lingam saivasiddhantam natarajar science siva

சிவப்பிரகாசம்

உமாபதி சிவாச்சாரியார்
விரும்பிய பதிகத்திற்கு செல்ல
பாடல் .

Go to Meikanda Saathiram
| 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 |
| 8 | 9 | 10 | 11 | 12 | 13 | 14 |

சிவப்பிரகாசம் 
- உரை: திருவிளங்கம்


<< முந்தயப் பதிகம் | முகப்பு | அடுத்தப் பதிகம் >>

              பாடல் எண்: 10    உண்மை அதிகாரம் - 2. அஞ்சவத்தை இயல்பு
பண் :

திருச்சிற்றம்பலம்

1. அஞ்சவத்தை இயல்பு
-------------------------------
எண்ணவொன் றிலாத தீத
மெய்திய துரியத் தொன்று
நண்ணிடுஞ் சுழுத்தி தன்னில்
நயந்துள தொன்று பின்னு
மண்ணிடுங் கனவு தன்னி
லாறேழாஞ் சாக்கிரத்திற்
கண்ணுறு மஞ்சா றாய
கருவிகள் மருவுந் தானே.

2. இவ்வகை அவத்தை தன்னி
லெய்திடுங் கரணமெல்லா
மெய்வகை யிடத்தி லுற்று
மேவுமா கண்டு மிக்க
பொய்வகைப் பவம கற்றப்
புரிந்திடி லருளாலாங்கே
யைவகை யவத்தை யுய்க்குமறி
வினாலறிந்து கொள்ளே.

3. நீக்கமி லதீத மாசு
நிறைந்தகே வலமா நீர்மை
சாக்கிரங் கலாதி சேர்ந்த
சகலமாந் தன்மை யாகு
மூக்கமி லிரண்டுங் கூடா
தொழியவோர் நிலையி னீடுஞ்
சாக்கி ராதீதஞ் சுத்தத்
தகைமைய தாகுந் தானே.


---திருச்சிற்றம்பலம்---

 

bot About Us | Policy | Contact Us | ©2018 Saiva Siddhanta
Back to Top