lingam saivasiddhantam natarajar science siva

சாத்திர நூல் 2 s - சிவஞான சித்தியார் (சுபக்கம்)

go to -> பரபக்கம்

அருள் நந்தி சிவாச்சாரியார்
விரும்பிய பதிகத்திற்கு செல்ல
பாடல் .

Go to Meikanda Saathiram
| 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 |
| 8 | 9 | 10 | 11 | 12 | 13 | 14 |

உண்மை விளக்கம் நூலை இங்கே சொடுக்கி பதவிறக்கம் செய்யவும்.


<< முந்தயப் பதிகம் | முகப்பு | அடுத்தப் பதிகம் >>

இயல் : பி ரா ம ண வி ய ல்
              எண்: 5    இரண்டாஞ் சூத்திரம்

திருச்சிற்றம்பலம்

1. உலகெலா மாகி வேறாய் உடனுமாய் ஔ¤யாய் ஓங்கி
அலகிலா உயிர்கள் கன்மத் தாணையின் அமர்ந்து செல்லத்
தலைவனாய் இவற்றின் தன்மை தனக்கெய்த லின்றித் தானே
நிலவுசீர் அமல னாகி நின்றனன் நீங்கா தெங்கும். 91

2. ஒன்றென மறைக ளெல்லாம் உரைத்திட உயிர்கள் ஒன்றி
நின்றனன் என்று பன்மை நிகழ்த்துவ தென்னை யென்னின்
அன்றவை பதிதான் ஒன்றென் றறையும்அக் கரங்கள் தோறும்
சென்றிடும் அகரம் போல நின்றனன் சிவனுஞ் சேர்ந்தே. 92

3. உருவொடு கருவி யெல்லாம் உயிர்கொடு நின்று வேறாய்
வருவது போல ஈசன் உயிர்களின் மருவி வாழ்வன்
தருமுயி ரவனை யாகா உயிரவை தானு மாகான்
வருபவ னிவைதா னாயும் வேறுமாய் மன்னி நின்றே. 93

4. இருவினை இன்பத் துன்பத் திவ்வுயிர் பிறந்தி றந்து
வருவது போவ தாகும் மன்னிய வினைப்ப லன்கள்
தருமரன் தரணி யோடு தராபதி போலத் தாமே
மருவிடா வடிவுங் கன்ம பலன்களும் மறுமைக் கண்ணே. 94

5. இருவினை யென்னை இன்பத் துன்பங்கள் இயல்ப தென்னின்
ஒருதன்மை இயல்புக் குள்ள தொருவனுக் கிரண்டு செய்தி
வருவதென் மலருந் தீயும் மருவலின் வாசம் வெம்மை
தருவதென் நீரென் செய்து தானியல் பாகு மன்றே. 95

6. தன்னியல் பொழியப் பூவும் தழலும்வந் தணைய நீரின்
மன்னிய திரண்டு செய்தி வருமிரு வினையி னானும்
உன்னிய இன்பத் துன்பம் உறும்உயி ருணர்வி லாத
துன்னிய அசித்தை இன்பத் துன்பங்கள் சூழ்ந்தி டாவே. 96

7. இம்மையின் முயற்சி யாலே இருநிதி ஈட்டி இன்பம்
இம்மையே நுகர்வர் செய்தி இலாதவர் பொருளு மின்றி
இம்மையே இடரு ழப்பர் வேறிரு வினைய துண்டேல்
இம்மையின் முயற்சி யின்றி எய்திட வேண்டும் இங்கே. 97

8. இருவினைச் செயல்காண் இம்மை இரும்பொரு ளின்பம் வேண்டி
வருவினை செய்யுங் காலை மடிவரும் மடியு மின்றித்
தருவினை யதனில் அந்தந் தானறும் துயருந் தங்கும்
ஒருவினை செய்யா தோரும் உடையர்இவ் வுலகத் துள்ளே. 98

9. பேறிழ வின்ப மோடு பிணிமூப்புச் சாக்கா டென்னும்
ஆறுமுன் கருவுட் பட்ட தவ்விதி அனுப வத்தால்
கூறிடும் முன்பு செய்த கன்மமிங் கிவற்றிற் கேது
தேறுநீ இனிச்செய் கன்மம் மேலுடற் சேரு மென்றே. 99

10. உடற்செயல் கன்மம் இந்த உடல்வந்த வாறே தென்னின்
விடப்படு முன்னு டம்பின் வினைஇந்த உடல்வி ளைக்கும்
தொடர்ச்சியால் ஒன்றுக் கொன்று தொன்றுதொட் டநாதி வித்தின்
இடத்தினின் மரம்ம ரத்தின் வித்தும்வந் தியையு மாபோல். 100

11. முற்செயல் விதியை இந்த முயற்சியோ டனுப வித்தான்
இச்செயல் பலிக்கு மாறென் இதமகி தங்கள் முன்னர்
அச்செய லானால் இங்கும் அவைசெயின் மேலைக் காகும்
பிற்செயா தனுப விப்ப தின்றுபின் தொடருஞ் செய்தி. 101

12. மேலைக்கு வித்து மாகி விளைந்தவை உணவு மாகி
ஞாலத்து வருமா போல நாம்செய்யும் வினைக ளெல்லாம்
மேலத்தான் பலமாச் செய்யும் இதமகி தங்கட் கெல்லாம்
மூலத்த தாகி யென்றும் வந்திடும் முறைமை யோடே. 102

13. இதமகி தங்கள் என்ப திகல்மன வாக்குக் காயத்(து)
இதமுயிர்க் குறுதி செய்தல் அகிதமற் றதுசெய் யாமை
இதமகி தங்க ளெல்லாம் இறைவனே ஏற்றுக் கொண்டிங்(கு)
இதமகி தத்தால் இன்பத் துன்பங்கள் ஈவ னன்றே. 103

14. இறைவனிங் கேற்ப தென்னை இதமகி தங்க ளென்னின்
இறைபர னுயிர்க்கு வைத்த நேசத்தின் நிலைமை யாகும்
அறமலி இதஞ்செய் வோருக் கனுக்கிர கத்தைச் செய்வன்
மறலி அகிதஞ் செய்யின் நிக்கிர கத்தை வைப்பன். 104

15. நிக்கிர கங்கள் தானும் நேசத்தால் ஈசன் செய்வ(து)
அக்கிர மத்தால் குற்றம் அடித்துத்தீர்த் தச்சம் பண்ணி
இக்கிர மத்தி னாலே ஈண்டறம் இயற்றி டென்பன்
எக்கிர மத்தி னாலும் இறைசெயல் அருளே யென்றும். 105

16. தந்தைதாய் பெற்ற தத்தம் புதல்வர்கள் தம்சொ லாற்றின்
வந்திடா விடின் உறுக்கி வளாரினால் அடித்துத் தீய
பந்தமும் இடுவர் எல்லாம் பார்த்திடில் பரிவே யாகும்
இந்தநீர் முறைமை யன்றோ ஈசனார் முனிவு மென்றும். 106

17. செயல்களே பலத்தைச் செய்யும் தெய்வம்வேண் டாஇங் கென்னின்
முயலுமிச் செயல்க ளிங்கே முழுவதும் அழியு மெங்கே
பயனளிப் பனவ ழிந்தே பலன்களைப் பண்ணுங் கெட்டே
வயலிடும் தழையும் தின்னும் மருந்தும்பின் பலிக்கு மாபோல். 107

18. செய்க்கிடுந் தழையும் தின்னுந் திரவிய மதுவும் போல
உய்த்திடுஞ் செய்தி கெட்டே உறுவிக்கும் பலத்தை யென்னி
வைத்திடுஞ் சோறும் பாக்கும் அருந்தினர் வயிற்றின்மாய்ந்தால்
மெய்த்திடும் பலம்உனக்கு மலமலான் வேறு முண்டோ. 108

19. திரவியம் உவமை யன்று செய்திக்கண் திரவி யங்கள்
விரவிய விடத்தே வீந்து பலந்தரும் இம்மை அம்மை
பரவிநீ பார்நீர் அங்கி பாததிரத் திட்ட வெல்லாம்
கரவிடு மிங்கே எங்கே பலன்கொளக் கருதி னாயே. 109

20. செய்தவர் மனத்தே எல்லாச் செய்தியும் கிடந்து பின்னர்
எய்தவே பலன்க ளீனும் என்றிடின் இருஞ் சுவர்க்கம்
பொய்யர்வாழ் நரகம் பூமி புந்தியிற் கிடந்து போந்த(து)
ஐயனே அழகி துன்சொல் இந்திர சால மாய்த்தே. 110

21. தானஞ்செய் பொருள் தரித்தோர் செய்தவர் தக்க செய்தி
ஊனம்பின் னுறவே காண்டும் பலமுறு விப்பான் வேண்டும்
ஈனமில் செய்தி ஈச னிடும்பணி இவைநாம் செய்தால்
நூனங்கள் அதிக நோக்கி நகர்விப்பன் வினைநோய் தீர. 111

22. உலகுடல் கரணங் காலம் உறுபலம் நியதி செய்தி
பலவிவை கொண்டுகன்மம் பண்ணுவ துண்பதானால்
நிலவிடா திவைதாம் சென்று நினைந்துயிர் நிறுத்திக் கொள்ளா(து)
அலகிலா அறிவ னாணை அணைத்திடும் அருளி னாலே. 112

23. ஒழுக்கம்அன் பருள்ஆ சாரம் உபசாரம் உறவு சீலம்
வழுக்கிலாத் தவம்தா னங்கள் வந்தித்தல் வணங்கல் வாய்மை
அழுக்கிலாத் துறவ டக்கம் அறிவொடர்ச் சித்த லாதி
இழுக்கிலா அறங்க ளானால் இரங்குவான் பணிய றங்கள். 113

24. மனமது நினைய வாக்கு வழுத்தமந் திரங்கள் சொல்ல
இனமலர் கையிற் கொண்டங் கிச்சித்த தெய்வம் போற்றிச்
சினமுத லகற்றி வாழும் செயலற மானா லியார்க்கும்
முனமொரு தெய்வ மெங்கும் செயற்குமுன் னிலையா மன்றே. 114

25. யாதொரு தெய்வங் கொண்டீர் அத்தெய்வ மாகி ஆங்கே
மாதொரு பாக னார்தாம் வருவர்மற் றத்தெய் வங்கள்
வேதனைப் படும் இறக்கும் பிறக்கும்மேல் வினையுஞ் செய்யும்
ஆதலான் இவையி லாதான் அறிந்தருள் செய்வ னன்றே. 115

26. இங்குநாம் சிலர்க்குப் பூசை இயற்றினால் இவர்களோவந்(து)
அங்குவான் தருவா ரன்றேல் அத்தெய்வ மத்த னைக்காண்
எங்கும்வாழ் தெய்வமெல்லாம் இறைவனாணையினால் நிற்ப(து)
அங்குநாம் செய்யுஞ் செய்திக் காணைவைப் பால ளிப்பன். 116

27. காண்பவன் சிவனே யானால் அவனடிக் கன்பு செய்கை
மாண்பறம் அரன்றன் பாதம் மறந்துசெய் அறங்களெல்லாம்
வீண்செய லிறைவன் சொன்ன விதியறம் விருப்பொன்றில்லான்
பூண்டனன் வேண்டல் செய்யும் பூசனை புரிந்து கொள்ளே. 117

28. தாபர சங்க மங்க ளென்றிரண் டுசரவில் நின்று
மாபரன் பூசை கொண்டு மன்னுயிர்க் கருளை வைப்பன்
நீபரன் தன்னை நெஞ்சில் நினைவையேல் நிறைந்த பூசை
யாய்பரம் பொருளை நாளும் அர்ச்சிநீ அன்பு செய்தே. 118

29. அரனடிக் கன்பர் செய்யும் பாவமும் அறம தாகும்
பரனடிக் கன்பி லாதார் புண்ணியம் பாவ மாகும்
வரமுடைத் தக்கன் செய்த மாவேள்வி தீமை யாகி
நரரினிற் பாலன் செய்த பாதகம் நன்மை யாய்த்தே. 119

30. மறைகளீ சன்சொல் அச்சொல் வழவாரா உயிரை வைக்கும்,
சிறைகள்மா நிரயம் இட்ட பணிசெய்வோர் செல்வத் தோடும்,
உறையும்மா பதிகள் உம்ப ருலங்கள் யோனிக் கெல்லாம்,
இறைவனா ணையினால் இன்பத் துன்பங்கள் இயைவதாகும். 120

31. ஆணையால் அவனி மன்னன் அருமறை முறைசெய் யாரை
ஆணையில் தண்டஞ் செய்தும் அருஞ்சிறை யிட்டும் வைப்பன்
ஆணையின் வழிசெல் வோருக் கரும்பதி செல்வம் நல்கி
ஆணையும் வைப்பன் எங்கும் ஆணையே ஆணை யேகாண். 121

32. அரசனும் செய்வ தீசன் அருள்வழி அரும்பா வங்கள்
தரையுளோர் செய்யில் தீய தண்டலின் வைத்துத் தண்டத்
துரைசெய்து தீர்ப்பன் பின்பு சொல்வழி நடப்பர் தூயோர்
நிரயமும் சேரார் அந்த நிரயமுன் நீர்மை ஈதாம். 122

33. அருளினால் உரைத்த நூலின் வழிவாரா ததன்மஞ் செய்யின்
இருளுலா நிரயத் துன்பத் திட்டிரும் பாவந் தீர்ப்பன்
பொருளுலாஞ் சுவர்க்க மாதி போகத்தாற் புணியந் தீர்ப்பன்
மருளுலா மலங்கள் தீர்க்கும் மருந்திவை வயித்ய நாதன். 123

34. மருத்துவன் உரைத்த நூலின் வழிவரிற் பிணிகள் வாரா
வருத்திடும் பிணிகள் தப்பில் தப்பிய வழியுஞ் செய்யத்
திருத்தினன் மருந்து செய்யா துறும்பிணி சென்றுந் தீர்ப்பன்
உரைத்தநூற் சிவனுமின்னே உறுங்கன்ம மூட்டித் தீர்ப்பன். 124

35. மண்ணுளே சிலவி யாதி மருத்துவன் அருத்தி யோடும்
திண்ணமா யறுத்துக் கீறித் தீர்த்திடுஞ் சிலநோ யெல்லாம்
கண்ணிய கட்டி பாலும் கலந்துடன் கொடுத்துத் தீர்ப்பன்
அண்ணலும் இன்பத் துன்பம் அருத்தியே வினைய றுப்பன். 125

36. பூதனா சரீரம் போனால் புரியட்ட ரூபந் தானே
யாதனா சரீர மாகி இன்பத்துன் பங்க ளெல்லாம்
நாதனார் ஆணை யுய்க்க நரகொடு சுவர்க்கம் துய்த்துத்
தீதிலா அணுவா யோனி சேர்ந்திடும் சீவ னெல்லாம். 126

37. உடல்விடா யோனி பற்றி உதிப்பினும் உதிக்கு மொன்றிற்
படர்வுறா துறும்பா வத்தாற் பாடாணம் போற்கி டந்து
கடனதாம் காலஞ் சென்றாற் கடுநர கதனில் வீழ்ந்தங்(கு)
இடருறும் உருவங்கன்மத் தளவினில் எடுக்கு மன்றே. 127

38. பன்னகம் அண்ட சங்கள் பரகாயந் தன்னிற் பாய்வோர்
துன்னுதோல் முட்டை யாக்கை துறந்துசெல் வதுவே போல
உன்னிய வுயிர்கள் தூல வுடல்விட்டு வானி னூடு
மன்னிடு நனவு மாறிக் கனவினை மருவு மாபோல். 128

39. தன்மமோ டதன்ம வாகித் தானிரு பயனுந் தந்து
நன்மைதீ மையினு மின்பத் துன்பினு நாடிக் காண
முன்னமே ஆன்மா வின்தன் மும்மலத் தொன்ற தாகிக்
கன்மமு மூலங் காட்டிக் காமிய மலமாய் நிற்கும். 129

40. இருவினை அநாதி யாதி இயற்றலால் நுகர்வால் அந்தம்
வருமலஞ் சார்ந்து மாயா உருவுகள் மருவி யார்த்துத்
தருசெயல் முறைமை யாலே தான்பல பேதங் காட்டி
அருவதாய் நின்ற ரன்தன் ஆணையின் அமர்ந்து செல்லும். 130

41. சங்கமம் தாப ரங்கள் தத்தம்கன் மத்துக் கீடா
அங்குரு யோனி மாறும் அச்சுமா றாதிங் கென்னின்
இங்குமா னுடரி யற்றும் புண்ணியத் தின்ப ஈட்டம்
இங்குவான் சுரர்ளாயோ நரர்களாய் அருந்து வாரோ. 131

42. நரர்களாய்த் துய்ப்ப ரென்னின் நரர்பதி சுரரு லோகம்
சுரர்களாய்த் துய்ப்ப ரென்னிற் சொன்னஅச் சழியு மாகும்
சுரர்களாய்ப் பலன்கள் துய்த்துத் தாமிங்குத் தோன்றும் போது
நரர்களாய்ப் பிறப்பர் ஞாலத் தமரராய் நண்ணிடாரே. 132

43. வண்டுக ளாகி மாறும் மயிர்க்குட்டி மற்றோர் செந்துப்
பண்டைய உருவந் தானே வேட்டுவ னாய்ப்பி றக்கும்
கண்டுகொள் யோனி யெல்லாம் கன்மத்தால் மாறு மென்றே
கொண்டன சமய மெல்லாம் இச்சொல் நீ கொண்ட தெங்கே. 133

44. அகலியை கல்ல தானாள் அரிபல பிறவி யானான்
பகலவன் குலத்திற் றோன்றிப் பாரெலா முழுதும் ஆண்டு
நிகரிலா அரச னாகும் நிலந்திநீ டுலகம் போற்றச்
சகமதில் எலிதா னன்றோ மாவலி யாய்த்துத் தானே. 134

45. செப்பினாய் மாற வேறு சிலர்விதி யாலே கன்மால்
வைப்புறு மியோனி எல்லாம் மாறிவந் திடாவிங் கென்னின்
எப்படி யானுஞ் செய்திக் கிறைகரி யாவ னென்றே
முற்பட மொழிந்தே னெல்லாம் முதல்வன்தன் விதியே யாகும். 135

46. அவ்வவ யோனி தோறும் அவ்வவ உலகந் தோறும்
செவ்விதின் அறிந்து கன்மம் சேர்ந்திடா சீவன் சேரா
இவ்வகை தம்மிற் சேர்வும் இறைசெய லானாற் செய்த
எவ்வுரு வுந்தன் கன்மான் மாற்றுவன் இறைவன் தானே. 136

47. மாறியிவ் வுருவ மெல்லாம் வருவதெங் கேநின் றென்னில்
கூறிய சூக்கு மத்தாம் உருவெனிற் குறியொன் றென்னின்
வேறொரு குறியா மாரம் வீரசங் கிலியு மாகும்
தேறுநீ யொருவ னாலிச் செயலெலாம் சிவனா லாகும். 137

48. சூக்குமங் கெட்டுத் தூலந் தோன்றிடா சூக்கு மத்தின்
ஆக்கியோ ருடல்கி டப்ப தின்றுட லாக்குந் தன்மைக்(கு)
ஓக்கிய சத்தி யுண்டாய் உடல்தருங் காலம் உற்று
நீக்கிட மரம்பின் வேரோர் நீள்மர நிகழ்த்து மாபோல். 138

49. விதிப்படிச் சூக்கு மத்தே உருவரும் வினையா லிங்கே
உதித்திடா உருவ மாக உருவரு மரங்கள் வித்தில்
கதித்தெழு மரமும் வித்தும் கழியும்பின் அழியுஞ் சூக்க
மதிக்கெழு கலைகள் போல வருவது போவ தாமே. 139

50. தூலமா முருவி னுக்குச் சூக்கும முதல தற்கு
மூலமா னதற்கு மூல மோகினி அதன்மு தற்றான்
மேலதாம் விந்து சத்தி சிவமிவை மிசையா மெல்லாம்
சாலவின் றாகும் ஆன்மாச் சிவத்தினைச் சார்ந்த போது. 140

51. அரன்விதி யருள தென்றே அறைந்தனம் அதுவு முன்னே
தரைநர கருந்து றக்கம் தனுகர ணாதி யெல்லாம்
வருவதுஞ் செய்த நாதி மலங்களிம் மருந்தால் தீர்த்துப்
பரகதி யதுவுந் தந்து பாதபங் கயமும் சூட்டும். 141

52. எழுமுடல் கரண மாதி இவைமலம் மலம லத்தாற்
கழுவுவ னென்று சொன்ன காரண மென்னை யென்னில்
செழுநவ அறுவை சாணி உவர்செறி வித்த ழுக்கை
முழுவதுங் கழிப்பன்மாயை கொடுமல மொழிப்பன் முன்னோன். 142

53. நித்தமாய் அருவாய் ஏக நிலையதாய் உலகத் திற்கோர்
வித்துமாய் அசித்தா யெங்கும் வியாபியாய் விமல னுக்கோர்
சத்தியாய்ப் புவன போகந் தனுகர ணமும்உ யிர்க்காய்
வைத்ததோர் மலமாய் மாயை மயக்கமும் செய்யு மன்றே. 143

54. மாயையிற் கால மோடு நியதிபின் கலாதி தோன்றும்
ஆயஅக் கால மூன்றாய் ஆக்கியு மளித்தும் போக்கிக்
காயமோ டுலகுக் கெல்லாம் காலசங் கையினைப் பண்ணி
நாயக னாணை யாலே நடத்திடுஞ் சகத்தை யெல்லாம். 144

55. நியதிபின் தோன்றிக் கன்ம நிச்சயம் பண்ணி நிற்கும்
அயர்விலாக் கலைபின் தோன்றி ஆணவம் ஒதுக்கிச் சித்தின்
செயல்புரி கிரியா சத்தி தெரிவிக்குஞ் சிறிதே வித்தை
உயர்கலை யதனில் தோன்றி அறிவினை உதிக்கப் பண்ணும். 145

56. விச்சையின் அராகந் தோன்றி வினைவழி போகத் தின்கண்
இச்சையைப் பண்ணி நிற்கும் தொழிலறி விச்சை மூன்றும்
வைச்சபோ திச்சா ஞானக் கிரியைமுன் மருவி ஆன்மா
நிச்சயம் புருட னாகிப் பொதுமையின் நிற்ப னன்றே. 146

57. வருங்குண வடிவாய் மூலப் பிரகிருதி கலையில் தோன்றித்
தருங்குண மூன்றாய் ஒன்றிற் றான்மூன்றாய் மும்மூன் றாகும்
இருங்குண ரூப மாகி இயைந்திடு மெங்கும் ஆன்மாப்
பெருங்குண வடிவாய்ப் போக சாதனம் பெந்த மாமே. 147

58. சித்தமாம் அவ்வி யத்தம் சிந்தனை யதுவுஞ் செய்யுஞ்
புத்திஅவ் வியத்தில் தோன்றிப் புண்ணிய பாவஞ் சார்ந்து
வத்துநிச் சயமும் பண்ணி வருஞ்சுக துக்க மோகப்
பித்தினின் மயங்கி ஞானக் கிரியையும் பேணி நிற்கும். 148

59. ஆங்காரம் புத்தி யின்கண் உதித்தகந் தைக்கு வித்தாய்
ஈங்கார்தான் என்னோ டொப்பார் என்றியான் என்ன தென்றே
நீங்காதே நிற்குந் தானும் மூன்றதாய் நிகழு மென்பர்
பாங்கார்பூ தாதி வைகா ரிகம்தைச தம்தா னென்றே. 149

60. மதுமது தைச தத்தின் வந்தொரு பொருளை முந்தி
நினைவதுஞ் செய்தங் கைய நிலைமையின் நிற்கு மாங்கே
இனமல சோத்தி ராதி கன்மஇந் திரிய மெல்லாம்
முனமுரை செய்த வைகா ரிகம்தரு மென்பர் முன்னோர். 150

61. நற்செவி துவக்குக் கண்நா நாசிஐந் தினையு நல்லோர்
புத்திஇந் திரிய மென்று புகன்றனர் இவைத மக்குச்
சத்தநற் பரிச ரூப இரதகந் தங்க ளைந்தும்
வைத்தனர் விடய மாக அடைவினின் மருவு மென்றே. 151

62. வாக்கொடு பாதம் பாணி பாயுவோ டுபத்த மைந்து
நீக்கினர் முன்னே கன்மேந் திரியங்க ளெனநி னைந்தே
ஆக்கிய வசன கமன தானமும் விசர்க்கா னந்தம்
ஊக்கமார் ஐந்து மைந்தின் தொழிலென ஓதி னாரே. 152

63. வாயாதி சோத்தி ராதி புறத்துவாழ் கருவி யாகும்
ஓயாத மனாதி காயத் துணருமுட் கருவி யாகும்
ஆய்வார்கட் கராக மாதி அவற்றினுட் கருவி யென்பர்
மாயாள்தன் வயிற்றி வற்றால் துடக்குண்டு வாழு மான்மா. 153

64. ஓசைநற் பரிச ரூப இரதகந் தங்க ளென்று
பேசுமாத் திரைக ளைந்தும் பிறக்கும்பூ தாதி கத்தின்
நேசஇந் திரியங் கட்கு நிகழறி விதனாற் காண்டும்
ஆசைசேர் மனாதி தன்மாத் திரைபுரி யட்ட கந்தான். 154

65. சாற்றிய பஞ்ச தன்மாத் திரைகளிற் சத்த முன்னாத்
தோற்றும்வான் வளிதீ நீர்மண் தொடக்கியே ஒன்றுக்கொன்றங்(கு)
ஏற்ற மாமோசை யாதி இருங்குண மியைந்து நிற்கும்
ஆற்றவே விடய பூதம் அங்காங்கி பாவத் தாமே. 155

66. இரந்தர மாகி வான்றான் இடங்கொடுத் திடும்ச லித்துப்
பரந்தவை திரட்டும் கால்தீச் சுட்டொன்று வித்தல் பண்ணும்
நிரந்தரங் குளிர்ந்து நின்று பதஞ்செயும் நீர்மண் தானும்
உரந்தரு கடின மாகித் தரித்திடும் உணர்ந்து கொள்ளே. 156

67. மண்புனல் அனல்கான் வான்பால் படிவுநாற் கோண மாகும்
தண்பிறை மூன்று கோணம் தகுமறு கோணம் வட்டம்
வண்பொன்மை வெண்மை செம்மைகறுப்பொடு தூமவன்னம்
எண்தரும் எழுத்துத் தானும் லவரய ஹவ்வு மாமே. 157

68. குறிகள்வச் சிரத்தி னோடு கோகந தஞ்சு வத்தி
அறுபுள்ளி அமுத விந்து அதிதெய்வம் அயன்மா லாதி
செறிபுக ழீச னோடு சதாசிவம் பூத தெய்வம்
நெறிதரு கலைஐந் திற்கும் நிகழ்த்துவர் இந்த நீர்மை. 158

69. சுத்ததத் துவங்க ளென்று முன்னமே சொன்ன ஐந்தும்
இத்தகை மையின்இ யம்பும் இவைமுப்பத் தொன்று மாகத்
தத்துவ முப்பத் தாறாஞ் சைதன்னி யங்க ளைந்து
சித்தசித் தான்மா வொன்று முப்பதும் அசித்தே செப்பில். 159

70. ஐந்துசுத் தத்தின் கீழேழ் சுத்தாசுத் தம்அ சுத்தந்
தந்திடும் புமான்கீ ழெண்மூன் றாயதத் துவஞ்சீ வற்கு
வந்திடும் பிரேர காண்டம் மருவுபோக சயித்தி ரத்தோ(டு)
அந்தமில் அணுக்க ளுக்குப் போக்கிய காண்ட மாமே. 160

71. தத்துவ ரூப மாகும் தரும்அரு வுருவ மெல்லாம்
தத்துவம் தூல சூக்க பரங்களு மாகி நிற்கும்
தத்துவம் தன்னிற் சாரும் அணுக்கள்சா தாக்கி யத்தில்
தத்துவ சத்தம் சாரும் சகலமும் தத்து வங்காண். 161

72. தத்துவம் எண்மூன் றும்சென்(று) ஆன்மதத் துவத்தொ டுங்கும்,
வித்தையி னொடுங்கும் ஆறும் சிவத்தினி னொடுங்கும் மூன்றும்,
நித்ததத் துவம்இம் மூன்றும் என்பர்கள் இரண்டு நின்ற,
சுத்தமாம் சிவத்தொ டுங்கும் தோற்றமும் இதுபோ லாகும். 162

73. மொய்தரு பூத மாதி மோகினி அந்த மாகப்
பொய்தரு சமய மெல்லாம் புக்குநின் றிடும்பு கன்று
மெய்தருஞ் சைவ மாதி இருமூன்றும் வித்தை யாதி
எய்துதத் துவங்க ளேயும் ஒன்றுமின் றெம்மி றைக்கே. 163

74. சிவஞ்சத்தி நாதம் விந்து சதாசிவன் திகழும் ஈசன்
உவந்தருள் உருத்தி ரன்தான் மால்அயன் ஒன்றினொன்றாய்ப்
பவந்தரும் அருவ நாலிங் குருவநா லுபய மொன்றாய்
நவந்தரு பேதம் ஏக நாதனே நடிப்ப னென்பர். 164

75. சத்தியாய் விந்து சத்தி யாய்மனோன் மனிதா னாகி
ஒத்துறு மகேசை யாகி உமைதிரு வாணி யாகி
வைத்துறும் சிவாதிக் கிங்ஙன் வருஞ்சத்தி யொருத்தி யாகும்
எத்திற நின்றான் ஈசன் அத்திறம் அவளும் நிற்பள். 165

76. சத்திதான் நாத மாதி தானாகுஞ் சிவமு மந்தச்
சத்திதா னாதி யாகும் தரும்வடி வான வெல்லாம்
சத்தியும் சிவமு மாகும் சத்திதான் சத்த னுக்கோர்
சத்தியாம் சத்தன் வேண்டிற் றெல்லாமாஞ் சத்திதானே. 166

77. சிவம்சத்தி தன்னை ஈன்றும் சத்திதான் சிவத்தை ஈன்றும்
உவந்திரு வரும்பு ணர்ந்திங் குலகுயி ரெல்லா மீன்றும்
பவன்பிரம சாரி யாகும் பான்மொழி கன்னி யாகும்
தவந்தரு ஞானத் தோர்க்கித் தன்மைதான் தெரியுமன்றே. 167

78. தனுகரண புவன போகம் தற்பரம் பந்தம் வீடென்(று)
அணுவினோ டெல்லா மாகி அடைந்திடுந் தத்து வங்கள்
இனிதறிந் திவைநி விர்த்தி முதல்கலை யிடத்தே நீக்கி
நனிபர முணர்ந்தோ னந்தத் தத்துவ ஞானி யாவன். 168

79. எல்லாமாய்த் தத்துவங்கள் இயைந்ததென் அணுவுக் கென்னில்
தொல்லாய கன்மமெல்லாம் துய்ப்பித்துத் துடைத்தற் கும்பின்
நில்லாமை முற்று வித்து நீக்கவும் கூடி நின்ற
பொல்லாத ஆணவத்தைப் போக்கவும் புகுந்த தன்றே. 169

80. ஒன்றதாய் அநேக சத்தி யுடையதாய் உடனாய் ஆதி
அன்றதாய் ஆன்மா வின்தன் அறிவொடு தொழிலை ஆர்த்து
நின்றுபோத் திருத்து வத்தை நிகழ்த்திச்செம் பினிற்களிம்பேய்ந்(து)
என்றும்அஞ் ஞானங் காட்டும் ஆணவம் இயைந்து நின்றே. 170

81. மலமென வேறொன் றில்லை மாயாகா ரியம தென்னின்
இலகுயிர்க் கிச்சா ஞானக் கிரியைகள் எழுப்பும் மாயை
விலகிடும் மலமி வற்றை வேறுமன் றதுவே றாகி
உலகுடல் கரண மாகி உதித்திடும் உணர்ந்து கொள்ளே. 171

82. மாயையே ஆன்ம ஞானக் கிரியையை மறைத்து நிற்கும்
தூயவெம் பரிதி தன்னைச் சுடர்முகில் மறைத்தாற் போலப்
போய்முகில் அகலச் சோதி புரிந்திடு மதுவே போலக்
காயமு மகல ஞானத் தொழில்பிர காச மாமே. 172

83. பரிதியை முகில் மறைப்பப் பாயொளி பதுங்கி னாற்போல்
உருவுயிர் மறைக்கின் ஞானக் கிரியைகள் ஔ¤க்கு மாகும்
கருதிடும் இச்சா ஞான காரியம் காயம் பெற்றால்
மருவிடும் உயிர்க்குக் காயம் வந்திடா விடின்மறைப்பே. 173

84. போதகா ரியம்ம றைத்து நின்றது புகல்ம லங்காண்
ஓதலாம் குணமு மாக உயிரினுள் விரவ லாலே
காதலால் அவித்தை சிந்தத் தரும்கலை யாதி மாயை
ஆதலா லிரண்டுஞ் சோதி இருளென வேறா மன்றே. 174

85. புருடன்தன் குணம் அவித்தை யெனில்சடம் புருட னாகும்
குருடன்தன் கண்ணின் குற்றம் கண்ணின்தன் குணமோ கூறாய்
மருள்தன்றன் குணம தாகி மலம்அசித் தாகி நிற்கும்
தெருள்தன்றன் குணம தாகிச் சித்தென நிற்கும் சீவன். 175

86. மும்மலம் நெல்லி னுக்கு முளையொடு தவிடு மிப்போல்
மம்மர்செய் தணுவி னுண்மை வடிவினை மறைத்து நின்று
பொய்ம்மைசெய் போக பந்த போத்திருத் துவங்கள் பண்ணும்
இம்மலம் மூன்றி னோடும் இருமல மிசைப்பன் இன்னும். 176

87. மாயையின் காரி யத்தை மாயேய மலம தென்றும்
ஏயும்மும் மலங்கள் தத்தந் தொழிலினை இயற்ற ஏவும்
தூயவன் தனதோர் சத்தி திரோதான கரிய தென்றும்
ஆய்வர்இம் மலங்கள் ஐந்தும் அணுக்களை அணைந்து நிற்கும். 177

88. மலம்மாயை கன்மம் மாயே யம்திரோ தாயி மன்னிச்
சலமாரும் பிறப்பி றப்பில் தங்கிஇத் தரைகீழ் மேலும்
நிலையாத கொள்ளி வட்டங் கறங்கென நிமிடத் தின்கண்
அலமாரும் இறைவ னாணை யால்உயிர் நடக்கு மன்றே. 178

89. அண்டசம் சுவேத சங்கள் உற்பிச்சம் சராயு சத்தோ(டு)
எண்தரு நாலெண் பத்து நான்குநூ றாயி ரத்தால்
உண்டுபல் யோனி யெல்லாம் ஒழித்துமா னுடத்து தித்தல்
கண்டிடில் கடலைக் கையால் நீந்தினன் காரி யங்காண். 179

90. நரர்பயில் தேயந் தன்னில் நான்மறை பயிலா நாட்டில்
விரவுத லொழிந்து தோன்றல் மிக்கபுண் ணியந்தா னாகும்
தரையினிற் கீழை விட்டுத் தவஞ்செய்சா தியினில் வந்து
பரசம யங்கள் செல்லாப் பாக்கியம் பண்ணொ ணாதே. 180

91. வாழ்வெனும் மையல் விட்டு வறுமையாம் சிறுமை தப்பித்
தாழ்வெனும் தன்மை யோடும் சைவமாம் சமயம் சாரும்
ஊழ்பெற லரிது சால உயர்சிவ ஞானத் தாலே
போழிள மதியி னானைப் போற்றுவார் அருள்பெற் றாரே. 181

92. மானுடப் பிறவி தானும் வகுத்தது மனவாக் காயம்
ஆனிடத் தைந்து மாடும் அரன்பணிக் காக வன்றோ
வானிடத் தவரும் மண்மேல் வந்தரன் றனைஅர்ச் சிப்பர்
ஊனெடுத் துழலும் ஊமர் ஒன்றையும் உணரார். 182

93. கருவினுள் அழிவ தாயும் கழிந்திடா தழிவ தாயும்
பரிணமித் தழிவ தாயும் பாலனாய் அழிவ தாயும்
தருணனாய் அழிவ தாயும் தான்நரைத் தழிவ தாயும்
உருவமே யழியே யானால் உள்ளபோ தேபார் உய்ய. 183

94. ஒருபுலன் நுகரும் போதங் கொன்றில்லை ஒன்றன் பாலும்
வருபயன் மாறி மாறி வந்திடும் எல்லாம் மாறும்
ஒருபொழு துணரி னுண்டாம் அல்லதிவ் வல்லல் வாழ்க்கை
மருள்கன வதுவும் போல மாயும்பின் மாயு மன்றே. 184

95. அரிசனம் பூசி மாலை அணிந்துபொன் னாடை சாத்திப்
பரிசனம் பின்பு செல்லப் பாரகர் பரிக்கக் கொட்ட
வரிசின்ன மூதத் தொங்கல் வந்திட வுணர்வு மாண்டு
பெரியவர் பேச்சு மின்றிக் கிடத்தலால் பிணத்தோ டொப்பர். 185

96. பிணத்தினை ஒத்து வாழ்வோர் பின்னடைப் பிணங்கள் போல
உணக்கியே உழல்வீர் உங்க ளுடலுயிர் உணர்வு மெல்லாம்
கணத்திடைத் தோன்றி மாயும் காயமென் றறிந்தொ ருக்கால்
வணக்குறீர் அரனை என்றும் வானவர் வணங்க வைப்பன். 186


---திருச்சிற்றம்பலம்---

 

bot About Us | Policy | Contact Us | ©2018 Saiva Siddhanta
Back to Top