lingam saivasiddhantam natarajar science siva

சோமநாதபுரம் கோயில்

12 சோதி லிங்கத் தலங்கள்

1.சோமநாதபுரம் கோயில்

2.மல்லிகார்சுனர் கோயில்

3.மகாகாலேசுவரர் கோயில்

4.ஓங்காரேசுவரர் கோயில்

5.கேதார்நாத் கோயில்

6.பீமாசங்கர் கோயில்

7.காசி விசுவநாதர் கோயில்

8.திரிம்பகேசுவரர் கோயில்

9.வைத்தியநாதர் கோயில்

10.நாகேசுவரர் கோயில்

11.இராமேசுவரம் கோயில்

12.கிரிச்சுனேசுவரர் கோயில்

சந்திரன் தனது 27 மனைவியரில் உரோகிணியுடம் மட்டும் அளவு கடந்த அன்பு பாராட்டி மற்ற மனைவியர்களைப் புறக்கணித்தான். தனது 26 மகள்களின் துயரத்தைக் கண்டு சீற்றங்கொண்ட தந்தை தட்சப்பிரசாபதி, சந்திரனுக்கு காச நோயினால் தேய்ந்து போகக் கடவது என்று சாபமிட்டார். ஒவ்வொரு நாளும் தேய்ந்து வந்த சந்திரன் இறுதியில் சௌராட்டிரத்தின் கடற்கரையில் உள்ள பிரபாச தீர்தத்தில், சுயம்புவாக தோன்றிய சிவலிங்கத்தை சரணடைந்து நோய் நீங்கி சுகமடைந்தான். அதன்படி சந்திரன் தேய்ந்து தேய்ந்து வளரும் நிலை ஏற்பட்டது.

காந்த புராணத்தில் ப்ரபாச காண்டம் சோமநாதர் திருக்கோயிலின் சிவலிங்கம் சூரியனைப் போன்ற பிரகாசத்துடன் பூமிக்கடியில் அமைந்திருப்பதாகக் குறிப்பிடப்படுகின்றது.மகாபாரதத்திலும் சந்திரன் இத்தலத்தில் சிவபெருமானை வழிபட்டவரலாறு கூறப்படுகின்றது
துவாரகாபுரியை ஆண்ட கிருஷ்ணர் சோமநாதரை வணங்கி போற்றி “புருசோத்தமன்” என்ற உயர்ந்த பதவியை அடைந்தார். பாண்டவர்கள் இங்கு வந்து பிதுர் கடன்கள் நிறைவேற்றி சோமநாதரை வழிபட்டனர் என மகாபாரதம் கூறுகிறது



சோமநாதேசுவரர்
கடற்கரைத்தலம் (அரபிக் கடற்கரை)
சோமநாதம், குஜராத்
 




bot About Us | Policy | Contact Us | ©2017 Saiva Siddhanta
Back to Top