lingam saivasiddhantam natarajar science siva

 

Headlines

Headline full story...

Headline full story...

Headline full story...

Headline full story...

Headline full story...

Headline full story...

குமரி கண்டம் - KUMARI KANDAM

முதல் முதலில் மனிதன் தோன்றிய (குரங்கிடம் இருந்து பிறிந்த[பிறந்த என்பது தவராகும்]) இடம் குமரிக்கண்டம் (இலெமூரியா) என்று இன்றய அறிஞர்கள் கூறுகின்றனர்.இதயையே நம் முன்னோர்கள் பல்லாயிரம் வருடங்களாக கூறிகின்றனர். கடல் கோளால் அழிந்து போன இக்குமரிக் கண்டத்திலிருந்தே தமிழர்கள் தோன்றினர் என்று தேவநேயப் பாவாணர் போன்ற தமிழ் அறிஞர்கள் கருதுகின்றனர்.

இலெமூர்களிடம் காணப்பட்ட சைவ வழி பாடு, பிணத்தை தாழியில் வைத்துப் புதைத்தல், தாய்த்தெய்வ வழிபாடு, தாய்வழி உரிமை போன்ற பழக்க வழக்கங்களின் எச்சங்கள் இன்றும் தமிழர்களிடம் காணப்படுவதால், தமிழர்கள் இலெமூரியாவில் இருந்தே தோன்றி இருக்க வேண்டும் என்று கா.அப்பாதுரையார் கருதுகின்றார். குமரிக் கண்டத்திலிருந்து அழிந்து போன பஃறுளி ஆற்றைப் பற்றி,

‘முந்நீர் விழவின் நெடியோன் நன்னீர்ப் பஃறுளி’ (புறம்.9)

என்னும் புறநானூற்றுப் பாடல் குறிப்பிடுகின்றது. கடல் கோளுக்குப் பிறகு எஞ்சியிருந்த பழம் பாண்டிய நாட்டுப் பகுதியின் இடையே ‘குமரி’ என்னும் நதி ஓடியது என்பதை,

‘தெனாஅ துருகெழு குமரி’ (புறம்.6)

என்னும் புறப்பாடல் எடுத்துக் கூறுகிறது. சிலப்பதிகாரத்திலும் (11:20-21) இச்செய்தி சுட்டப் படுவதைக் காணலாம்.

இயற்றப்பட்ட நூல்கள்

இங்கே தான் நம் முன்னோர்களான பாண்டியர்கள் ஆட்சி செய்தனர் தென்பாலி நாடு முதல் விந்தை இமயம் வரை குமரி கண்டம் பரவி இருந்தது.

தமிழை காக்க வேண்டும் என்பதற்காக எறத்தாழ 27 ஆயிரம் வருடத்திற்கு முன் தொண் மதுரையில் முதல் தமிழ் சங்கம் அமைத்தனர்.

கபடாபுரத்தில் இரண்டாம் தமிழ் சங்கம் அமைத்தனர்.

மதுரையில் மூண்றாம் தமிழ் சங்கம் அமைத்தனர்

முதல் இரண்டு சங்கங்களில் இயற்றப்பட்ட பெரும்பாலான நூல்கள் கடல்கோலாலும், ஆரியர்களின் சூழ்ச்சியாலும் அழிந்து போயின. இரண்டாம் சங்கத்து நூலான் தொல்காப்பியம் தான் நமக்கு கிடைத்துள்ள நூல்களில் பழமையானவை

 






bot About Us | Policy | Contact Us | ©2017 Saiva Siddhanta
Back to Top