lingam saivasiddhantam natarajar science siva

சிவப்பிரகாசம்

உமாபதி சிவாச்சாரியார்
விரும்பிய பதிகத்திற்கு செல்ல
பாடல் .

Go to Meikanda Saathiram
| 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 |
| 8 | 9 | 10 | 11 | 12 | 13 | 14 |

சிவப்பிரகாசம் 
- உரை: திருவிளங்கம்


<< முந்தயப் பதிகம் | முகப்பு | அடுத்தப் பதிகம் >>

              பாடல் எண்: 6    அவத்தை இயல்பு - சகலாவத்தை
பண் :

திருச்சிற்றம்பலம்

1. மலமும் மாயையும் முரனுவன:
---------------------------------------
நால்வகை வாக்குகள்
------------------------
புகலுமல மொழித்தற்குக் கலாதிமுதன் மாயை
பொருந்தியிடு மரனருளாற் போதந் தீபஞ்
சகலமெலா முடனாய வாறு போலுந்
தருமருளை மலமுயிர்கள் சாராமன் மறைக்கு
மிகலிவரு மியையுணரி னிருள்வெளியாந் தன்மை
எய்தும் வகை தன்செய்தி யிலங்கும் விந்து
பகர்வரிய வுணர்வாகி யொளியா யுள்ளப்
பான்மையினால் ஒரு நாதம் படரும் தானே.

2. வந்தடைந்து பின்னமாய் வன்னங்கள் தோற்றம்
வருமடைவு படவொடுக்கி மயிலண்ட சலநேர்
சிந்தைதனி லுணர்வாகும் பைசந்தி யுயிரிற்
சேர்ந்துவரு மவைமருவு முருவெவையுந் தெரித்து
முந்தியிடுஞ் செவியிலுறா துள்ளணர்வா யோசை
முழங்கியிடு மத்திமைதான் வைகரியிலுதானன்
பந்தமுறு முயிரணைந்து வந்தமொழி செவியின்
பாலணைய நினைந்த பொருள் பகருந் தானே.

3. வாக்குகளால் சவிகற்ப உணர்வு உண்டாதலும் தத்துவங்களின் தொழிலும்
------------------------------------------------------------------------
இத்தகைமை இறையருளால் உயிரறியும் அறிவுக்
கீடாக வாடாதே யீரிரண்டா னுரைத்த
வித்தைமுத லைவரான் விளங்கு ஞான
மேவியிடு மெனவுரைப்ப ரசுத்த மாயை
வைத்தகலை தான்மூல மலஞ்சிறிதே நீக்கி
மருவும்வகை தெரிவிக்கும் வாயில்களின் பயனைப்
புத்திதர வித்தையிடை நின்றறிவை யுயிர்க்குப்
பொருந்தியிடும் வகைபுணரும் புனிதசத்தி புணர்ந்தே.

4. பேசரிய வராகந்தன் கன்மத்துக் கீடாப்
பெற்றதனி லாசைதனைப் பெருகுவிக்கு நியதி
தேசமிகு மரசர்தரு மாணி செய்தி
செய்தவரைத் துய்ப்பிக்குஞ் செய்கை போல
நேசமுறு தங்கன்ம நிச்சயித்து நிறுத்து
நிகழ்காலங் கழிகால மெதிர்கால மென்றே
யோசைதர வருங்கால மெல்லைபலம் புதுமை
யுறுவிக்கு மிறைசக்தி யுடனாய் நின்றே.

5. ஐவகையா லுறுபயன்க ணுகரவருங் கால
மதுபுருட தத்துவமென் றறைந்திடுவ ரறிந்தோர்
மெய்வகைய கலாசுத்தி தனினிதற்குஞ் சுத்தி
மேவியிடும் வகைதானும் விரும்பிய நூல் விளம்புஞ்
செய்வகையின் றொடர்ச்சியிங்குத் தோற்றுவிக்குங் குணத்தின்
சேர்வுபுரி பிரகிருதி திரிகுணமா மவைதா
மிவ்வகையிற் சாத்துவித ராசததா மதமா
இயம்புவர்க ளொன்றிரண்டு குணமேற்கை யுடைத்தே.

6. அலகில்குணம் பிரகாசம் லகுதைவியா விருதி
யடர்ச்சிமிகுஞ் கவுரவம நியமமிவையடைவே
நிலவியிடு மும்மூன்று முயிரொன்றிற் கலந்தே
நிற்குமிவை நிறைபுலனின் பயனெவையுங் கவருங்
குலவிவரு போகங்கொ ளிடமா மாறாக
குறைவிலொளி யாமலகில் புலனிடத்தி னொருமை

7. பலவகையு முடையதாய்ப் பரனருளாற் புத்தி
பஞ்சாசற் பாவகமும் பண்ணுவிக்குந் தானே
ஆனதனு வதனிலுறு மநிலனையு மியக்கி
யாங்கார நீங்காத வகந்தைக்கு வித்தா
யானலது பிறரொருவ ரெனையொப்பார் புவியி
னில்லையெனு மியல்பினதா யிந்திரியம்புலன்க
டானுகரு மளவிலதின் முந்தியுறு மிச்சை
தானுருவாய்ச் சங்கற்ப சதாகதியுந் தந்து
மானதமா னதுநிற்குஞ் சிந்தைநினை வையம்
வந்துதரு மனமொழிய வகுப்பொ ணாதே.

8. சொன்னமுறை செவிதுவக்கு நோக்கு நாக்குத்
துண்டமிவை யைந்திற்குந் தொகுவிடய மாக
மன்னியசத் தப்பரிச ரூபரச கந்த
மருவியிடு மிவையடைவே வாக்குப் பாதம்
பின்னர்வரு பாணிமிகு பாயுவினோ டுபத்தம்
பேசலுறு மைந்திற்கும் பிறங்கொலிகொள் வசன
முன்னரிய கமனதா னவிசர்க்கா நந்த
முற்றதொழில் பெற்றிடுவ துண்மை யாமே.

9. முந்தியவைம் பூதங்கள் வானாதி யாக
முயங்கியநற் செவிமெய்கண் ணாநாசிமுறையா
லிந்தவயி னின்றுவரு மைம்புலனு முயிர்தா
மெய்தும்வகைதம் முருவினிலங்கியிடும் புறத்து
வந்தடைய விடங்கொடுக்கு மிரந்தரமாய் வானம்
வாயுமிகச் சலித்தெவையுந் திரட்டுந்தீ வெம்மை
தந்தவைசுட் டொன்றுவிக்கு நீர்குளிர்ந்து பதமே
தருமுரத்துத் தரிக்குமிகு தரணி தானே.

10. தத்துவங்களின் வகையும் உயிர்கள் இறந்து பிறந்து வருமாறும்
------------------------------------------------------------------------
இந்நிரையி லைந்துசுத்த மேழ்சுத்தா சுத்த
மெண்மூன்று மசுத்தமெனு மிவைமுப்பத்தாறா
மன்னியதத் துவங்களிடை மயங்கிநெடுந் துயர்தா
மருவுமுரு நிலையழிய வரும்பொழுது வரியார்
பன்னகமண் டசங்கனவு படர்வகையே முன்னம்
பகரவருங் கலாதிநிலை பரவியசூக் குமமாந்
தன்னுருவி லணைந்துபய னருந்தியர னருளாற்
றரையினிடை வருமென்று சாற்று நூலே.

11. நால்வகைத் தோற்றம் முதலியன
------------------------------------------------
தோற்றியிடு மண்டசங்கள் சுவேதசங்கள் பாரிற்
றுதைந்துவரு முற்பீசஞ் சராயுசங்க ணான்கி
னூற்றமிகு தாபரங்கள் பத்தொன்பதென்று
மூர்வபதி னைந்தமரர் பதினொன்றொ டுலவா
மாற்றருநீ ருறைவனநற் பறவைகணாற் காலி
மன்னியிடும் பப்பத்து மானுடரொன் பதுமா
வேற்றியொரு தொகையதனி லியம்புவர்கள் யோனி
யெண்பத்து நான்குநூ றாயிரமென்றெடுத்தே.


---திருச்சிற்றம்பலம்---

 

bot About Us | Policy | Contact Us | ©2018 Saiva Siddhanta
Back to Top