lingam saivasiddhantam natarajar science siva

சாத்திர நூல் 2 s - சிவஞான சித்தியார் (சுபக்கம்)

go to -> பரபக்கம்

அருள் நந்தி சிவாச்சாரியார்
விரும்பிய பதிகத்திற்கு செல்ல
பாடல் .

Go to Meikanda Saathiram
| 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 |
| 8 | 9 | 10 | 11 | 12 | 13 | 14 |

உண்மை விளக்கம் நூலை இங்கே சொடுக்கி பதவிறக்கம் செய்யவும்.


<< முந்தயப் பதிகம் | முகப்பு | அடுத்தப் பதிகம் >>

இயல் : இ ல க் க ண வி ய ல்
              எண்: 8    ஐந்தாஞ் சூத்திரம்

திருச்சிற்றம்பலம்

1. பொறிபுலன் கரண மெல்லாம் புருடனால் அறிந்தான் மாவை
அறிதரா அவையே ஆன்மாக்க ளனைத்து மெங்கும்
செறிதரும் சிவன்ற னாலே அறிந்திடும் சிவனைக் காணா
அறிதரும் சிவனே யெல்லாம் அறிந்தறி வித்து நிற்பன். 231

2. இறைவனே அறிவிப் பானேல் ஈண்டறி வெவர்க்கும் ஒக்கும்
குறைவதி கங்கள் தத்தம் கன்மமேற் கோமான் வேண்டா
முறைதரு செயற்குப் பாரும் முளரிகட் கிரவி யும்போல்
அறைதரும் தத்தங் கன்மத் தளவினுக் களிப்பன் ஆதி. 232

3. அறிந்திடும் ஆன்மா வொன்றை ஒன்றினால் அறித லானும்
அறிந்தவை மறத்த லானும் அறிவிக்க அறித லானும்
அறிந்திடுந் தன்னை யுந்தான் அறியாமை யானுந் தானே
அறிந்திடும் அறிவன் அன்றாம் அறிவிக்க அறிவ னன்றே. 233

4. கருவியால் பொருளால் காட்டால் காலத்தால் கருமந் தன்னால்
உருவினால் அளவால் நூலால் ஒருவரா லுணர்த்த லானும்
அருவனாய் உண்மை தன்னில் அறியாது நிற்ற லானும்
ஒருவனே எல்லாத் தானும் உணர்த்துவன் அருளி னாலே. 234

5. கருவியும் பொருளும் காட்டும் காலமும் கன்மந் தானும்
உருவமும் அளவும் நூலும் ஒருவரு முணர்த்த லின்றி
அருவனா யுலக மெல்லாம் அறிந்தவை யாக்கி வேறாய்
ஒருவனே உயிர்கட் கெல்லாம் உயிருமாய் உணர்த்தி நிற்பன். 235

6. இறைவன்தன் சந்நி திக்கண் உலகின்றன் சேட்டை யென்னும்
மறைகளும் மறந்தாய் மாயை மருவிடான் சிவன வன்கண்
உறைதரா தசேத னத்தால் உருவுடை உயிர்கட் கெல்லாம்
நிறைபரன் சந்நி திக்கண் நீடுணர் வுதிக்கு மன்றே. 236

7. உலகமே உருவ மாக யோனிகள் உறுப்ப தாக
இலகுபே ரிச்சா ஞானக் கிரியையுட் கரண மாக
அலகிலா உயிர்ப்பு லன்கட் கறிவினை யாக்கி ஐந்து
நலமிகு தொழில்க ளோடும் நாடகம் நடிப்பன் நாதன். 237

8. தெரிந்துகொண் டொரோவொன் றாகச் சென்றைந்து புலனும் பற்றிப்,
புரிந்திடும் உணர்வி னோடும் போகமுங் கொடுத்தி யோனி,
திரிந்திடு மதுவுஞ் செய்து செய்திகண் டுயிர்கட் கெல்லாம்,
விரிந்திடும் அறிவுங் காட்டி வீட்டையும் அளிப்பன் மேலோன். 238

9. அருளது சத்தி யாகும் அரன்தனக் கருளை யின்றித்
தெருள்சிவ மில்லை அந்தச் சிவமின்றிச் சத்தி யில்லை
மருளினை அருளால் வாட்டி மன்னுயிர்க் களிப்பன் கண்கட்(கு)
இருளினை ஔ¤யா லோட்டும் இரவியைப் போல ஈசன். 239


---திருச்சிற்றம்பலம்---

 

bot About Us | Policy | Contact Us | ©2017 Saiva Siddhanta
Back to Top