lingam saivasiddhantam natarajar science siva

சனற்குமாரர்





அகச்சந்தான குரவர்கள் 
1. திருநந்திதேவர்
2. சனற்குமாரர்
3. சத்தியஞான தரிசினிகள்
4. பரஞ்சோதியார் 

புறச்சந்தான குரவர்கள் 
1. மெய்கண்டர்
2. அருள் நந்தி சிவாச்சாரியார்
3. மறைஞான சம்பந்தர்
4. உமாபதி சிவாச்சாரியார்

நந்தி அருள்பெற்ற நாதரை நாடிடின்
நந்திகள் நால்வர் சிவயோக மாமுனி
மன்று தொழுத பதஞ்சலி வியாக்ரமர்
என்றிவர் என்னோ டெண்மரு மாமே. திருமந்திரம் 129

(ப. இ.) நந்தியெம் பெருமான்பால் அவர்தம் திருவருட்டுணையால் பொருள்மறை கேட்டுப் போற்றி யொழுகும் மெய்கண்டார் நால்வராவர். [மெய்கண்டார் - மாணவர்]. 

அவர் சனகர், சனந்தனர், சனாதனர், சனற்குமாரர் என்ப. 

சிவயோக மாமுனிவர், 

பதஞ்சலியார் எனப்படும் பாம்புக்கால் முனிவர், 

வியாக்கிரபாதர் எனப்படும் புலிக்கால் முனிவர் ஆகிய மூவர். 

தன்னொடுங் கூட்டி எண்மர் என்றனர். நாதர் - செந்நெறிமுதல்வர்; சித்தாந்த ஆசிரியர்.

(அ. சி.) நந்திகள் நால்வர் - சனகர், சனந்தனர், சனாதனர், சனற்குமாரர். மன்று தொழுத பதஞ்சலி - தில்லையில் நடம் கண்ட பதஞ்சலி முனிவர்.

 




bot About Us | Policy | Contact Us | ©2017 Saiva Siddhanta
Back to Top