lingam saivasiddhantam natarajar science siva

சிவப்பிரகாசம்

உமாபதி சிவாச்சாரியார்
விரும்பிய பதிகத்திற்கு செல்ல
பாடல் .

Go to Meikanda Saathiram
| 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 |
| 8 | 9 | 10 | 11 | 12 | 13 | 14 |

சிவப்பிரகாசம் 
- உரை: திருவிளங்கம்


<< முந்தயப் பதிகம் | முகப்பு | அடுத்தப் பதிகம் >>

              பாடல் எண்: 12    உண்மை அதிகாரம் - 4. ஞான வாய்மை
பண் :

திருச்சிற்றம்பலம்

1. ஞான வாய்மை
-----------------------
காட்டிடுங் கரண மொன்று
மில்லையேற் காணொ ணாதா
னாட்டிய விவற்றான் ஞான
நணுகவு மொண்ணா முன்னம்
ஈட்டிய தவத்தி னாலே
யிறையரு ளுருவாய் வந்து
கூட்டிடு மிவற்றை நீக்கிக்
குரைகழல் குறுகு மாறே.

2. பன்னிறங் கவருந் தொன்மைப்
படிகநீ டொளியும் பன்மை
மன்னிலங் கியல்புந் தந்த
வளரொளி போல வையந்
தன்னகம் பயிலு நற்சிற்
சடங்களின் றன்மை தாவா
நன்னலம் பெறநி றைந்த
ஞானமே ஞானமென்பர்.

3. மாயைமா யேய மாயா
வருமிரு வினையின் வாய்மை
யாயவா ருயிரின் மேவு
மருளெனி லிருளாய் நிற்கும்
மாயைமா யேய மாயா
வருமிரு வினையின் வாய்மை
யாயவா ருயிரின் மேவு
மருளெனி லொளியாய் நிற்கும்.


---திருச்சிற்றம்பலம்---

 

bot About Us | Policy | Contact Us | ©2017 Saiva Siddhanta
Back to Top