்வுயிர்போல் நின்றிடுவன் ஆத லால்நாம்
அரன்டியை அகன்றுநிற்ப தெங்கே யாமே. 316

8. எங்குந்தான் நிறைந்துசிவன் நின்றா னாகில்
எல்லாருங் காணவே வேண்டுந்தா னென்னில்
இங்குந்தான் அந்தகருக் கிரவிஇரு ளாகும்
ஈசனருட் கண்ணில்லார்க் கொளியாயே யிருளாம்
பங்கந்தா னெழும்பதுமம் பக்குவத்தை யடையப்
பதிரிஅலர்த் திடுவதுபோல் பருவஞ்சே ருயிர்க்குத்
துங்கஅரன் ஞானக்கண் கொடுத்தருளி னாலே
சோதிக்குட் சோதியாய்த் தோன்றிடுவன் காணே. 317

9. சென்றணையும் நிழல்போலச் சிவன்நிற்ப னென்னில்
சென்றணையும் அவன்முதலி சிவத்தைஅணைந் தொன்றாய்
நின்றதுயிர் கெட்டென்னில் கெட்டதணை வின்றாம்
நின்றதேற் கேடில்லை அணைந்துகெட்ட தென்னில்
பொன்றினதேன் முத்தியினைப் பெற்றவரார் புகல்நீ
பொன்றுகையே முத்தியெனில் புருடன்நித்த னன்றாம்
ஒன்றியிடு நீரொடுநீர் சேர்ந்தாற்போல் என்னின்
ஒருபொருளாம் அதிபதியோ டுயிர்பொருளொன் றன்றே. 318

10. செம்பிரத குளிகையினாற் களிம்பற்றுப் பொன்னாய்ச்
செம்பொனுடன் சேரும்மலஞ் சிதைந்தாற் சீவன்
நம்பனுடன் கூடுமெனிற் பொன்போ லல்லன்
நற்குளிகை போலஅரன் நணுகுமலம் போக்கி
அம்பொனடிக் கீழ்வைப்பன் அருங்களங்க மறுக்கும்
அக்குளிகை தானும்பொன் னாகா தாகும்
உம்பர்பிரா னுற்பத்தி யாதிகளுக் குரியன்
உயிர்தானுஞ் சிவானுபவ மொன்றினுக்கு முரித்தே. 319

11. சிவன்சீவ னென்றிரண்டுஞ் சித்தொன்றா மென்னில்
சிவனருட்சித் திவன்அருளைச் சேருஞ்சித் தவன்றான்
பவங்கெடுபுத் திமுத்தி பண்ணுஞ்சித் திவற்றிற்
படியுஞ்சித் தறிவிக்கப் படுஞ்சித்து மிவன்றான்
அவன்றானே அறியுஞ்சித் தாதலினா லிரண்டும்
அணைந்தாலு மொன்றாகா தநந்நியமாக யிருக்கும்
இவன்றானும் புத்தியுஞ்சித் திவனாமோ புத்தி
இதுஅசித்தென் றிடில்அவனுக் கிவனும்அசித் தாமே. 320

12. இரும்பைக்காந் தம்வலித்தாற் போல்இயைந்தங் குயிரை
எரியிரும்பைச் செய்வதுபோல் இவனைத்தா னாக்கி
அரும்பித்திந் தனத்தைஅன லழிப்பதுபோல் மலத்தை
அறுத்தமலன் அப்பணைந்த உப்பேபோ லணைந்து
விரும்பிப்பொன் னினைக்குளிகை யொளிப்பதுபோல் அடக்கி
மேளித்துத் தானெல்லாம் வேதிப்பா னாகிக்
கரும்பைத்தே னைப்பாலைக் கனியமுதைக் கண்டைக்
கட்டியைஒத் திருப்பன்அந்த முத்தியினிற் கலந்தே. 321


---திருச்சிற்றம்பலம்---

 

bot About Us | Policy | Contact Us | ©2018 Saiva Siddhanta
Back to Top