lingam saivasiddhantam natarajar science siva

சிவப்பிரகாசம்

உமாபதி சிவாச்சாரியார்
விரும்பிய பதிகத்திற்கு செல்ல
பாடல் .

Go to Meikanda Saathiram
| 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 |
| 8 | 9 | 10 | 11 | 12 | 13 | 14 |

சிவப்பிரகாசம் 
- உரை: திருவிளங்கம்


<< முந்தயப் பதிகம் | முகப்பு | அடுத்தப் பதிகம் >>

              பாடல் எண்: 17    உண்மை அதிகாரம் - 6. புனித நாமம்
பண் :

திருச்சிற்றம்பலம்

1. பந்தமா னவைய றுத்துப்
பவுதிக முழலு மெல்லைச்
சந்தியா தொழியா திங்குத்
தன்மைபோல் வினையுஞ் சாரும்
அந்தமா திகளில் லாத
வஞ்செழுத் தருளி னாலே
வந்தவா றுரைசெய் வாரை
வாதியா பேதி யாவே.

2. திருவெழுத் தைந்தி லான்மாத்
திரோத மாசருள் சிவஞ்சூழ்
தரநடு நின்ற தொன்றாந்
தன்மையுந் தொன்மை யாகி
வருமந மிகுதி யாலே
வாசியி லாசை யின்றிக்
கருவழிச் சுழலு மாறுங்
காதலார்க் கோத லாமே.

3. ஆசறு திரோத மேவா
தகலுமா சிவமுன் னாக
வோசைகொ ளதனி னம்மே
லொழித்தரு ளோங்கு மீள
வாசியை யருளு மாய
மற்றது பற்றா வுற்றங்
கீசனி லேக மாகு
மிதுதிரு வெழுத்தி னீடே.


---திருச்சிற்றம்பலம்---

 

bot About Us | Policy | Contact Us | ©2017 Saiva Siddhanta
Back to Top