lingam saivasiddhantam natarajar science siva

சிவப்பிரகாசம்

உமாபதி சிவாச்சாரியார்
விரும்பிய பதிகத்திற்கு செல்ல
பாடல் .

Go to Meikanda Saathiram
| 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 |
| 8 | 9 | 10 | 11 | 12 | 13 | 14 |

சிவப்பிரகாசம் 
- உரை: திருவிளங்கம்


<< முந்தயப் பதிகம் | முகப்பு | அடுத்தப் பதிகம் >>

              பாடல் எண்: 3    முதற் சூத்திரம் - பதி இயல்பு
பண் :

திருச்சிற்றம்பலம்

1. பல்கலையா கமவேத மியாவையினுங் கருத்துப்
பதிபசுபா சந்தெரித்தல்பதிபாரமே யதுதான்
நிலவுமரு வுருவின்றிக் குணங்குறிக ளின்றி
நின்மலமா யேகமாய் நித்த மாசி
யலகிலுயிர்க் குணர்வாகி யசல மாகி
யகண்டிதமா யானந்த வருவா யன்றிச்
செலவரிதாய்ச் செல்கதியாய்ச் சிறிதாகிப் பெரிதாய்த்
திகழ்வதுதற் சிவமென்பர் தெளிந்து ளோரே.

2. முதல்வன் திருவுரு
-------------------
நீடுபரா சத்திநிக ழிச்சா ஞான
நிறைகிரியை தரவதனை நிமலன் மேவி
நாடரிய கருணைதிரு வுருவ மாகி
நவின்றுபல கலைநாத விந்து வாதி
கூடுமொளி வளர்குடிலை மாயை மேவிக்
கொடுவினைகொள் தனுகரன புவன போகம்
பீடுபெற நிறுவியவை யொடுக்கு மேனி
பிறங்கியநிட் களசகளப் பெற்றி யாமே.

3. ஈங்கிதுவென் றதுகடந்த வியல்பி னானும்
ஈறுமுத நடுவொன்று மிலாமை யானும்
ஓங்கிவளர் ஞானமய னாத லானும்
உண்மைபிறர்க் கறிவரிய வொருமை யானும்
தாங்கரிய வெறுப்பினொடு விருப்பு மெல்லாஞ்
சார்வரிய தனிமுதல்வ னாத லானும்
நீங்கலரு முயிர்க்குயிராய் நிற்ற லானும்
நிறுத்திடுவ நினைந்தவுரு நிமலன் றானே.

4. முதல்வனது உண்மை
-------------------
உலகமெலா மொருவனோ டொருத்தியொன்றென்
றுளதாகி நின்றளவி லொடுங்கும் பின்னு
மலமதனா லுளதாகு முருவ மாறி
வருவது பேர் வதுசெல்வ தாத லானும்
மலைவிலசேத தனமாயை யாதலானு
மணுக்களுரு வடையுமறி விலாமை யானும்
நிலவுதொழின் மருவுயுரு நிற்ற லானும்
நின்றெவையு மளித்திடுவ நிமலன் றானே.

5. கந்தமல ரயன்படைக்கு முலக மெல்லாங்
கண்ணனளித் திடுமவையெங் கடவுள் தானே
யந்தமுற வழித்திடுவ னாத லாலே
யயனரியு மவனதுய ரதிகா ரத்து
வந்தமுறை தன்றொழிலே மன்னுவிப்ப னெல்லாம்
வருவிப்பன் விகாரங்கண் மருவான் வானின்
முந்தரவி யெதிர்முளரியலாவுறுமொன்றலர்வான்
முகையாமொன் றொன்றுலரு முறையி னாமே.

6. உலகப் படைப்பின் பயன்
-------------------
ஏற்றவிவை யரனருளின் றிருவிளையாட் டாக
வியம்புவர்க ளணுக்களிடர்க் கடனின்று மெடுத்தே
யூற்றமிக வருள்புரித லேது வாக
வுரைசெய்வ ரொடுக்கமிளைப் பொழித்தன் மற்றைத்
தோற்மல பாகம்வரக் காத்தல் போகந்
துய்ப்பித்த றிரோதாயி தகநிறுத்த லாகும்
போற்வரு மருளருளே யன்றி மற்றுப்
புகன்றவையு மருளொழியப் புகலொ ணாதே.


---திருச்சிற்றம்பலம்---

 

bot About Us | Policy | Contact Us | ©2018 Saiva Siddhanta
Back to Top