lingam saivasiddhantam natarajar science siva

கங்காளர்


கங்காள மூர்த்தி, 25 சிவ திருமேனிகளுள் ஒன்றாக சைவர்களால் வணங்கப்படும் வடிவமாகவும். இவ்வடிவத்தினை கங்காளர் எனவும் வழங்குகின்றார்கள். கங்காளம் என்ற சொல்லுக்கு எலும்பு என்று பொருள்படும். மாவிலி எனும் அரக்கர் குல மன்னனை வாமன அவதாரம் எடுத்து திருமால் கொன்றார். அதன் பின் திருமால் கர்வம் கொண்டு மனிதர்களையும், தேவர்களையும், முனிவர்களையும் துன்புருத்த தொடங்கினார். அனைவரும் சிவபெருமானிடம் சென்று முறையிட்டனர். அவர்களின் துயர் தீர்க்க சிவபெருமான் வச்சிரதண்டம் எடுத்து வாமனன் மார்பில் அடித்து கொன்றார். அத்துடன் வாமனன் தோலை உரித்து ஆடையாக தரித்துக் கொண்டு, அவனுடைய முதுகெலும்பினை பிடுங்கி தண்டாக கையில் தரித்துக் கொண்டார். இத்திருக்கோலம் கங்காள மூர்த்தி என்று வழங்கப்படுகிறது.


கங்காளர் வடிவமும், பிச்சாண்டவர் வடிவமும் ஒரே மாதிரியான தோற்றம் போல தோன்றினாலும், அவை வெவ்வேறான வடிவங்களாகும்.

 




bot About Us | Policy | Contact Us | ©2017 Saiva Siddhanta
Back to Top