lingam saivasiddhantam natarajar science siva

சிவப்பிரகாசம்

உமாபதி சிவாச்சாரியார்
விரும்பிய பதிகத்திற்கு செல்ல
பாடல் .

Go to Meikanda Saathiram
| 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 |
| 8 | 9 | 10 | 11 | 12 | 13 | 14 |

சிவப்பிரகாசம் 
- உரை: திருவிளங்கம்


<< முந்தயப் பதிகம் | முகப்பு | அடுத்தப் பதிகம் >>

              பாடல் எண்: 9    உண்மை அதிகாரம் - 1.ஆன்ம வியல்பு
பண் :

திருச்சிற்றம்பலம்

1. ஆன்ம வியல்பு
-------------------------
செறிந்திடு முடலுண் மன்னிச்
சேர்புலன் வாயில்பற்றி
யறிந்ததி லழுந்து மொன்று
மறிந்திடா தறியுந்தன்மை
பிறிந்தடை வஞ்ச வத்தை
பெருகிய மலத்தாற்பேணி
யுறுந்தனி யதீத முண்மை
யுயிர்க்கென வுணர்த்துமன்றே.

2. உருவுணர் விலாமை யானு
மோரொரு புலன்களாக
மருவிநின் றறித லானு
மனாதிகள் தம்மின் மன்னித்
தருபய னுகர்த லானு
முயிர்சட மாத லானும்
அருவினை யுடலு ளாவி
யறிவினா லறியு மன்றே.

3. அறிவெனில் வாயில் வேண்டா
வன்றெனி லவைதாமென்னை
யறிவவை யுதவு மென்னி
லசேதன மவைதாமெல்லாம்
அறிபவ னறியுந் தன்மை
யருளுவ னென்னி லான்மா
வறிவில தாகு மீச
னசேதனத் தளித்தி டானே.

4. அறிவினா லறிந்த யாவு
மசத்தாத லறிதி யென்றும்
அறிவினா லறியொ ணாதே
லாவதொன்றின்மை தொன்மை
யறி வுதா னொன்றை முந்தி
யதுவது வாகக் காணு
மறிவுகா ணசத்து மற்ற
தறிவினுக் கறியொணாதே.

5. எவ்வறி வசத்த றிந்த
தெனிலுயி ரறியா தீசன்
அவ்வறி வறியா னல்ல
தசேதன மறியா தாவி
செவ்விய கருவி கூடில்
தெரிவுறா தருளிற் சேரா
துவ்விரு வகைய தென்னி
லொளியிரு ளொருங்குறாவே.

6. சத்திது வென்ற சத்துத்
தானறி யாத சத்தைத்
சத்தறிந் தகலவேண்டா
வசத்திதுசத்தி தென்றோர்
சத்திரு ளொளிய லாக்கண்
டன்மைய தாம சத்தைச்
சத்துட னின்று நீக்குந்
தன்மையாற் சதசத்தாமே.

7. கண்ணொளி விளக்களித்துக்
காட்டிடுமென்னின் முன்னங்
கண்ணொளி யொன்று மின்றாம்
விளக்கொளி கலந்த வற்றைச்
கண்ணொளி யகல நின்றே
கண்டிடும் வேறு காணாக்
கண்ணொளி விளக்கின் சோதி
கலந்திடுங் கருத்தொன் றன்றே.

8. ஓரிடத் திருத்தன் மாயா
வுருநிறைந் திடுத லொன்றாம்
பேரிடத் துறைத றானே
பிறங்கறி வாகி நிற்றல்
சோர்வுடைச் சடநி கழ்த்த
லெனுமிவை சொல்லார் நல்லோ
ரோரிடத் துணரு முண்மை
யொளிர்தரு முபலம் போலும்.


---திருச்சிற்றம்பலம்---

 

bot About Us | Policy | Contact Us | ©2017 Saiva Siddhanta
Back to Top