lingam saivasiddhantam natarajar science siva

தென்முகப்பரமன்



1.சனகர், 
2.சனாதனர், 
3.சனந்தனர், 
4.சனற்குமாரர்

ஆதியிலே குறிப்பிட்ட சனகர், சனா தனர், சனந்தனர், சனற்குமாரர் ஆகிய முனிவர்களுக்கு ஞானோபதேசம் வழங் கிய நாளே ஆடி மாதப் பெளர்ணமி நாளாகும். ஞானவடிவினராகக் கைலாச மலையில் கல்லால மரத்தின் நிழலிலே தென்திசை நோக்கி அமர்ந்திருந்த சிவபிரானிடம் மேற்படி முனிவர்கள் நால்வரும் தாம்பல வேதாகமங்களைக் கற்றும் தமக்கு அவற்றிலே மயக்க நிலை இருப்பதாகவும், அவற்றைப் போக்கியருள வேண்டும் என்றும் தொழுது நின்றனர்.

சிவபிரான் அம்முனிவர்களுக்குச் சரியை, கிரியை, யோகம், ஞானம் ஆகிய ஆகமப் பொருள் விளக்கத்தை விளக்கியதுடன் வலக்கையைச் சின் முத்திரையாகப் பிடித்து மார்பிலே வைத்து யோக சமாதியடைந்து ஞானத்தின் தத்துவத்தையும் விளக்கியருளினார்.

அத்துடன் சின் முத்திரை மூலம் பதி, பசு, பாசம் ஆகிய முப்பொருள்களின் இயல்பு நிலைகளையும் அவர்களுக்குத் தெளிவுபடுத்தினார். அறிவூட்டி அருள் செய்தார். தாயும், தந்தையுமாக மட்டுமல்ல குருவாகவும் இறைவன இருக்கின்றார் என்பது இதன் மூலம் விளக்கப்படுகின்றது. குரு, சிஷ்ய பாரம்பரியத்தின் தோற்ற மும் இதுவாகவே அமைந்துள்ளது.

தட்சிணாமூர்த்தி
 




bot About Us | Policy | Contact Us | ©2017 Saiva Siddhanta
Back to Top