lingam saivasiddhantam natarajar science siva

சாத்திர நூல் 2 s - சிவஞான சித்தியார் (சுபக்கம்)

go to -> பரபக்கம்

அருள் நந்தி சிவாச்சாரியார்
விரும்பிய பதிகத்திற்கு செல்ல
பாடல் .

Go to Meikanda Saathiram
| 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 |
| 8 | 9 | 10 | 11 | 12 | 13 | 14 |

உண்மை விளக்கம் நூலை இங்கே சொடுக்கி பதவிறக்கம் செய்யவும்.


<< முந்தயப் பதிகம் | முகப்பு | அடுத்தப் பதிகம் >>

இயல் : இ ல க் க ண வி ய ல்
              எண்: 7    நான்காஞ் சூத்திரம்

திருச்சிற்றம்பலம்

1. உணர்வன கரண மென்னின் ஒன்றையொன் றுணரா வெவ்வே(று)
அணைதருஞ் செயல்கள் நான்கும் அறிந்தவை அடக்கி ஆக்கிப்
புணருமுட் கரண மாக்கிப் புறக்கரு வியினும் போக்கி
இணைதரு மிவற்றின் வேறாய் யானென தென்ப தான்மா. 191

2. கருவியாம் மனமும் புத்தி அகங்காரம் சித்தம் நான்கும்
மருவிஆன் மாவே என்ன வரும்தீப மெனத்தெ ரிந்தாங்(கு)
ஒருவியான் மாவி னுண்மை உணர்ந்தவர் தமையு ணர்ந்தோர்
தருமிது பசுஞா னம்பின் சிவஞானந் தனக்கு மேலாம். 192

3. அவ்வுடன் உவ்வும் மவ்வும் மனம் மனம்புத்தி அகங்கா ரங்கள்
செவ்விய விந்து நாதஞ் சித்தமோ டுள்ள மாகும்
ஒவ்வெனும் எழுத்தாம் ஐந்தும் உணர்வுதித் தொடுங்குமா
பவ்வமும் திரையும் போலும் பார்க்கில்இப் பண்புந் தோன்றும். 193

4. அயன்அரி அரனு மீசர் சதாசிவம் அதிதெய் வங்கள்
உயவரும் அவ்வோ டுவ்வு மவ்விந்து நாதங் கட்குப்
பயனுறும் அஞ்சில் ஆன்மாப் பரவிடில் அசித்தாம் பார்க்கில்
சயமுறு வளியி ரண்டும் தவிர்த்துறில் தானுந் தோன்றும். 194

5. ஆன்மாவின் வடிவு தானே அநேகார்த்தக் கூட்ட மென்னில்
பார்ப்பார்கட் கான்மா இன்றாய்ப் பலபொரு ளுண்மையாகும்
சேர்ப்பாய பலவே உண்மை என்றிடில் சென்றி வற்றை
ஓர்ப்பான்வே றுணர்வோர்க் கெல்லாம் உணர்பொருள் வேறதாமே. 195

6. அறிவிச்சை செயல்களெல்லாம் அடைந்தனல் வெம்மை யும்போல்
குறியுற்றங் கேகா நேக குணகுணி பாவ மாகி
நெறியுற்று நிற்கு மென்னில் நிகழபுலன் கரண மெல்லாம்
செறிவுற்றங் கறிவு கொள்ள வேண்டுமா சீவ னார்க்கே. 196

7. குணங்களை யின்றி யொன்றாம் குறியு டைத்தான்மா வென்னின்
இணங்கிடா இச்சா ஞானக் கிரியைகள் இவையு டற்கட்
பிணங்கிடுஞ் சந்நி திக்கண் எனிற்பிணத் துறக்கத் தின்றாம்
உணங்கிடும் கரண மென்னில் சந்நிதி ஒழிந்த தன்றே. 197

8. சந்நிதி குணம தாகும் தானென்போல் என்னிற் காந்தம்
முன்னிரும் பென்றா யீர்க்கு முறைமையுண் டகற்ற லின்றாம்
உன்னுத லொடுங்கல் ஓடல் இருத்தலே கிடத்தல் நிற்றல்
என்னுமித் தொழில்கள் மற்றும் இயற்றுவ தான்மா வென்னே. 198

9. உருவுயி ரென்னின் இந்த உடலினுட் காண வேண்டும்
வருவது பரிணா மத்தாய் அநித்தமாம் பூத மாகும்
கருவினில் நுழையு மாறும் காட்டிட வேண்டும் கண்ணின்
மருவிடா தென்னின் உன்றன் வாயினால் உருவன் றென்னே. 199

10. சூக்கும உருவ தென்னில் தூலகா ரணம் தாகும்
ஆக்கிய மனாதி தன்மாத் திரைவடி வசேத னம்பின்
நீக்கிய சூக்கு மத்தே நிற்பதோ ருருவுண் டென்னின்
ஆக்கிடும் உருவமெல்லாம் அசித்துமாய் அநித்த மாமே. 200

11. அருவுரு வென்னில் ஆன்மா அருவுரு வாவ தின்றாம்
உருவரு வாகா தாகும் ஒருபொருட் கிரண்டு தன்மை
வருவது மில்லை காட்ட வன்னிபோல் மருவு மென்னின்
உருவமுங் காண வேண்டும் உண்மையும் ஒழிந்து போமே. 201

12. சந்திரன் வடிவு போலத் தான்அரு வுருவ மென்னின்
வந்துநங் கண்ணிற் றோனறும் வடிவுள தாமு யிர்க்கும்
இந்தவூ னுருவந் தானாய் எழுவது முயிரே யென்னில்
பந்தமாய் அசித்தா யான்மாப் பவுதிக மாகு மன்றே. 202

13. அருவவி காரி யான்மா ஆகாயம் போல வென்னின்
உருவினைக் கட்டி யாட்டி ஓட்டிமீட் டுலாவப் பண்ணி
மருவிநிற் பிதி ருத்திக் கிடத்திமண் புரட்டி மற்றும்
பெருவிகா ரங்க ளெல்லாம் தருவதென் பேசி டாயே. 203

14. அசித்தெனின் உணராதான்மா அசித்துச்சித் தாகுமென்னின்
அசித்துச்சித் தாகா தாகும் சித்தசித் தாவ தில்லை
அசித்தொரு புறமா யொன்றில் சித்தொரு புறமாய்நில்லா(து)
அசித்துறாச் சித்தே யென்னின் அசித்தடைந் தறிவ தின்றாம். 204

15. உயிரினை அணுவ தென்னின் உடல்பல துவார மோடும்
பயில்வுறக் கட்டு ணாது பாரமும் தரித்துச் செல்லா(து)
அயர்வுறும் அசித்தாய்ப் பூத அணுக்களி னொன்ற தாகும்
இயல்புறும் அவய வத்தால் அணுவுரு இறக்கு மன்றே. 205

16. உடலினின் ஏக தேசி உயிரெனின் உருவாய் மாயும்
படர்வுறு மறிவின் றெங்கும் சுடரொளிப் பண்ப தென்னில்
சுடர்தொடிற் சுடுவ தெங்கும் தொட்டிடம் அறிவுண் டாகும்
அடர்புலன் இடத்து மொக்க அறிவெழ வேண்டுமன்றே. 206

17. உருவினில் நிறைந்து நின்றங் குணர்ந்திடும் உயிர தென்னின்
மருவிடா துறக்கம் வாயில் அறிவொக்க வழங்க வேண்டும்
பெருகிடும் சுருங்கும் போதம் பேருடல் சிற்று டற்கண்
வருமுடற் குறைக்க வொக்கக் குறைந்துபின் மாயுமன்றே. 207

18. எங்குந்தான் வியாபி யாய்நின் றுணரும்இவ் வான்மா வென்னில்,
தங்கிடும் அவத்த போக்கு வரவுகள் சாற்றால் வேண்டும்,
பங்கமார் புலனொன் றொன்றாய்ப் பார்த்திடல் பகரல் வேண்டும்,
இங்கெலாம் ஒழிந்தான் நிற்ப தெங்ஙனம் இயம்பல் வேண்டும். 208

19. சுத்தமாம் ஆன்ம சித்தைத் துகளுடல் மறைத்த தென்னின்
வைத்துறா துடற்கண் வாயில் கரணங்கள் வழியால் ஞானம்
ஒத்துறும் மலமற் றாலும் உறுமலம் வீடு மின்றாம்
பெத்தமு மடையான் முத்த னாய்ப்பிர காச னாமே. 209

20. அசித்தரு வியாப கம்போல் வியாபகம் அருவ மின்றாய்
வசித்திட வரும்வி யாபி யெனும்வழக் குடைய னாகி
நசித்திடா ஞானச் செய்தி அநாதியே மறைத்து நிற்கும்
பசுத்துவ முடைய னாகிப் பசுவென நிற்கு மான்மா. 210

21. மாயையின் வயிற்றுள் மன்னி வருஞ்செயல் ஞான மிச்சை
ஏயுமக் கலாதி மூன்றால் ஏகதே சத்தி னேய்ந்திங்(கு)
ஆயுமுக் குணங்கள் அந்தக் கரணங்க ளாதி யெல்லாம்
காயபெத் தங்க ளாகிக் கலந்துடன் நிற்கு மான்மா. 211

22. சூக்கும தேகி யாகித் தூலரூ பத்தின் மன்னிச்
சாக்கிர முதலா யுள்ள அவத்தையுள் தங்கி யெங்கும்
போக்கொடு வரவு மெல்லாம் புரிந்துபுண் ணியங்கள் பாவம்
ஆக்கியும் பலன்க ளெல்லாம் அருந்தியும் நிற்கு மான்மா. 212

23. மருவா னந்தம் விஞ்ஞான மனோபி ராணன் அன்னமயம்
உருவாந் தன்மை யுண்டாய்மு ஒன்றுக் கொன்று சூக்குமமாய்
வருமாம் அன்ன மயம்பற்றி மாயை முதற்கா ரணமாகும்
அருவா யான்மாஐங் கோசத்தார்ப் புண்டவற்றின் அகம் புறமாம். 213

24. தோற்பாவைக் கூத்தும் தொல்லை மரப்பாவை இயக்கமும் சீர்த்
தேர்ப்பாரிற் செலவும்வேறாய்ச் செலுத்துவோர் செய்திதானும்
பார்ப்பாய வேடங் கட்டி ஆடுவோர் பரிசு போலும்
ஆர்ப்பாய காயந் தன்னை ஆன்மாநின் றாட்டு மாறே. 214

25. என்னுடல் பொறிபி ராணன் கரணம்என் னுணர்வென் றக்கால்
தன்னின்வே றாகும் நீஎன் றன்மனை யென்ற வெல்லாம்
நின்னின்வே றாகும் என்னின் நீங்கிடா இவையிங் கென்னின்
உன்னின வாகும் நீயாம் உகிர்மயிர் உகவுங் காண்டி. 215

26. பொன்னணி யாடை மாலை போதுமே லான போதிங்(கு)
என்னணி யானென் றுன்னி இருந்தனை பிரிந்த போது
நின்னணி நீயு மல்ல வாயினை காய நின்னில்
அன்னிய மாகும் உன்னை அறிந்துநீ பிரிந்து பாரே. 216

27. உடலியா னல்லேன் இந்த உணர்வுயான் அல்ல வான
கடனியா தென்னின் வேறு கண்டுணர் வென்ன தென்னகை
இடரிலா என்ற னான்மா என்றபோ தான்மா வேறோ
திடனதா உயிரை வேறு கண்டிடார் செப்ப லேகாண். 217

28. புந்தியை மனம தென்றும் மனமது புந்தி யென்றும்
சிந்தையைச் சீவ னென்றும் சீவனைச் சிந்தை யென்றும்
முந்தனை யான்மா வென்றும் ஆன்மாவை முந்த னென்றும்
வந்திடு மென்ற னான்மா என்றது மற்றொன் றைக்காண். 218

29. அறிவுடல் சிந்தை யான்மா அணைதலால் ஆன்மா வென்பர்
எறிசுடர் விளக்கி ருக்கு மிடத்தையும் விளக்கென்றாற்போல்
பொறிபுலன் கரண மெல்லாம் புலப்படும் அபேத மாகிப்
பிறிதரா தறிவ தான்மர அறிபொருள் பின்ன மாமே. 219

30. கண்டுணர் புருடன் வேறு கனவுகண் டொடுங்கிக் காயம்
உண்டியும் வினையு மின்றிக் கிடந்துயிர்த் திடவு ணர்ந்து
கண்டிடுங் கனவுஞ் சொல்லி ஒடுக்கமுங் கருதி வேறாய்
உண்டியும் வினையும் உற்றிங் குணர்த்திட உணரா நிற்கும். 220

31. புருடனே அறிவ னாகில் பொறிபுல னாதி போதம்
தருவதென் அறிவு மாயா தனுகர ணாதி பற்றி
வருவதிங் கநாதி யாக மலத்தினின் மறைந்து நிற்பன்
அருவனாய் இவற்றோ டாளும் அமைச்சரும் அரசும் போல்வன். 221

32. படைகொடு பவனி போதும் பார்மன்னன் புகும்போ தில்லில்
கடைதொறும் விட்டு விட்டுக் காவலு மிட்டுப் பின்னர்
அடைதருந் தனியே அந்தப் புரத்தினில் அதுபோ லான்மா
உடலினின் அஞ்ச வத்தை உறுமுயிர் காவ லாக. 222

33. சாக்கிர முப்பத் தைந்து நுதலினிற் கனவு தன்னில்
ஆக்கிய இருபத் தைந்து களத்தினிற் சுழுமுனை மூன்று
நீக்கிய இதயந் தன்னில் துரியத்தி லிரண்டு நாபி
நோக்கிய துரியா தீதம் நுவலின்மூ லத்தி னொன்றே. 223

34. இருவகைச் சாக்கி ராதி அவத்தைக ளியல்பு தானும்
இருவகை கீழே நூக்கி உற்பவங் காட்டு மொன்று
பெருகமேல் நோக்கித் தீய பிறப்பறுந் திடுமி யோகில்
தருவதோர் சமாதி தானும் தாந்துபின் சனனஞ் சாரும். 224

35. அறிதரு முதல வத்தை அடைதரு மிடத்தே ஐந்தும்
செறிதருங் கரணந் தன்னில் செயல்தொறுபே கண்டு கொள்நீ
பிறிவிலா ஞானத் தோரும் பிறப்பற அருளா லாங்கே
குறியொடும் அஞ்ச வத்தை கூடுவர் வீடு கூட. 225

36. ஐந்துசாக் கிரத்தின் நான்கு கனவினில் சுழுனை மூன்று
வந்திடுந் துரியந் தன்னின் இரண்டொன்று துரியா தீதம்
தந்திடும் சாக்கி ராதி அவத்தைகள் தானந் தோறும்
உந்திடுங் கரணந்தன்னில் செயல்தொறு முணர்ந்து கொள்ளே. 226

37. கேவல சகல சுத்தம் என்றுமூன் றவத்தை யான்மா
மேவுவன் கேவ லந்தன் னுண்மைமெய் பொறிக ளெல்லாம்
காவலன் கொடுத்த போது சகலனா மலங்க ளெல்லாம்
ஓவின போது சுத்த முடையன்உற் பவந்து டைத்தே. 227

38. அறிவிலன் அமூர்த்தன் நித்தன் அராகாதி குணங்க ளோடும்
செறிவிலன் கலாதி யோடும் சேர்விலன் செயல்க ளில்லான்
குறியிலன் கருத்தா வல்லன் போகத்திற் கொள்கை யில்லான்
பிறிவிலன் மலத்தி னோடும் வியாபிகேவலத்தில் ஆன்மா. 228

39. உருவினைக் கொண்டு போக போக்கியத் துன்னல் செப்பல்
வருசெயல் மருவிச் சத்த மாதியம் விடயம் தன்னில்
புரிவதுஞ் செய்திங் கெல்லா யோனியும் புக்கு ழன்று
திரிதரும் சகல மான அவத்தையிற் சீவன் சென்றே. 229

40. இருவினைச் செயல்க ளொப்பின் ஈசன்தன் சத்தி தோயக்
குருவருள் பெற்று ஞான யோகத்தைக் குறுகி முன்னைத்
திரிமல மறுத்துப் பண்டைச் சிற்றறி வொழிந்து ஞானம்
பெருகிநா யகன்தன் பாதம் பெறுவது சுத்த மாமே. 230


---திருச்சிற்றம்பலம்---

 

bot About Us | Policy | Contact Us | ©2018 Saiva Siddhanta
Back to Top