lingam saivasiddhantam natarajar science siva

சாத்திர நூல் 2 s - சிவஞான சித்தியார் (சுபக்கம்)

go to -> பரபக்கம்

அருள் நந்தி சிவாச்சாரியார்
விரும்பிய பதிகத்திற்கு செல்ல
பாடல் .

Go to Meikanda Saathiram
| 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 |
| 8 | 9 | 10 | 11 | 12 | 13 | 14 |

உண்மை விளக்கம் நூலை இங்கே சொடுக்கி பதவிறக்கம் செய்யவும்.


<< முந்தயப் பதிகம் | முகப்பு | அடுத்தப் பதிகம் >>

இயல் : இ ல க் க ண வி ய ல்
              எண்: 9    ஆறாஞ் சூத்திரம்

திருச்சிற்றம்பலம்

1. அறிவுறும் பொருளோ ஈச னறிவுறா தவனோ வென்னின்
அறிபொருள் அசித்த சத்தாம் அறியாத தின்றாம் எங்கும்
செறிசிவம் இரண்டு மின்றிச் சித்தொடு சத்தாய் நிற்கும்
நெறிதருஞ சத்தின் முன்னர் அசத்தெலாம் நின்றிடாயே. 240

2. ஆவதாய் அழிவ தாகி வருதலால் அறிவு தானும்
தாவலால் உலகு போகம் தனுகர ணாதி யாகி
மேவலால் மலங்க ளாகி விரவலால் வேறு மாகி
ஓவலால் அசத்தாம் சுட்டி உணர்பொரு ளான வெல்லாம். 241

3. மண்தனில் வாழ்வும் வானத் தரசயன் மாலார் வாழ்வும்
எண்தரு பூத பேத யோனிகள் யாவு மெல்லாம்
கண்டஇந் திரமா சாலம் கனாக்கழு திரதங் காட்டி
உண்டுபோல் இன்றாம் பண்பின் உலகினை அசத்த மென்பர். 242

4. உணராத பொருள்சத் தென்னின் ஒருபய னில்லைத் தானும்
புணராது நாமும் சென்று பொருந்துவ தின்றாம் என்றும்
தணவாத கரும மொன்றும் தருவது மில்லை வானத்(து)
இணரார்பூந் தொடையு மியாமைக் கெழுமயிர்க் கயிறும் போலும். 243

5. தத்துவம் சத்(து) அசத்துச் சதசத்து மன்றென் றாலென்
உய்த்துணர்ந் துண்டோ இன்றோ என்றவர்க் குண்டென் றோதில்
வைத்திடும் சத்தே யாகும் மனத்தொடு வாக்கி றந்த
சித்துரு அதுஅ சித்தாம் மன்த்தினால் தேர்வ தெல்லாம். 244

6. அறிபொருள் அசித்தாய் வேறாம் அறிவுறாப் பொருள்சத்தென்னின்
அறிபவன் அறியா னாகில் அதுஇன்றுபயனு மில்லை
அறிபவன் அருளி னாலே அந்நிய மாகக் காண்பன்
அறிபொரு ளறிவாய் வேறாய் அறிவரு ளுருவாய் நிற்கும். 245

7. பாவிப்ப தென்னிற் பாவம் பாவகங் கடத்திற் பாவம்
பாவிக்கும் அதுநா னென்னில் பாவகம் பாவங் கெட்டுப்
பாவிப்ப தென்னிற் பாவம் பாவனை இறந்து நின்று
பாவிக்கப் படுவ தாகும் பரம்பரன் அருளி னாலே. 246

8. அன்னிய மிலாமை யானும் அறிவினுள் நிற்ற லானும்
உன்னிய வெல்லாம் உள்நின் றுணர்த்துவன் ஆத லானும்
என்னதி யானென் றோதும் இருஞ்செருக் கறுத்த லானும்
தன்னறி வதனாற் காணும் தகைமையன் அல்லன் ஈசன். 247

9. ஒன்றெனு மதனால் ஒன்றென் றுரைப்பதுண் டாகை யாலே
நின்றனன் வேறாய்த் தன்னின் நிங்கிடா நிலைமை யாலே
பின்றிய வுணர்வுக் கெட்டாப் பெருமையன் அறிவி னுள்ளே
என்றுநின் றிடுத லாலே இவன்அவ னென்ன லாமே. 248


---திருச்சிற்றம்பலம்---

 

bot About Us | Policy | Contact Us | ©2017 Saiva Siddhanta
Back to Top