lingam saivasiddhantam natarajar science siva

சாத்திர நூல் 2 s - சிவஞான சித்தியார் (சுபக்கம்)

go to -> பரபக்கம்

அருள் நந்தி சிவாச்சாரியார்
விரும்பிய பதிகத்திற்கு செல்ல
பாடல் .

Go to Meikanda Saathiram
| 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 |
| 8 | 9 | 10 | 11 | 12 | 13 | 14 |

உண்மை விளக்கம் நூலை இங்கே சொடுக்கி பதவிறக்கம் செய்யவும்.


<< முந்தயப் பதிகம் | முகப்பு | அடுத்தப் பதிகம் >>

இயல் : பி ரா ம ண வி ய ல்
              எண்: 6    மூன்றாஞ் சூத்திரம்

திருச்சிற்றம்பலம்

1. உயிரெனப் படுவ திந்த உடலின்வே றுளதாய் உற்றுச்
செயிருறும் இச்சா ஞானச் செய்திக ளுடைய தாகிப்
பயில்வுறும் இன்பத் துன்பப் பலங்களும் நுகரும் பார்க்கில்
துயிலொடும் அஞ்ச வத்தைப் படும்உண்மை துரியா தீதம். 187

2. உடலின்வே றுயிரேன் இந்த உடலன்றோ உணர்வ தென்னின்
உடல்சவ மான போதும் உடலினுக் குணர்வுண் டோதான்
உடலினின் வாயுப் போனால் உணர்ச்சியின் றுடலுக்கென்னின்
உடலினின் வாயுப் போகா துறக்கத்தும் உணர்வ தின்றே. 188

3. அறிவதைம் பொறியே யென்னின் உறக்கத்தி னறியாவாகும்
அறிவதும் ஒன்றொன் றாக ஒன்றொன்றாய் அறியு மென்னின்
அறிவுக ளொன்றை யொன்றங் கறிந்திடா ஐந்தையுங் கொண்(டு)
அறிவதொன் றுண்ட தான்மா ஐம்பொறி அறிந்தி டாவே. 189

4. அறிந்திடும் பிராண வாயு அடங்குதல் விடுதல் செய்தால்
அறிந்திடா துடலு றக்கத் தறிவின்மை கரண மின்மை
அறிந்திடு முதலி யாகின் அதுநிற்கக் கரணம் போகா
அறிந்திடும் பிராணன் தன்னை அடக்கியும் விட்டும் ஆன்மா. 190


---திருச்சிற்றம்பலம்---

 

bot About Us | Policy | Contact Us | ©2017 Saiva Siddhanta
Back to Top